Wednesday, May 18, 2016

எந்திரி ன்னா இல்ல.மந்திரி ன்னா இருக்கு

1தமிழகத்தில் ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால், ஆட்சி அமைக்க ஸ்டாலின் மீண்டும் விஜயகாந்திடம் கையேந்த வேண்டி இருக்கும். பிரேம லதா # அப்போ ம நகூ ஜெயிக்கும்னு உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?

====================


2 தி.மு.க., ஆட்சியில் அதிக முதலீடுகள் வந்ததாக கருணாநிதி கூறுவது பொய்; அ.தி.மு.க., அரசை குறை கூறுவதே கருணாநிதி யின் வேலை.- தங்கமணி: # அவர் பர்சனலா சேர்த்த முதலீட்டை சொல்லி இருப்பாரு

==================

ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை-அன்புமணி # சம்பளம் வாங்கறவங்க எஜமான் விசுவாசத்தைக்காட்டத்தானே செய்வாங்க?

==================


 1.87 லட்சம் குடும்பங்கள், அரிசியை உலையில் போடும்போது, ஜெ வின் முகத்தைத் தான் அதில் பார்க்கின்றனர்.-நாஞ்சில் சம்பத் # அப்போ மீதி குடும்பம்? கலைஞர் முகத்தைப்பார்க்கறாங்களா?  இரட்டை இலைக்கு உலை வைக்க இவரே போதும் போல

===============

5  
மக்கள் நல கூட்டணி அலை அடிக்கிறது - வைகோ # தேர்தல் முடிவதற்குள் கேப்டன் கை தான் கூட்டணிக்கட்சித்தலைவர்களை அடிக்கப்போகுது


============


காங்., தன் இறுதிக் காலத்தில் இருக்கக் கூடிய கட்சி.-தமிழக பா.ஜ., துணை தலைவர் வானதி சீனிவாசன்  # அவங்க கடைசி ஸ்டாப்பிங், நாம அதுக்கு முந்தைய ஸ்டாப்பிங்


================


கருணாநிதிக்கு வைகோ துரோகம் செய்துவிட்டார்! - ஐ.லியோனி # கலைஞர் வை கோவுக்கு அன்னைக்கு துரோகம் செஞ்சதுக்கு இப்போ பழி தீர்க்கறார்


===============

8 ஓட்டு வங்கி ஐந்தாகச் சிதறினாலும், பா.ம.க., ஓட்டு, 1 சதவீதம் கூட சிதறாது.-ஜி.கே.மணி # நமக்கான 5 % சிதறாம வரும், கவலைப்படாதீங்க அப்டிங்கறார்


=========================
9   

பாரத மாதா கீ ஜே முழக்கமிடாதவர் தலைகளை வெட்டி இருந்திருப்பேன்: பாபா ராம்தேவ் ஆவேசம் #  10 வருசமா நம்ம தலைமுடியை வெட்டவே நமக்கு நேரம் இல்லை, தலையை எப்படி வெட்ட?==================


10 அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கூறி, தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுக சார்பில் ஆலந்தூரில் போட்டி. #பதவின்னா ஆலாப்பறக்கறாங்கப்பா


===================


11 மதிமுக பத்து மடங்கு வளர்ந்திருக்கிறது - வை.கோ.# 4% வாக்கு இருந்தது, இப்போ 40% வாக்கு வங்கி இருக்குன்னா எதுக்கு கேப்டன் கூட கூட்டணி?


==============

12  கலைஞர் காந்தி போல் வாழ்கிறார் -கனி மொழி # காந்திக்கு சொத்து கிடையாது.நம்ம தலைவருக்கு சொத்து இல்லாத ஊரே கிடையாது


==============


13  அன்புமணிக்கு ஓட்டு போட 80 சதவீதம் மக்கள் தயார் - ராமதாஸ்
# ஜீரோ க்கு மதிப்பில்லை என்ற குமாரசாமி கணக்குப்படி.8%,பேர் தயார் என பொருள் கொள்க


===============

14   ”ஸ்டாண்ட் அப் இந்தியா” கடனுதவி திட்டம்- நாளை துவங்கி வைக்கிறார் பிரதமர் மோடி # விஜய் மல்லைய்யா கெட்டப் மாத்தி வந்து வாங்கிடப்போறார்==============


15  அனைத்து தரப்பில் இருந்தும் தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவு அலை அடிக்கிறது; வைகோ #,அது சுழல் னு நினைக்கறேன்.சிக்கிக்காதீங்க


==================


16 சேலம் கேப்டனின் கோட்டை-பிரேமலதா. # சித்த வைத்தியர் சிவராஜ் கோட்டை இல்லையா?


=============


17  கூட்டணில இருக்கமா இல்லியா ஜெயா தெளிவுபடுத்த வேண்டும்- வேல்முருகன் # கால்ல போய் விழுங்க.எந்திரி ன்னா இல்ல.மந்திரி ன்னா இருக்கு


================

18  சசி, இளவரசிக்கு வருமானம் இல்லை- ஜெ.வுடன் பணபரிவர்த்தனை நடந்தது என்பது தவறு- வக்கீல் நாகேஸ்் #அய்யோ பாவம்.ஏழைங்க..செக் டீலிங் கூடவா இல்லை

==================

19  விஜயகாந்த்234தொகுதியிலும் பிரச்சாரம் செய்வார்-பிரேமலதா
# மைக் பிடிச்சு பேசுவாரா?ஏசுவாரா?234 தொகுதி பேரும் தெளிவா சொல்லச்சொல்லுங்க பார்ப்போம்


==================

20  திமுக கூட்டணியில் இணைந்தால்தான் தேமுதிகவை காப்பாற்ற முடியும்- சந்திரகுமார் # அப்டின்னு சொல்லச்சொன்னாங்களா யாராவது பணம் கொடுத்து


================


0 comments: