Saturday, May 07, 2016

மங்க்கி ஃபால்ஸ்ல குளிச்ட்டு தலை முழுகிட்டு வந்தா என்ன ஆகும்?

விஜயகாந்த் அணி என கூறுவதால் கௌரவம் குறைந்துவிடாது..திருமா # நமக்கு கவுரவம் முக்கியமா?
சீட்டு முக்கியமா?


=============

நான் அர்ச்சுனன் திருமாவளவன் பீமன்
விஜயகாந்த் தர்மன் - வைகோ # ஆமா, தர்ம அடி குடுப்பவர் தான் தர்மர், பொருத்தம் பிரமாதம்


============

3 வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபடுவோர் யாரும் தப்ப முடியாது -மோடி # சார், காமெடி பண்ணாதீங்க, அவர் தான் தப்பிச்ட்டாரே?


==================

4 எங்கள் கூட்டணியில் இருக்கும் 5 பேர் மீது யாராவது குற்றம் சொல்ல முடியுமா?- பிரேமலதா # விடுங்க விடுங்க , குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை


===========

5 பிரேமலதா - ஜெ எப்போப்பாரு மோடிக்கு கடிதம் எழுதிட்டே இருக்கார், அதோடு அவர் கடமை முடிஞ்சிடுது # ஆமா, டெலிவரி பண்ண போஸ்ட்மேன் இருக்காரு

==============

6

ஓட்டுக்கு பணம் வாங்க சொன்ன பிரேமலதா மீது வழக்குப்பதிவு # சிம்ப்பிள், ஓட்டுக்குப்பணம் வாங்காதீங்கன்னா குமாரசாமி விட்ருவார்===============


அதிமுக ஒரு வாக்குக்கு 3000 ரூ, திமுக 2000 ரூபா தர்றாங்க - பிரேமலதா # அப்போக்கூட நம்ம தானைத்தலைவர்தான் சிக்கனம் பார்த்தீங்களா?


==============

8 எந்தக்கட்சி பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் - பிரேமலதா # அதெப்பிடி ங்க? தமிழன் நன்றி மறக்க மாட்டானில்ல?

=============


9 அனைவரும் சுற்றுலா செல்லுங்கள் அதன் மூலம் பல்வேறு அனுபவங்களும், புத்துணர்வுகளும் வரும்-மோடி # உங்களுக்கு கவர்மெண்ட் செலவு செய்யுது, நாங்க சொந்தக்காசில்ல செலவு பண்ணனும்?=============
10 நமத்து போன பட்டாசு தான்: விஜயகாந்த் கூட்டணி: -நடிகை ஆர்த்தி # அதைப்பத்தி கவலைப்படாதீங்க, கோடை வெய்யிலுக்கு அதுவா சூடேறி பட்டாசாவெடிக்கும்
========================
11  பாவம் கருணாநிதி, ஆண்டியாகி விட்டார் - நடிகை ஆர்த்தி # அவருக்கு கோடிக்கணக்குல சொத்து இருக்கு, பாவம் நீங்க தான் இந்த வயசுலயே ஆண்ட்டி ஆகிட்டீங்க
=================
12  தமிழகத்தை, முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச் சென்று, முதலிடத்துக்கு அழைத்துச் சென்றார்,  ஜெ--கைத்தறி துறை அமைச்சர் கோகுல இந்திரா: #ஊழலில் , கொலைகளில்  நெ1  அப்டினு விளக்கமா சொல்லுங்க
=============


13 முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த்தை அறிவித்ததால், பா.ம.க.,வின் வெற்றி எளிதாகி விட்டது. - அன்புமணி # அங்கே அடிச்சா இங்கே எப்படிங்க வலிக்கும்? வழி பிறக்கும்? புரியாத ரமணா ஃபார்முலாவா இருக்கே?=============


14 அழகிரி எதிர்ப்பாளர்களுக்கு
மு.க  எச்சரிக்கை # அப்பா, பையன்  அடிச்சுக்குவாங்க, சேர்ந்துக்குவாங்க, தொண்டர்கள் எல்லாத்துக்கும் தயாரா இருக்கனும்


=============

15 170 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க., முடிவு!  -செய்தி # 1+7+0= 8 அஷ்டமத்துல சனி,கஷ்டம் தான் இனி


==========

16 தே.மு.தி.க.,வினர் 1,000 பேர் தி.மு.க.,வுக்கு 'தாவல்' -செய்தி # மங்க்கி ஃபால்ஸ்ல குளிச்ட்டு தலை முழுகிட்டு வந்தாங்க போல

===========

17 'ம.ந.கூ., தலைவர்களுக்கு எப்போதும் அடி விழலாம்'-இளங்கோவன்  # தேர்தல்ல நமக்கு மரண அடி விழப்போகுதாமே? அதைக்கவனிங்க முதல்ல


===============

18 விஜயகாந்த் அணிக்கு கடைசி இடம்:பொன் ராதாகிருஷ்ணன் சாபம் # அப்புறம் நம்ம பிஜேபி கட்சிக்கு என்னங்க மரியாதை? நம்ம இடத்தை மற்றவர்களுக்கு எப்டி விட முடியும்?

============

19 தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு, 16 சதவீத ஓட்டு வங்கி உள்ளது-இல.கணேசன் # அது உண்மையா இருந்தா  கலைஞர் உங்க கிட்டே இல்ல முதல்ல பேரம் பேசி இருப்பார்?

==============

20 முதல்வர் பதவிக்கு வர விஜயகாந்துக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது - பிரேமலதா # முக்கியமான தகுதி பொதுமக்கள் ஆதரவு  40% வேணும், நம்ம கிட்டே 4% தானே இருக்கு?


===================

0 comments: