Wednesday, May 04, 2016

தலைவா! நீங்க தான் நெம்பர் 1

1  என் மகன் கூட ராசி ஆகிட்டேன்.அப்போ 5% வாக்கு கூடுதலா கிடைக்குமா?விளையாடாதீங்க தலைவரே!மகன் வீட்டில் இருக்கும் 5 ஓட்டு வேணா கிடைக்கும்


============

2 நான் ஆட்சிக்கு வந்தால் மது விளக்கு வரும்.அதாவது மண்ணெண்ணெய்க்குப்பதிலாக மதுவை ஊற்றி எரிக்கும் மது விளக்கு.ஆங்.

=============


3 தலைவா! நீங்க தான்  நெம்பர் 1

 எதுல? சம்பள விஷயத்திலா? 


 இல்லை. நெட் ல நல்லா வெச்சு செய்யறாங்களே அந்த கலாய்ப்பில்


=================

4     சார்! நீங்க டென்சனா இருக்கீங்களா?

 இல்லையெ? நான் எங்கப்பாவுக்கு ஒரே ஒரு சன் தான்


================


5  எங்களுக்கு  போட்டி தரும் ஒரே கட்சி ஆளுங்கட்சிதான்

 தலைவரே! பொட்டி தரும் கட்சின்னு வெளில பேசிக்கிட்டாங்க?


=================

சார், உங்க ( தொடரி) பட ஸ்டில்ஸ் எல்லாம் செந்தூரப்பூவே படத்தை நினைவுபடுத்துதே?

ரயிலைக்காட்னா அப்டி சொல்றதா? அப்போ மயிலை க்காட்டினா 16 வயதினிலே சொல்வீங்களா?


=================

7 தலைவரே! டோனியை நம்ம கட்சில சேர்த்துடலாமா? 

எதுக்கு?

ஏதோ ஒரு கேப்டன் நம்ம கட்சில இருக்கட்டுமே? மீடியா கேட்டா சமாளிக்கலாமில்ல?


================

8 தலைவரே! உங்களை ரொமாண்டிக் த்ரில்லர்னு அந்தக்கட்சில சொல்லிட்டாங்க

அப்டின்னா?

ஜீரோ வாம்


=================


9  டாக்டர்! முத்தம் கொடுத்ததால மூர்ச்சை ஆகிட்டதா சொல்லுதே, எதனால?

பசி மயக்கமா இருக்கும், சாத்துக்குடி ஜுஸ் வாங்கிக்குடுத்து பின் அடிக்கவும்


===================


10 டாக்டர் , தம்பதிக்குள் சண்டை வராம இருக்க  டெய்லி நாவல் பழம் சாப்பிடனுமா? புரியலையே?

 நாவல் பழம் சாப்பிட்டா நாக்கு மரத்துடும், சம்சாரம் சமையலை குறை சொல்ல மாட்டீங்க இல்ல?

=================


11 பேரம் என்றாலே, என்ன அர்த்தம் என்று  எனக்கு  தெரியாது

தலைவரே! PAY ரம் அப்டின்னா பணம் கட்டிட்டு சரக்கு அடினு அர்த்தம்===============12 பேரம் என்றாலே, என்ன அர்த்தம் என்று  எனக்கு  தெரியாது 

தலைவரே! 500 கோடி குடுக்கறேன்னு சொன்னப்ப 750 கோடி கேட்டீங்களே அதுதான்  BAR"GAIN" ================

13  எனக்கு 28 வயது தான் ஆகிறது.68 வயதில் காந்தீய வழி.இப்போ டிஸ்கோ சாந்திய வழியில் நடப்பேன்
=============
14 உன் சமையல் அறையில் நான் கறிவேப்பிலையா? கொத்துமல்லியா?ன்னு தலைவர் பூடகமா பாடறாரே?அவர் சரத்குமார் ரசிகர்
===============

15 ரஜினி ரசிகர் ஏன் குஷியா இருக்காரு?
தெறி யில் விஜ்ய்க்கு மகளா நடிச்ச பேபி (மீனா வின் மகள்) இன்னும் 10 வருசம் கழிச்சு ரஜினிக்கு ஜோடியா நடிக்குதாம்.டைட்டில் எஜமான் 2============
16 500 கோடி பேரம் நடந்ததா சொல்வது தவறு.எல்லோருக்குமே தெரியும் எனக்கு வாங்கித்தான் பழக்கம்.கொடுத்து பழக்கம் இல்லை.
============17 ஜட்ஜ் = 500 கோடி பேரம் நடந்தது உண்மையா?யுவர் ஆனர்.என் கணவருக்கு 500 கோடிக்கு எத்தனை பூஜ்யம் என்பது கூடத்தெரியாத பூஜ்யம்

=============


18 உங்க கணவர் ஏன் எல்லோரையும் அடிக்கறாரு?


அவரு முன் கோபி ங்க.
அப்போ அவரு கவுந்தப்பாடியா?கோபிக்கு முந்தின ஊரு அதுதான்.

==============


19

இனி பெண்களுக்கு மென்சன் போட மாட்டேன்

  ஏன் சார்?

 இதுதான் சாக்குனு கண்டவனும் ஊடால வந்துடறாங்க, ஒன்லி டி எம் தான்


===============


20 தலைவரே! பேரமே நடக்கலையாம், நீங்க மன்னிப்புக்கேட்கனுமாம்

எங்க  கூட்டணிக்கட்சித்தலைவருக்கு தமிழ் ல பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு, பிடிச்ச வார்த்தை சரக்கு 


===================

0 comments: