Saturday, April 30, 2016

மக்கள் நலக்கூட்டணியில் கலைஞர் !! ஸ்டாலின் அதிர்ச்சி

மிஸ்! கூட்டத்துல வழி தவறிட்டீங்களா? இப்போ என்ன செய்யப்போறீங்க?

காணாமல் போன கவிதா நான் -னு FB ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டு 100 லைக்ஸ் அள்ளப்போறேன்


=================

2 தேர்தல் நடைபெறும் நாளில் ஐ டி கம்பெனி உட்பட எல்லாவற்றையும் மூடனுமாம்

கிளாமர் நடிகை = அப்போ அன்னைக்கு ஷூட்டிங்க் கிடையாதா?

============

3  டாக்டர்! ரீஃபைண்ட் ஆயில் தான் நல்லதுன்னு எதுக்கு பொய் சொன்னீங்க?

எனக்கு கமிசன் கிடைக்கும்னா பினாயில் கூட நல்லதும்பேன்


===============


4 இண்ட்டர்வ்யூ ல கேள்விக்கு தப்பு தப்பா பதில் சொல்றியே?

சார் நீங்க யார் ரசிகர்?

விஜய் ரசிகர்


அவரே மேடைல தப்பா தலைவர் பேரை மாத்தி சொல்லும்போது நான் சொன்னா என்ன?

===============

5 வைட்டமின் ஏ,டி அதிகம் உள்ள கேரட், கீரை, பால் போன்றவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொள்வது அவசியம்.


DR, அதுக்கு ஏடிஎம்ல பணம் இருக்கனும்ல?


===============6
  • டாக்டர்! வெட்கம் வரும்போது என் சம்சாரம் நகம் கடிக்கறா.

வாவ், இந்தக்காலப்பொண்ணுங்க வெட்கப்படறாங்களா? கொடுத்து வெச்சவர் சார் நீங்க

===================7 தலைவரே! தனியா நிப்பேன்னீங்க?


நான் தனியா தான் நிற்கறேன்.எனக்குப்பின்னால ஒரு கூட்டமே நிக்குது.நான் என்ன செய்ய?


============

8 தலைவரே.உங்களைப்பார்க்க கேப்டன் வந்திருக்கார்


அடடே.எதுக்கு?
உங்க கூட்டணி ல சேரலைனு சொல்லிட்டுப்போகவாம்


==========

9 ராம்தாஸ் திருமாவளவன் இருவரும் ஆபத்தான ஜாதிக்கட்சியினர்


தலைவரே! அவங்களை வளர்த்து விட்டதே நாமதானே?


==========


10 தலைவரே! நீங்க என்ன சொன்னீங்க?


பழம் நழுவி பாலில் விழும்னேன்
பால் இங்கே காத்திருக்கு.பழம் எங்கே?


===========

11 தலைவரே! ஊழலை உங்க கட்சியால்தான் ஒழிக்க முடியும்னு சொல்றாங்களே எப்டி?


திருடனாப்பார்த்து திருந்திட்டா திருட்டை ஒழிச்சிடலாம்


=============


12 சார், விமர்சனம் என்பது வேலை வெட்டியற்றவர்களின் வேலை.-ன்னு சிலர் சொல்றாங்களே?


தப்பு, விமர்சனம் பண்றதையே தொழிலா, வருமான வழியா வெச்சுட்டு இருக்கறவங்களுக்கு இது பொருந்தாது


==============13 தலைவரே! தண்ணிஅடிக்கும் பழக்கம் உள்ளவங்களை கட்சியை விட்டு போகச்சொன்னீங்களா?
ஆமா
அப்போ சிகரெட கம்பெனிவெச்சிருக்கறவங்க மட்டும் கட்சி நடத்தலாமா?


================

14 தலைவரே! நம்ம மதுபாலா கூட யாரும் புழங்கலை இப்போ  போதுமா?

 இது எதுக்கு?

 மது பழக்கம் உள்ளவங்க கட்சியை விட்டு விலகலாம்னீங்களே?

===============


15 தலைவரே! நான் கறிவேப்பிலை இல்லைன்னு ரோஷமா சொன்னீங்களே?

ஆமா, இப்போ நான் இரட்டை இலை ஹிஹி


================


16  தலைவரே! நீங்க மானஸ்தன் -னு பலர் வெளில பேசிக்கிட்டாங்களே?

 அதெல்லாம் புரளி நம்பாதீங்க. நான் மானஸ்தன் -கற படத்துல நடிச்சிருக்கேன் , அம்புட்டுதான்


===============

17  தலைவரே! சம்பந்தமே இல்லாம தேர்தல் பிரச்சாரத்துக்கு சின்னக்கவுண்டர் படம் போடனுமா? எதுக்கு?

அதுல ”பம்பரம்” விடும் சீன், குடை எல்லாம் வருது இல்ல


-=============


18

 அமைச்சரே ! நாட்டு மக்கள் நலமுடன் உள்ளனரா?

 கேப்டன் நலம்

 புரியவில்லை

 மதி கெட்ட மன்னா! மக்கள் நலம் = கேப்டன்


==================

19  எங்கள் தலைவரை மரியாதையாக ஜெயிக்க வைத்து விடுங்கள், இல்லையேல் அவர் வீடு வீடாக வந்து பளார் பளார் என அறைவார் என்பதை......


==================


20  மக்கள் நலக்கூட்டணியில் கலைஞர் இருக்காரா? என்ன உளர்றே?

MNK ல MK இருக்கில்ல?மு. கருணாநிதி = MK


===============

0 comments: