Monday, May 02, 2016

ஒரு ஓட்டோட ரேட் 87,000? அடேங்கப்பா

1  விஜயகாந்துடனான கூட்டணி சந்தர்ப்பவாத அரசியல்: அன்புமணி விமர்சனம் # நாம 2011 ல, 2006 ல  கூட்டணி வெச்சோமே மாறி மாறி அதுக்குப்பேர் என்னாங்கோ?நல்லவரே?அசந்தர்ப்பவாதக்கூட்டணியா?


===============நீங்கள் 'கிங்' என்றார்கள்; உடனே ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டேன்: விஜயகாந்த் # கூட்டணியை  நோ பார்க்”கிங்” ஏரியாவில் விட்டுட்டு வராம இருந்தா சரி
===============

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால் திமுகவுக்கு எந்த பாதகமும் இல்லை: ஸ்டாலின் #  சாதகம் இல்லை என்பதுதானே  நம் ஜாதகத்தில் பாதகம்?===============


‘குருவை மிஞ்சிய சிஷ்யன்!’ - முத்தரசனின் வார்த்தைகளில் நெகிழ்ந்த வைகோ # பழம் பெரும் கலைஞரை பழம் பெறும் கலைஞர் ஆக விடாமல் பழத்தை தட்டிப்பறித்த  சிஷ்யர்


==============

தமிழகத்தில் தற்போது அரசியல் களம் தெளிவாகவில்லை.-

பழ.நெடுமாறன் # நீங்க  தெளிவாக  இல்லைனு சொல்லுங்க==============


6

கலாபவன் மணியின் மரணத்துக்கு கல்லீரல் பாதிப்பே காரணம்: பிரேதப் பரிசோதனை அறிக்கை # அப்போ பூச்சிக்கொல்லி மருந்து சும்மா டேஸ்ட் பார்த்தாரா?


=================


 விஜய் காந்த் ஒரு ஜீரோ - தமிழிசை # உங்க கூட்டணி ல சேர்ந்தா  ஹீரோ?இல்லைன்னா  ஜீரோ, கோபாலபுரம் தான் உங்க சொந்த ஊரோ?


==============


நகைக் கடைக்காரர்களின் கோரிக்கை நியாயமானது.-அரவிந்த் கெஜ்ரிவால் # இப்படி சொன்னதுக்கு அவங்க உங்களுக்கு  புகழ் ஆரம்  சூட்டுவாங்களா?


=============

  60%-க்கும் மேற்பட்டோர் நடுநிலையான வாக்காளர்கள்  அவர்களே இந்த முறை மாற்றத்தினை ஏற்படுத்த போகிறார்கள்-பொன்.ராதாகிருஷ்ணன் # நீங்க பாஜக வா? பா ம க வா?

============

10  2030ல் இந்தியாவில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் # இதுதான்  சாக்குன்னு இந்தியக்குடிமகன் சரக்கை ராவா அடிப்பான்


=================
11 சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஜெ வுடன் திடீர் சந்திப்பு. # போன மச்சான் திரும்பி வந்தார்் பழையபடி துதி பாட வந்தார்==============12 அ.தி.மு.க., தி.மு.க., என்ற 2ஊழல் கட்சிகள் ஒழிய வேண்டும்: வைகோ ஆவேசம் # சிவாஜிகணேசன் போல் ஓவர் ஆக்டிங் வேணாம்.கமல் போல் கச்சிதமா.நடிக்கனும்
=============
13 விவசாயிகள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம் -மோடி # அரசியல்வாதி ஊழலை மட்டுமே நம்பி இருக்காம ஊர் சுத்திப்பார்த்துக்குங்கனு சொல்வாரோ
============14 சுயசரிதை எழுதுகிறார் ஐஸ்வர்யா தனுஷ்! எதையும் மறைக்கப் போவதில்லை என அறிவிப்பு # தனுசு ராசிக்கு இந்த வாரம் அதிர்ச்சி வாரமாம்


===========

15 பாஜக ஒரு வலுவான கூட்டணியாக உருவெடுத்துள்ளது...கூட்டணி பட்டியலை வெளியிட தேவையில்லை -தமிழிசை # ஜிம் மாஸ்டர்கள் தான் வேட்பாளர்களா?


=============

16 ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெ தப்பவே முடியாது: கருணாநிதி # இந்த டைம் உங்க 2 பேருக்கும் தண்டனை உண்டுன்னு தோணுது

============

17 விஜயகாந்த் பூஜ்ஜியம் என்றால் அவரை சந்திக்க பாஜகவினர் தவம் கிடந்தது ஏன்?.-வைகோ! # ராஜ்யம் அமைக்கலாம்னுதான்


============


18 பாமகவுக்கு மீண்டும் கிடைத்தது "மாம்பழம்" சின்னம் # இவருக்காவது பழம் நழுவி விழாம கைல கிடைச்சுதே?


============

19 பாஜக கூட்டணி குறித்து நாளைக்குள் முடிவு: இல.கணேசன் # தாமரை இலைல தான் தண்ணீர் ஒட்டாதுன்னா தாமரை சின்னத்திலும் யாரும் ஒட்டலையே?


==============

20 உங்கள் வாக்கின் மதிப்பு ரூ. 87,000... அதை 500, 1000க்கு விற்காதீர்..: ‘கலாம் கட்சி’ பொன்ராஜ் # அப்போ ஒரு ஓட்டோட ரேட் 87,000? அடேங்கப்பா


============

0 comments: