Tuesday, May 03, 2016

சுழற்சிமுறையில் 5 துணை முதல்வர்கள்

1  வைகோவின் வீழ்ச்சி கண்கூடாகத் தெரிகிறது -தமிழருவி மணியன்# வீழ்ச்சி கூட அழகாக தெரிவது அருவியில் மட்டும் தான் திரு தமிழ் அருவி

=============

2 தேமுதிக-மக்கள் நல கூட்டணி முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று-விஜயகாந்த். # ஓஹோ.ஒரு முடிவோட தான் எல்லாரையும் அலைக்கழிச்சீங்களா?


==========

3 தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதுதான் எங்கள் கொள்கை: பிரேமலதா விஜயகாந்த் # நீங்க நல்லவர் தான், அவரை நினைச்சாதான் பயமா இருக்குங்கோ

================

4 இலை உதிர்ந்து.. சூரியன் உதிக்கும்... கை துணை நிற்கும் - குஷ்பு # உங்களுக்கு புதுசா ஒரு வில்லன் முளைச்சிருக்காரே? கேப்டன்


=============

5 இனி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசமாட்டார் விஜயகாந்த்!' # பாட்டுப்பாடி வாக்கு சேகரிப்பாரோ?புதுப்பாடகன், பாட்டுக்கு ஒரு தலைவன்================
6தேர்தலில் பலமுனைப் போட்டி தமிழகத்துக்கு வளர்ச்சியைக் கொடுக்கும்: பிரேமலதா # வழக்கமா ஜெயிப்பவர்களுக்கு தளர்ச்சியைத்தரும்?================

முதல்வர் பதவி வேண்டாம் என்று சொல்ல நான் துறவி அல்ல: வைகோ  # முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க நான் ஏமாளி அல்ல - வி காந்த் (கற்பனை)================


8  

விஜயகாந்திடம் திமுக பேரம் பேசியதாக வெளியான செய்தி உண்மையே: வைகோ # அப்போ பேரம் படியலைன்னுதான் இங்க வந்தாரா?=================


பாஜக இல்லாத கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்காது: பொன்.ராதா # கோடை வெய்யில் ஜாஸ்தி ஆகிடுச்சு, எல்லாரும் இளநீர் நுங்கு சாப்பிடுவது நல்லது==================


10 

சிறுவயதிலிருந்தே இந்தியாவை தான் வெறுத்தேன் -தீவிரவாதி டேவிட் ஹெட்லி #  டே & நைட்  ஹேட் (HATE) லீ ======================


11  ம.ந.கூ. தலைவர்கள் எல்லோரும் காலேஜ் ரூம்மேட் மாதிரி மாறிட்டோம் - வைகோ # ஒரே ( இரட்டை) வாழை இலைல தான் எல்லாரும் சாப்பிடுவீங்க போல

==================
12விஜயகாந்துக்கு பேரம் என்றாலே, என்ன அர்த்தம் என்று தெரியாது-பிரேமலதா # அதுக்குக்கூட அர்த்தம் தெரியலைன்னா அவர் என்ன அரசியல்வாதி?


================

13 அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, ம நக் கூ செயல்படுவதாக இருந்தால், விஜயகாந்த் எப்படி எங்களுடன் சேருவார்- திருமாவளவன் # ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் இரண்டாகப்பிரிந்தால் அதிமுகவுக்கு லாபம் தானே?=================14  எனக்கு 68 வயதாகிறது இனி காந்திய வழியில் நடக்க போகிறேன் - ப.சிதம்பரம் # அப்போ இத்தனை நாளா கோட்சே வழிலயா நடந்தீங்க?
===================15 எனக்கு , திமுக.மீது வெறுப்பு கிடையாது - குஷ்பூ # திமுக வுக்கு முதல்ல (குஷ்)பூ கை விட்டுப்போச்சு , கா விட்டாங்க, இப்போ பழம் கைநழுவிப்போச்சு

=================
16 மக்கள் நலக் கூட்டணிக்கு ஒதுக்கிய, 110 தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதில், 4 கட்சிகளுக்கு இடையே பிரச்னை #    பிரிக்கும்போதே 112 வாங்கி இருந்தா 112 /4 = 28   ஈசியா பிரிச்சிருக்கலாம்=================

17 தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையே நடக்கவில்லை பின்னர் எப்படி பேரம்-ஸ்டாலின் # பழம் கனிந்து கொண்டிருக்கிறது னு தலைவர் சொன்னதுக்கு அர்த்தம் என்ன?


========

18 கேப்டன் விஜயகாந்த் அணி -வைகோ #,வந்த நாள் முதல் இந்த நாள் வரை நம் நிலைமை மாறவில்லை.தலைமை ஏற்க.வழியுமில்லை

==============


19 வைகோவுக்கு திமுக அனுப்பிய நோட்டீசை திரும்பப் பெற வேண்டும்: பிரேமலதா # இல்லா.விட்டால் கேப்டன் உங்களை.எல்லாம் திட்டுவார் பரவால்லியா?

==============


20 சுழற்சிமுறையில் 5 துணை முதல்வர்கள்: தேமுதிகவின் 4 அதிரடி அஸ்திரங்கள்! # பிரேமலதா ,சுதீஷ் சண்முகப்பாண்டி, பிரபாகரன் , வை கோ


==============

0 comments: