Sunday, May 08, 2016

சார் எந்தக்கட்சி ஜெயிக்கும்?

பிரேமலதா -மதுரை மாநகராட்சில எத்தனை வார்டுன்னு யாருக்காவது தெரியுமா?

தெரியாது மேடம்

இருங்க, எழுதி வெச்ச பேப்பர் பார்த்து நானே சொல்றேன்

=============


2 யோவ், உனக்குத்தான் ஆல்ரெடி லவ்வர் இருக்கே? எதுக்கு என் கிட்டே 143 சொல்றே?

 மிஸ்! நீங்கதானே “இதலாம் ரொம்ப பழசு புதுசா எதுனா ட்ரை பண்ணுங்க”னு சொன்னீங்க?

=========================3 சயின்ஸ் மிஸ் சைலஜா 32 =  காகம்  கரையும்


 மிஸ்! காதலி உள்ளவன் கைக்காசும் கரையும்


================

உங்க பையனுக்கு  சூரிய புத்தி நடக்குது

 ஜோசியரே! நல்லா பார்த்து  சொல்லுங்க,  என் பையனுக்குதான் புத்தியே கிடையாதே?


===============
டியர், எனக்கு நீச்சலுக்கு ஸ்பெல்லிங்க் கூட தெரியாது.

சமையலும் தெரியாது, நீச்சலும் தெரியாது. உனக்கு என்ன தான் தெரியுமோ தெரியலை===============
நான் படத்துல சின்ன ரோல் பண்றேன்நீங்க எப்பவும் தமாஷ் பார்ட்டிங்ணா.நீங்க எப்டி சின்ன ரோல் செய்ய முடியும்?உங்க ரேஞ்சுக்கு..,


==============


7 சார், ஐ படத்துல அர்ப்பணிப்போட நடிச்ச விக்ரம்க்கு   ஏன் தேசிய விருது தர்லை?
மதுவிலக்குக்கு ஆதரவாதான்

 எப்டி?

 விக்”ரம்” க்கு எப்டி விருது தர?


===============

சார்.சொக்கன் சாரோட.சந்தி முக்கியம் படைப்பு பற்றி உங்க கருத்து என்ன?


வெயிட்.எனக்கு பந்தி முக்கியம்.சாப்டுட்டு.வந்து கருத்து சொல்றேன்


============

9 மிஸ்!,சாக்ஸ் நீளமா வேணுமா இன்னும்?இதுவே 2 ஜான் இருக்கே?


எனக்கு 5 ஜான் வேணும்.
ஓஹோ.சீப் ரேட்ல லெக்கின்ஸ் வாங்க பிளானிங்கா?


=============

10 மிஸ் லதா.நீங்க அஜித் ரசிகைதானே?


யா.எப்டி தெரியும்?
உங்க பேர்லயே தல இருக்கே?
எப்டி?
LA"THA"


==============

11 தமிழ்நாட்ல எத்தனை கட்சி இருக்குனு எப்டி கண்டுபிடிப்பீங்க?


எதுக்கு ரிஸ்க்? நம்ம தானைத்தலைவர் எப்டியும் எல்லார் கூடவும் கூட்டணி வெச்சுக்குவார்


============

12 பேங்க்கில்


சார்.உங்க செக் ல சிக்னேச்சர் வித்தியாசமா இருக்கு.பாஸ் பண்ண முடியாது.
சார்.வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆதரவு குடுங்க சார்============


13 பேங்க் ல லோன் வாங்கி மோசடி செஞ்சா நாடு கடத்திடுவோம்.


நாடு கடத்திட்டா எப்டி வசூல் பண்ணுவீங்க?===========

14 சார்.இந்தியாவில் இருக்கும் தலைவர்கள் பேர் எல்லாம் சொல்லுங்க.


எதுக்கு?தெரியாதே?அப்புறம் எதை வெச்சு இந்தியாவின் ஒப்பற்ற தலைவர் உங்க தலைவர்தான்னு மேடைல சொன்னீங்க?

=============

15 தமிழ் நாட்டின் அரசியல் கொலம்பஸ் நம்ம தானைத்தலைவர் தான்

 எப்டி சொல்றே?

 சந்து பொந்து இண்டு இடுக்குல இருக்கும் ஜாதிக்கட்சிகளை எல்லாம் கண்டுபிடிச்சு தேடிப்போய் சீட் தர்றாரே?


==============


16 சட்டசபைக்கு சரக்கு அடிச்ட்டு மப்புல போனீங்களா?

‘மில்லி”யன் டாலர் கொஸ்டீன் இது


====================


17 சார் எந்தக்கட்சி ஜெயிக்கும்?

 எது ஜெயிச்சா எனக்கென்னாயா?

யூகம்?

ம், அதிமுக

அப்போ ஜெயிக்கலைன்னா மொட்டை போட்டுக்கறீங்களா?


=================

18  திறமை இருக்கும் இடத்தில்,
திமிரு இருப்பது தவறில்லை.

எப்டி?

திறமை சத்யராஜ்,ரவீந்தர், ரேவதி நடிச்ச படம், திமிரு விஷால் படம்.ஒண்ணா இருந்தா என்ன?


================

19 என் ஃபிரண்ட்ஸ் கூட பலர் போலீஸ் டிபார்ட்மெண்ட் ல சைபர் க்ரைம் ல ஆஃபீசரா இருக்காங்கதான், ஆனா வெளீல சொல்லிக்கறதில்ல


அதான் இப்போ சொல்லிட்டீயே?
==============
20 தமிழக அரசுக்கு லெட்டர் போட்டா TASMAC MD-கிட்ட இருந்து பதில் வருது!


அப்போ லெட்டரை மாத்தி அனுப்புங்க. பதில் கரெக்டா வருமோ என்னவோ?=================

0 comments: