Tuesday, May 10, 2016

போக்கிரி ,தெறி எல்லாம் நம்ம கேப்டன் ஆட்சில போடுவாக?

தமிழகத்தில் மூன்றாவது அணி, வெற்றி பெறும் மாற்று அணியாக இருந்ததில்லை: கருணாநிதி.# எல்லா புதிய சாதனைக்கும் ஒரு ஆரம்பம் இருக்குமில்ல தலைவா?


============


2 எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும் தி.மு.க.வின் வெற்றி கல் மேல் எழுத்து; கருணாநிதி அறிக்கை # அப்போ அது குமாரசாமி கணக்கு தான்.தப்புக்கணக்கு


============

3 தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் பறித்து அதிகாரிகளிடம் ஒப்படையுங்கள்” வைகோ # அவர் வாங்கி பாக்கெட்ல போட்டுக்குவாரா?அஸ்கு புஸ்கு


==============


4 தமிழக அரசியலில் பாமகதான் 3வது அணி - அன்புமணி # உண்மை

ஆனா 4 வதா உருவான ம ந கூ உங்களை முந்தி விட்டார்களே?

================


5 தமிழக தேர்தலில் பாமக தனித்துவிடப்படவில்லை: அன்புமணி

# தனிக்காட்டு ராஜா ஆகலாம்னு பார்க்கறீங்க.மக்கள் கண்டுக்கமாட்டேங்கறாங்க


===============

6 மதுவை ஒழிக்க

முதல்வர் நாற்காலியில்


கேப்டன் அமர வேண்டும்

-வைகோ # இதைக்கேட்டா கேப்டனுக்கே புரை ஏறிக்கும், சும்மா காமெடி பண்ணாதீங்க


==================


7 தோசையை மாற்றிப் போட்டாலும்” கொள்கை அளவில் ஒற்றுமையாக இருக்கும் திமுக, அதிமுக- ராமதாஸ் # சுருட்டுவது ,பதுக்குவது என்பதுதானே அவர்கள் கொள்கை==========8 நெல்லையில் ஆவேசமாக பேசிய வைகோ... அசந்து தூங்கிய முத்தரசன், திருமா # அது ஒரு வித யோகா ன்னு சமாளிப்பாங்க
=========
9 முதல்வர் ஆவதற்கு விஜயகாந்துக்கு என்ன தகுதி இருக்கு?: சீமான் ஆவேசம்# முதல்வர் ஆக தகுதி தேவை இல்லை.மக்கள் ஆதரவு போதும்=============
10 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட ஜெ., முடிவு# அப்போ நாட்டாமை நட்டாத்துல?
==============11 ஒரு கட்சி ஆட்சியில் ஊழலை ஒழிக்க முடியாது: தொல். திருமாவளவன் # பரமசிவன் கழுத்தில் இருந்தா பாம்பும் பஞ்ச் டயலாக் பேசும்
==============
12 கறிவேப்பிலையா இருக்கக்கூடாதுன்னு நினைச்சேன்.கொத்துமல்லியாய் இருன்னு கூப்ட்டாங்க.இப்போ கொத்து புரோட்டா பண்ணிட்டாங்க -சித்தப்பா மைன்ட் வாய்ஸ்
============13 போலிஸ் அகாடமியில் கேப்டன் படங்களை காண்பித்தே கற்றுக் கொடுக்கிறார்கள் - பிரேமலதா

# போக்கிரி ,தெறி எல்லாம் நம்ம கேப்டன் ஆட்சில போடுவாக?


==========

14 அதிமுக - சிங்கம், திமுக - சூது கவ்வும், ம.ந.கூ - நானும் ரவுடிதான்!: விந்தியா கமெண்ட் # பாமக = ஜாதி மல்லி ,பாஜக = அந்தி மந்தாரை

==============

15 அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வாயைத் திறப்பதே இல்லை: பியுஷ் கோயல் - FUSE போன பல்புங்க.


==========

16 மக்கள் நலக்கூட்டணி ஒரு மக்கிப் போன கூட்டணி: அன்புமணி # பொறாமை புகுந்த கட்சி ,வீடு உருப்படாது


============

17 தேர்தல் பறக்கும் படையால் அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதில் தமிழகம் முதலிடம் # பணப்புழக்காட்டம் எப்பவும் ஜெ ஆட்சியில் தாராளம்.


===========

18   சிறுதாவூர் பங்களாவில் கண்ட்டெய்னர்கள் வந்து சென்றது பற்றி விசாரணைநடத்தப்படும் - தேர்தல் ஆணையம் # விசாரணை அறிக்கை வர்றதுக்குள் தேர்தலே முடிஞ்சிடும்=================

19 ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 4 வருடங்கள் ஆகியும். இதுவரை கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.-பிரேமலதா # ராம”ஜெ”யம்


=================


20 ஜெ ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு செயலிழந்துவிட்டது;  - பிரேமலதா # கேப்டன் போலீசா பல படங்கள் நடிச்சதால சட்டம் ஒழுங்கு கா[ப்பாற்றப்படும்?


=====================

0 comments: