Sunday, May 29, 2016

நீங்க வந்தா மக்களுக்கு மொட்டை, அவங்க வந்தா பட்டை

தி நகர் தொகுதியில் பாஜகவுக்கு மக்கள் அதிகமாக கூடுகிறார்கள் - எச்.ராஜா # அங்க எதுனா பிளாட்பார்ம் கடை போட்டிருக்கீங்களா?

===============

2 விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கம்.

# ஊரை விட்டு ஓடிப்போன ஊர்மிளா வோட ரேசன் கார்டை ஒளிச்சு வெச்ட்டா அவ மேரேஜ் நின்னுடுமா?============


3
  • கச்சத்தீவை மீட்போம்: ஜெ # இதைத்தான் அவரும் சொன்னாரு. ஏன் 2 பேரும் ஏற்கனவே ஆட்சில இருந்தப்போ செய்யல?அதுக்கு மட்டும் பதில் வராது

=====================


விருப்பம்போல பேசுவேன்; செயல்படுவேன்: தேர்தல் 

ஆணையத்துக்கு மம்தா பதிலடி # ரொம்ப மமதைதா(ன்), 

விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவரே நல்ல தலைவர்================


மத்திய பிரதேசத்தில் ஒரு கிலோ வெங்காயம் 30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது # இப்படி இருந்தா விவசாயம் எப்படி தழைக்கும்? விவசாயிகள் வாழ்வு எப்படி பிழைக்கும்?==============

சாத்தான் வேதம் ஓதுவதா? கருணாநிதி மீது ஜெ., கடும் தாக்கு #  நல்ல விஷயத்தை யார் சொன்னா என்னங்க?


============

ஜல்லிக்கட்டை நடத்தினால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என ஜோசியர்கள் சொன்னதால்தான் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - ராமராஜன் # தேசிய அரசியலுக்குப்போவார்னு பார்த்தா ஜோசிய அரசியலுக்கு ஜெ போய்ட்டாரே?

==============

கற்பனைக்கு எட்டாததை செய்து முடிப்பேன்: ஜெ., சூளுரை  # விலைவாசி  சாமான்யர்கள் எட்டாத உயரத்துக்கு போய்டும்னு சொல்றாரா?


===============================

10 கவுரவ கொலைகளை ஒழிக்க தனி பிரிவு 3 மாதங்களில் ஏற்படுத்த ஐகோர்ட் உத்தரவு # ஜாதிக்கட்சித்தலைவர்களுக்கு கடிவாளம் போடனும் முதல்ல

===================

11 


=================

12  5 ஆண்டுகளில் அ.தி.மு.க., பட்டை நாமம்மதுரையில் ஸ்டாலின் ஆவேசம் # நீங்க வந்தா மக்களுக்கு மொட்டை, அவங்க வந்தா பட்டை, மொத்தத்தில் மக்களுக்கு கிழிஞ்சிடுது சட்டை


===============


13 நாங்கள் ஆறு பேரும், 
அப்பழுக்கற்ற தலைவர்களாக இருக்கிறோம்.  - ஜி கே வாசன் # ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு


==================


14  திமுக இந்த தேர்தலிலும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்._அன்புமணி
# 1 அதிமுக 2 ம ந கூ 3,திமுக 4 பாமக .சரிதானுங்களே?

============

15 தலைவர் கலைஞரிடம் என்ன இல்லை ?-ஸ்டாலின் # நல்ல மனம் இல்லை.மகனுக்கு வழி விடுவோம் என்ற எண்ணம் இல்லை.சம்பாதித்தது போதும் என்ற திருப்தி இல்லை

===========

16 அன்பா கேட்டாலும், அடிச்சுக் கேட்டாலும் உண்மையைத்தான் சொல்வேன்: விகாந்த் # அடிக்கறதுலயே குறியா இருக்கீங்க.மேடைப்பேச்சில் தெறி.யா இருக்கீங்ளா?


===============

17 விஜயகாந்த் திறமை குறித்து எனக்குத் தெரியும் CMஆகும் தகுதி அவருக்கு இல்லை -ராதிகா # பிரேமலதா.வுக்கு சீனியர் நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்


============

18 ஜெயலலிதாவிடம் முரட்டு பணம் இருக்கிறது: விஜயகாந்த் # அடக்கி வாசிங்க.ஜனங்களுக்கு சந்தேகம் வந்துடப்போகுது


==============


19 அனைத்து மக்களும் என் மக்கள் : அருப்புக்கோட்டையில் ஜெ. பிரச்சாரம் # தேர்தல் நேரத்தில் மட்டுமா?எப்பவுமா?


==============

20 ஊழல் செய்து இரண்டு முறை சிறைக்கு சென்ற ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா தான் - பிரகாஷ் ஜவடேகர். சாதனைக்கு வாழ்த்து=================

0 comments: