Monday, May 30, 2016

தெறி வெற்றி?புலி வெற்றி

சார், பேசுன சம்பளத்துல பாதிதான் கொடுத்திருக்கீங்க? ஏன்?

பாதிக்கதை தானே கேட்டேன்.இதுக்குத்தான், எப்டி நம்ம ஐடியா?


==================


2  சார், பேபி கேரக்டர்  ஓவர் ஆக்டிங்னு சிலர் சொல்றாங்களே?

 ஹீரோவுக்கு ஆக்டிங்கே வர்லை.அவர் ஆக்டிங்கையும் சேர்த்து நடிக்க சொல்லிட்டோம்


==================சார், 60 அடி உயர பாலத்தில் இருந்து நீங்க டூப் போடாம குதிக்கனும்

இன்னும் சம்பளம் தர்லை, எப்போ தருவீங்க?

 அதைத்தர முடியாததாலதான் குதிக்கவே சொல்றோம்

================


அம்மா.சோறு போடு.


எதுக்கு?
பசிக்குது.
இப்பதான் படம் பாத்துட்டு வந்து புல் மீல்ஸ் சாப்ட்ட மாதிரி இருந்துதுன்னே?

============

5 படிப்படியா மது விலக்குன்னா என்ன?விளக்குங்க


முதல்ல குவாட்டர் கட்.பின் ஆப் கட்.லாஸ்ட்டா புல் கட்


==============

6 டியர்.நீ எனக்கு இன்னொரு அம்மா


யோவ்.அப்டின்னா ?
சித்தி மாதிரி.
சுத்தம்.உங்க அம்மாவே சித்தி தானே?===========

7 சார்.படத்துல உங்களுக்கு 2 ஜோடி.


ஐ ஜாலி.
ஆனா தொடக்கூடாது.1 ஜோடி அம்மா மாதிரி.இன்னொரு ஜோடி பெரியம்மா மாதிரி==============

8 கட்சியை இளைஞர்களிடம் ஒப்படைக்கிறேன்

 அதை நீங்களே வெச்சுக்குங்க தலைவரே!. சொத்தை  யார் கிட்டே ஒப்படைப்பீங்க ?


================


9  சார், ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம்னீங்களே காட்டுங்க 

 அதோ அது தியேட்டர் ஓனரோட சம்சாரம் இது ஆபரேட்டர் சம்சாரம், இது டிக்கெட் கிழிக்கறவரோட மச்சினி


==================


10 யுவர் ஆனர் , என் சின்ன வீட்டோட பேரு ஆர்த்தி. அவருக்கு மெயின்ட்டெனன்ஸ் செலவுக்கு 5000 ரூபா தந்தேன்

 தப்பில்லையே

ஆரத்தி எடுத்தார், பணம் தந்தார்னு பிடிச்ட்டாங்க

================


11  மிஸ்! என்னை  வீடு வரை ட்ராப் பண்ண முடியுமா?

 வித் பிளசர்

 கார்  வேணாம், ஸ்கூட்டிலயே டிராப் பண்ணுங்க. வசதி

அய்யோ. சந்தோசமான்னேன்


================

12

சார் , ஆல் டைம் ரெக்கார்டு அப்டினு பேப்பர்ல விளம்பரம் வருதே?

 எப்போ ரிலீஸ் பண்ணாலும் பாலிமர் சேனல் காரன் ஆல் டைம் ரெக்கார்டு பண்ணிடறாங்க


=================


13 சார் , படம் செம ஹிட் சார்

 ஓஹோ, எப்டி கண்டுபிடிச்சீங்க?

 பேப்பர்லயே போட்டுட்டாங்களே?

 யோவ், அது புரொடியூசர் பணம் கொடுத்து வர வைக்கும் விளம்பரம்

================


14  டாக்டர், தமனாவை எந்த ஆங்கிள் ல பார்த்தாலும் எனக்கு கிக் (போதை)வர்லை

 உங்க சம்சாரம் சைடு ஆங்கிள்ல உங்களை முறைக்குது. வீட்டுக்குப்போங்க .கிக் (உதை)நிச்சயம்


==================

15 சார், இந்தப்படம் 10  துப்பாக்கிக்கு சமம்னு சொன்னீங்க?

 தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. ஹீரோ 10 சீன்ல துப்பாக்கியோட வருவார்னேன்.


=============

16 ஷாரூக்கான் ன் FAN ஹிந்திப்படம் தமிழ் ல டப் ஆகி இருக்கா?

சாரி.அதுக்குப்பதிலா விஜய் தோன்றும் ரசிகன் பாருங்க.FAN க்கு தமிழ்ல ரசிகன் தானே?


==============

17 தலைவரே! நமக்கு தேர்தல்ல தெறி வெற்றி கிடைக்குமா?

போற போக்கைப்பார்த்தா புலி வெற்றி கூட கிடைக்காது போல


==============


18 சார்.நீங்க நடுநிலைனு சொன்னீங்க.ஆனா அதிமுக ஜெயிக்கும்னு சொல்றீங்களே?

அதிமுக வுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லலையே?தேர்தல் ரிசல்ட் கணிப்பு அது


===============

19 டாக்டர். லெமன் தயிர் கத்தாழை தக்காளி சேத்து அரைச்சு முகத்துக்கு போட்டுட்டு இருந்தா கறுப்புப்புள்ளி மறைஞ்சிடுமா?

முகமே மறைஞ்சிடும்


=============

20 தலைவரே.படிச்சவங்க எல்லாம் நம்ம பக்கம்.ஏன் கவலை?

சினிமா அரசியல் 2 லும் வெற்றியைத்தீர்மானிப்பது பாமர மக்களே


================

0 comments: