Monday, May 23, 2016

விஜயகாந்த் அக்னி நட்சத்திரமா?

1  குஷ்பு மைலாப்பூரில் போட்டி!.#,மயில் + ஆப்பு +…ஊர் = மயிலாப்பூர்.சகுனம் சரி இல்லையே? நேமாலஜி ட்ராஜடி==============2 உடலில் மண்ணெண்ணை ஊற்றுவது தற்கொலை முயற்சி அல்ல: டெல்லி கோர்ட்டு அதிரடி# தீப்பெட்டிகைல எடுக்கும் வரை வெயிட் பண்ணனுமா?==============3 தமிழகத்தில் மணற்கொள்ளையை ஊக்குவிப்பதே திமுக-காங்கிரஸ் கூட்டணி தான் - ஜோதிமணி# அரவக்குறிச்சி இல்லைனு சொன்னதும் பொங்கிட்டாரே?"==========4 பா.ஜ.க- த.மா.கா இடையே கூட்டணி பேச்சு நடைபெறுகிறது... தமிழிசை # வளைச்சி வளைச்சி பேச்சு நடத்துது பிஜேபி==========5 இன்று தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் ஜெ.,ஒரே மேடையில் 20 வேட்பாளர்கள் அறிமுகம் # ட்வெண்ட்டி ட்வெண்ட்டி மேட்ச் க்கு மேட்சுக்கு மேட்ச்

==================
6  ஓட்டுப்பதிவு காலை 6.00 மணி வரை கூட அ.தி.மு.க., வேட்பாளர் மாற்றப்படலாம்: பொன்.ராதா  கிண்டல் # மாற்றம் முன்னேற்றம்னு பாமக சொன்னதை இப்டி புரிஞ்சுக்கிட்டாங்க போல
===================

கடந்த தேர்தலில், ஓட்டுக்கு நோட்டு கொடுத்து, தி.மு.க.,வினர் வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுத்தனர். இந்த முறை பணம் கொடுத்து, பிற கட்சியினரை இழுத்து வருகின்றனர். -அன்புமணி # நோட்டா வுக்கு ஓட்டா  வந்து குவியனும்====================

ஒரு தொகுதி கூட தராமல் திமுக எங்களை ஏமாற்றி விட்டது-  நடிகர் கார்த்திக் # என்னை ஏமாற்றி விட்டதுன்னு சொல்லுங்க, எங்களை -ன்னா உங்க கூட 10 பேராவது இருக்கனும்

==================9    50 ஆண்டுகளில் தமிழகத்திற்கு செய்ய வேண்டியதை, ஐந்து ஆண்டுகளில் செய்து முடிப்பேன்.-அன்புமணி, # 5%   வாக்கு வங்கி இருக்குன்னு சிம்பாலிக்கா சொல்றாரு

===================
10  நான் ஏற்கனவே பிரபலம். என் FB பதிவுகளுக்கு வரும், கமென்ட்களே அதற்கு சாட்சி.-கி.வீரலட்சுமி # ஏம்மா மின்னல், நெட் தமிழன் ஓட்டுப்போட வரமாட்டான்

===================
11 தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, ம நகூஉருவாகியிருப்பதை, அன்புமணியால் சகித்துக் கொள்ள இயலவில்லை-திருமாவளவன் #சரி, நீங்களாவது அவரை ,அவர் சொல்றதை சகிச்சுக்கலாமில்ல?
===================
12 காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கே: -சீமான்.# எந்திரிங்க.விடிஞ்சிடுச்சு.சூரியன் உதிச்சிடுச்சு்===========13 நடிகை ப்ரியாமணி முஸ்தபா வை கல்யாணம் செய்து கொள்ள இருக்கிறார் - செய்தி # முஸ்தபா முஸ்தபா டோன்ட் ஒர்ரி முஸ்தபா மிக்சர் நம் தோழன் முஸ்தபா
============14 நான் நினைத்தால் அஜித் படம் வெளிவராது - விஷால் # தம்பி.நீங்க படிச்ச ஸ்கூல் ல அவரு வாத்தியாரு.மதகஜராஜா ரெடி ஆகி 4,வருசம்.ரிலீஸ்.பன்ற வழி பாருங்க============15 எளிதில் அணுகக்கூடியவர் ஜெயா என்று 52% பேர் வாக்களித்துள்ளார்கள் -தந்தி டி.வி # ஆமா.ஆயிரத்தில் ஒருவன் ல ஜெ எம் ஜி ஆர் க்கு அறிமுகம் ஆனப்போ, வெண்ணிற ஆடைல திரைக்கு அறிமுகம் ஆனப்போ================16 மக்கள் நல கூட்டணியில் சேர்ந்தார் வாசன் # வெரிகுட்.கேப்டன் 12% + மதிமுக அண்ட் கோ =4% +தமாகா =3% =19% ஆச்சு.புது வாக்காளர் 20% சேரனும்


==============


17 ராஜாஜி கெஞ்சி தடுத்தும் கேட்காமல் மதுக்கடைகளை திறந்த கருணாநிதி: ஜெ., தாக்கு ! # சரி,நீங்க நல்லவங்கதானே? ஏன் மதுக்கடையை மூடலை?

=============


18 தமிழகத்தில் படிப்படியாக பூரண மது விலக்கை கொண்டுவருவேன்- ஜெ # அதுக்குள்ளே தமிழன் லிட்டர் லிட்டரா குடிச்சு அழிஞ்சிடுவான்

==============

19 தேமுதிக சின்னத்தை முடக்க திமுக சதி திட்டம்.. நெருப்போடு விளையாடாதீர்கள்: வைகோ ஆவேசம் # விஜயகாந்த் அக்னி நட்சத்திரமா?


===============

20 திருச்செந்தூர் முருகனை தரிசித்து பிரச்சாரத்தைத் தொடங்கினார் சரத்குமார் # சமத்துவ மக்கள் கட்சி வளர்ச்சிக்கு அரோகரா அரோகரா

==============