Tuesday, May 17, 2016

பிடி உஷா தான் அடுத்த சி எம்மா?

1

சார், இவர் நல்லவரா? கெட்டவரா?ன்னு தெரியாம எப்டி நம்பி ஓட்டுப்போட?

 கொள்ளை அடிப்பாங்கன்னு  தெரிஞ்சும் 2 கட்சிக்கு மாறி மாறி ஓட்டு போடலையா?


================

2  ஜட்ஜ் = பேங்க்ல லோன் மோசடி வழக்கில் சிக்கிய நீங்க இப்போ எங்கே இருக்கீங்க?

கைதி - நாட் ரீச்சபிள் ஏரியாவில் 

===============


சித்ரா =இந்த மீனுக்கு எல்லாம் யார் பேர் வைக்கிறாங்க.?

ருத்ரா = இது தெரியாதா? மீனம்மாவும் , மீனப்பாவும்


===========

4 டியர், சில்க் சேலை கட்டினா எனக்கு அழகா இருக்குமா?

 அட லூசு, சில்க் சேலை கட்டலைன்னாத்தான் சில்க் ஸ்மிதாக்கு அழகு.நீ கட்டினா உனக்கு அழகு


==================


5 நடிகர் சங்க கடனை நீங்க தான் சார் கட்டனும்

ஏன்?

 நீங்க தான் கடனுக்கு ( ஏனோதானோன்னு)நடிச்சீங்களாம்


==================

6  நேத்து எனக்கு, இன்னைக்கு என் பையனுக்கு, நாளை என் பேரனுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகுது
அப்போ உங்களுதுதான் குற்றப்பரம்பரைன்னு சொல்லுங்க


==================

சார், 5 வருசமா வருமான வரி கட்டலை, எப்போதான் கட்டுவீங்க?

எப்போ என் படம் லாபகரமா ஓடுதோ அப்போ

சுத்தம்


=============

8 சார் , பொண்ணுங்க அவங்களுக்குள்ளே மச்சி-ன்னு கூப்பிட்டுக்கறது நல்லாவா இருக்கு?

ஆயில்டு ஃபேஸா இருப்பதால் பஜ்ஜின்னு வேணா கூப்டுக்கலாம்


====================


 நாயுடு ஹால் எம் டி = சார், நம்ம கம்பெனி ”பிரா”டக்ட்ஸ்க்கு ”பிரா”ண்ட் அம்பாசிடரா யாரை போடலாம்?

 ப்ரியங்கா சோ”ப்ரா”===================


10 சார் , உங்க ட்வீட்கள் எதுலயும் பொருள் இல்லைன்னு சிலர் சொல்றாங்களே?

 ஆமா, நான் ரொம்ப ஏழை, என் கிட்டேயே பொருள் இல்லாதப்போ என் படைப்பில் மட்டும் எப்படி பொருள் இருக்கும்?


=======================


11 டியர் , என் கையெழுத்து நல்லாலை, நான் நல்ல எழுத்தாளினி ஆக முடியுமா?

 ஏன் முடியாது?நீ ஃபேஸ்புக்ல டைப் தானே அடிக்கறே? ஒரு பயலுக்கும் உண்மை தெரியாது


==================

12 தமிழக கைத்தறி துறை அமைச்சர் கோகுல இந்திரா: விஜய் ரசிகையா?

இல்லை, ஏன்?

 அப்டி இருந்தா அவரை கைத்”தெறி” அமைச்சர்னு கலாய்க்கலாம்னுதான்


======================

13 டியர், லேப்டாப்பை க்ளீன் பண்ணி வைன்னு நீங்கதானே சொன்னீங்க?

 லூசு, அதுக்காக வாஷிங்க் மிஷின்ல அலசறதா?


======================

14 தலைவரே!25 தான் தருவேன்னீங்க.41 தந்துட்டீங்களே?


எப்படியும் தோக்கப்போறோம்
யார் நின்னா என்ன?


=============

15 நடிகர் சங்க கடனை மக்கள்ட்ட.வசூல் பண்ணி கட்டப்போறோம்.


அப்போ மக்களோட கடனை நடிகர்கள் கிட்டே.வசூல் பண்ணிக்கலாமா?1008 கடன் இருக்கு

================

16 தலைவரே! கட்சியை வளர்த்தறதா சொன்னீங்க, உங்க கட்சி சின்னத்துல போட்டி இடாம வேற கட்சி சின்னத்துல போட்டி இடறீங்க?

 என் கட்சி தானா வளரும்


==============17 
ஜட்ஜ் = சொத்துக்குவிப்பு வழக்கில் 100 கோடி அபராதம்

 கைதி = ரொம்ப நன்றிங்க. கேனத்தனமான தீர்ப்பு. 20 வருசத்துக்கு வட்டியே பல கோடி வரும். 


================


18  
 தலைவரே! நாம எப்டி? வேட்பாளரை ஜாதி பார்க்காமயா தேர்ந்தெடுப்போம்?

ஜாதி , வசதி எல்லாம் பார்த்துத்தான் தேர்ந்தெடுப்போம், ஆனா எதிரியை எதுனா குறை சொல்லனுமில்ல?


==================

19  
தலைவரே!கூட்டணியில் இனிவேறு கட்சிகளுக்கு இடமில்லைனு சொல்லீட்டீங்களே ஏன்?

யோவ். யாராவது இண்டு இடுக்குல இருக்கீங்களா? சீட் வேணுமா?ன்னு அர்த்தம், அறை கூவல்


==================

20
பத்து கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓடிய என்னை முதல்வராக்குங்கள்


தலைவரே! அப்டிப்பார்த்தா பிடி உஷா, அஸ்வினி இவங்கதான் முதல்ல சி எம் ஆகனும்


========================

0 comments: