Monday, May 02, 2016

மிஸ்!,நீங்க ஏன் என்னை அன் பாலோ ் பண்ணீங்க?

1  தலைவரே! அந்தக்கட்சில இருந்தா  உங்க கட்சியை வளர்க்க முடியாதுன்னு நேத்துத்தானே  சொன்னீங்க?

 ஆமா, ஆனா இன்னைக்குதான் கூப்ட்டு 2 சீட் தர்றேன்னாங்க


===============

2   தலைவரே! கறிவேப்பிலையாய் இனி அங்கே இருக்க மாட்டேன்னு ரோஷமா கட்சியை விட்டு வெளியேறினீங்களே என்னாச்சு?

 கொத்துமல்லித்தழையாய் இரு-ன்னு 2 சீட் கொடுத்தாங்க ஹிஹி

==============

3 தலைவரே! கட்சியை வளர்த்தப்போறேன்னீங்களே  , எப்படி?

 போன தேர்தல்ல 1 சீட் பிச்சை போட்டாங்க, இப்போ 2 சீட் பிச்சை, அப்போ டபுள் மடங்கு வளர்ச்சிதானே?


=================

4 தலைவரே! தேர்தலுக்கு முந்தின நாள் தான் கூட்டணி பற்றி அறிவிப்பீங்களா? ஏன்?

 நான்  டோனி ரசிகன். லாஸ்ட் மினிட் வின்னர் ஆக ஆசை


==================


உடன் பிறப்பே! பழம் கை நழுவி விட்டதாக எள்ளி நகையாடுகிறார்கள்! ஏன்? பழ கருப்பையா, பழ நெடுமாறன் நம்முடன் இல்லையா?==============தலைவரே! நீங்க எதுக்காக தாய்க்கட்சியை விட்டு வந்தீங்க?


 தலைவர் ஆக முடியலைன்னு,எத்தனை நாளுக்கு பல்லக்கு தூக்குவதுன்னு

 இப்போ அதைத்தானே பண்ணிட்டு இருக்கீங்க?

================


7 சார், லாஸ்ட் பால் ல  த்ரோ பண்ணாம  ஓடி வந்து ஏன் ஸ்டம்ப்ல அடிச்சீங்க?


வெற்றி தேவதை கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும்போது ஃபிளையிங்க் கிஸ்  ஏன் அடிக்கனும்?னுதான்


=================

8  என் கூட்டணிக்கனவுக்கோட்டையை இப்டி இடிச்சு தரை மட்டம் ஆக்கிட்டீங்களே?

என் கல்யாண மண்டபத்தை நீங்க இடிச்சப்ப எனக்கு எப்டி இருந்திருக்கும்?


===========

9 நம்ம கட்சில இருந்து பிரிஞ்சு போன நீங்களே இப்டி துரோகம் பண்ணலாமா?

துரோகம் ,சந்தர்ப்பவாதம் எல்லாம் உங்க கிட்டே இருந்து கத்துக்கிட்டதுதான்


===============


10 உன் சமையல் அறையில் நான் உப்பா?சர்க்கரையா?

கிச்சன் ரூமே கிடையாது.ஹோட்டல் ல வாங்கிட்டு வந்து டைனிங் ஹால் ல சாப்பிட வேண்டியதுதான்


=============

11 ஜட்ஜ் = ஏற்கனவே 2 சம்சாரம் வெச்சிருக்கும் நீ 3 வதா ஏன் ஒரு மேரேஜ் பண்ணிக்கிட்டே?

கைதி = ஹாட்ரிக் ஹிட் அடிக்கலாம்னு தான்

============

12 வியர்த்துக்கொட்டுது 5 நிமிஷம் சமையல் அறையில் இருந்தால்!"

மேடம்.சார் தானே சமையல்?உங்களுக்கு கிச்சன் ல என்ன வேலை?
தண்ணி குடிக்கப்போனேன்.


==============

13 டியர்.என் செலவை நானே பார்த்துக்கறேன்.

பின்னெ பக்கத்து வீட்டுக்காரனா பார்ப்பான்?தேய்ச்சது போதும்.ATMகார்டைக்குடு


==============


14 சார்.கலாச்சார சீர்கேடு ன்னா என்ன?

சொல்றேன்.மிஸ்.குனியாம நேரா நில்லுங்க.கைல மடிச்சு வெச்சிருக்கும் துப்பட்டாவ சுடி மேல போடுங்க


==============


15 தலைவரே! அவங்க பஞ்ச பாண்டவர்களாம்.ஜெயிச்சிடுவாங்களோ?

சகுனி மாதிரி யாமிருக்க பயமேன்?


===============


16 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 தலை நகரங்கள் 6 தளபதி கிராமங்கள் அமைப்போம்


=============


17 தலைவரே!,எதற்கும் கலங்காத நீங்க மேடைல ஏன் அழறீங்க?

இது தான் என் பிரம்மாஸ்திரம்.அனுதாப ஓட்டு 5% வந்தாக்கூட லாபம் தானே?


===============


18 இந்த தேர்தலில் யார் சீனியர் என பார்த்து சீனியாரிட்டிக்கு மதிப்பளித்து வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் னு தலைவர் பேசிடுவாரோ?


============

19 மிஸ்!,நீங்க ஏன் என்னை அன் பாலோ ் பண்ணீங்க?

டெய்லி உங்களை பாலோ பண்ணனும்னா டெய்லி அன் பாலோ பண்றது தான் ஒரே வழி

==============


20 தலைவரே! ஆண்டவருடன் தான் கூட்டணின்னு சொன்னீங்க?

ஆமா, வை கோபால் சாமி, ல சாமி இருக்கே? சாமி = கடவுள் = ஆண்டவர் தானே?


==============

0 comments: