Tuesday, March 10, 2026

சீதா பயணம் (2026) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

               


               ஆக்சன் கிங்க் அர்ஜூன்   தனது  மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நாயகியாக  நடிக்க  கதை , திரைக்கதை , இயக்கம் , தயாரிப்பு  என களம்  இறங்கி  இருக்கும் படம் . ஆக்சன் மசாலாவாக  இல்லாமல்  ஒரு  ரொமாண்டிக் டிராமாவாக   , ஒரு பீல் குட்  மூவியாக எடுக்க முயன்று  இருக்கிறார் , அவரது  முயற்சி  வெற்றி பெற்றதா? என்பதைப்பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  மிகப்பெரிய  கோடீஸ்வரரின் மகள் . சிறந்த  சமையல் கலை நிபுணி ஆக பட்டம் பெற்றவர்.. அம்மா  இல்லை , சின்ன வயதில் அம்மா   இறந்ததால்  அப்பா தான்  அவருக்கு எல்லாமே .  அப்பாவை விட்டுப்பிரியக்கூடாது என்பதால் காதல் , கல்யாணம் இவற்றில் எல்லாம் விருப்பம் இல்லாமல் இருக்கிறார் . எப்போது  கல்யாணப்பேச்சை  எடுத்தாலும் அப்போதே  அந்த இடத்தைக்காலி செய்து  விடுவார் .


  வேறு  ஒரு நகரில் நடக்கும் சமையல் கலை  சம்பந்தமான  கான்பரன்ஸ்க்காக  காரில்  பயணிக்கிறார் . அப்போது  முன் பின்  தெரியாத  ஒருவன்  லிப்ட்  கேட் கிறான் . கொஞ்சம்  சந்தேகத்துடன் தான்  நாயகி  அவனுக்கு  லிப்ட்  தருகிறாள் . வழியில் அங்கங்கே   அவள்    பயணம்  தடை  படுகிறது . இதனால்  செல்ல வேண்டிய இடத்துக்குக்கொஞ்சசம்  தாமதமாகத்தான் செல்கிறாள் .ஆனால்  போன உடன் தான்  தெரிகிறது . தாமதமாக வந்தது நல்லதாகப்போயிற்று  என .. ஏன் எனில்  அந்த ஹோட்டல்  மிகப்பபெரிய  தீ விபத்தில்  கருகி விட்டது . தான்  உயிர்   தப்பியதற்கு  தனது பயணத்தில்  குறுக்கீடாக   வந்தவர்கள் தான்  என நினைக்கிறார் . அவர்களுக்கு ஒரு நன்றி  தெரிவிக்கலாம் என நினைக்கிறார் .அந்த  நன்றி   தெரிவிக்கும்  படலத்தில்  லிப்ட்  கொடுத்த  இளைஞனிடம்   காதல்   மலர்கிறது 


ஆனால்  ஒரு கட்டத்தில்   தன   காதலனும் ,  அப்பாவும் ஏற்கனவே  ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆனவர்கள் என்பதை உணர்கிறார் . எல்லாமே  அப்பா  வின்  செட்டப்போ   என சந்தேகிக்கிறார் , இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள் தான்   மீதி   திரைக்கதை 



நாயகி  ஐஸ்வர்யா  அர்ஜூன்  =  தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா + ஜோதிகா  + சோனியா அகர்வால்   மூவரின் முகச்சாயல்  இருக்கிறது , சில காமரா கோணங்களில்  மூவரையும்  தனித்தனியே  நினைவுபடுத்துகிறார் 


 சிரித்த   முகம் , நல்ல  நடிப்புத்திறன்  ஒருங்கே  கொண்டவர் . நல்ல எதிர் காலம் உண்டு . நாயகன் ஆக   நிரஞ்சன்   என்பவர் . எடுபடவில்லை . நாயகியின்  அப்பாவாக சத்யராஜ் , நாயகனின்  அப்பாவாக பிரகாஷ்  ராஜ் இருவரும்  குணச்சித்திர  நடிப்பில்  மிளிர்கிறார்கள் . கோவை  சரளா  கெஸ்ட்  ரோலில்   வருகிறார் . மற்ற   அனைவர்   நடிப்பும்   சிறப்பு . ஆக்சன்  கிங்க் அர்ஜூனும் ஒரு ரோலில்  நடித்து   இருக்கிறார் 


ஜி  பாலமுருகனின்  ஒளிப்பதிவு  பரவாயில்லை ரகம் . அனூப்  ரூபன்சின்   இசையில்  4 பாடல்கள்   சுமார் ரகம் , பின்னணி இசை பரவாயில்லை ரகம் .


 சண்டைக்காட் சிகளை  அர்ஜுனே  வடிவமைத்து   இருக்கிறார் .  படம்  ரன்னிங்க்   டைம் இரண்டரை  மணி நேரம் , இன்னமும்  அரை மணி நேரம் கத்திரி  போட்டிருக்கலாம் 

சபாஷ்  டைரக்டர்

1  நாயகனின்  நண்பன்  தன காதலியிடம்  காதலை சொல்வது எப்படி ? என ஐடியா கேட்க  அவனுக்கு  ஐடியா        கொடுப்பது  போல     அருகில் இருக்கும் நாயகியிடம்  காதலை  வெளிப்படுத்தும் சீன்   கவிதை 

2  சைக்காலஜி  டாக்டர் , சைக்கலாஜிக்கல்  ட்ரீட்மெண்ட் , அவரது அணுகுமுறை எல்லாம் தமிழ் சினிமாவுக்குக்கொஞ்சம் புதுசு 

3  ஏற்கனவே  வெளிவந்த பயணக்கதைகளான  வானம் , பையா , திருடா திருடா  படக்கதைகளிலிருந்து  வேறுபட்டு  வித்தியாசமான  கதைக்கரு வை  எடுத்துக்கொண்டு  திரைக்கதை  அமைத்தது  பாராட்டுக்குரிய விஷயம் 



ரசித்த  வசனங்கள் 


1  நாம  எப்பவும் கத்துக்கிட்டே   இருக்கணும் , அப்போதான் முன்னேற  முடியும் 


2   ஊருக்குள்ளே கோயில்  இருந்தாத்தான்  கலாச்சாரம்  வளரும் ,ஊருக்குள்ளே பள்ளிக்கூடம்  இருந்தாதான்  பகுத்தறிவு வளரும் 


3  நாம  மட்டும்  இல்லை , நம்மை சுத்தி  இருக்கும்  எல்லா ஜீவராசிகளும் நல்லா இருக்கணும்னு நாம நினைக்கனும் 


4  கெட்டதிலும்   நல்லது  இருக்கு , நெகடிவ்ல யும் சில பாசிட்டிவ்ஸ்  இருக்கு 

5  பணக்காரர்களாகிய  நாம்  10 ரூபாய்க்குக்கூட யாரையும்  நம்ப மாட் டோம் , ஆனால்  ஏழையாக இருந்தும்  அவ  100 ரூபாய்  வாங்காம நம்மை நம்பறாளே? 

6   லவ் பண்ண ,  பிரப்போசல்  அவசியம்  இல்லை ,  அதுதான்  மேஜிக் ஆப் லவ் 

7  மவுனமா  இருப்பது எப்பவும் ஒரு முடிவைக்கொடுக்காது , மனம் விட்டுப்பேசனும் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   தமிழ் ,   தெலுங்கு , கன்னடம் , ஹிந்தி , மலையாளம்  என  5 மொழிகளில்  உருவான   படம்  என பிரமோ    செய்திருந்தாலும் தெலுங்கில்  எடுத்து அனைத்து  மொழிகளிலும் டப்  செய்து  இருக்கிறார்கள் , லிப்  சிங்க்  சரியாக  வரவில்லை       


2  மெயின் கதைக்கு  முக்கியமான  காட்சி  ஆகிய  பைவ் ஸ்டார்  ஹோட்டலுக்கு தீ  விபத்து ஏற்படுவது  சி ஜி  ஒர்க் சரியாக அமையவில்லை 


3 நாயகனின்  முகம்  நமக்கு  சரியாக  செட் ஆகவில்லை . நாயகி அளவுக்கு  மனதில் நெருக்கம் உண்டாகவில்லை 

4    படத்தின்  தயாரிப்பாளர் என்பதால்  மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லா விட்டாலும்  அர்ஜூனின்  கேரக்ட்டருக்கு தந்த  முக்கியத்துவம், அவருக்கான  ஆக்சன் சீக்வன்ஸ்  வலியத்திணிக்கப்பட்டது 

5   ரவுடியாகவே  வாழ்ந்து  பல கொலைகள் செய்த ஆள்  நாயகியின்  ஒரே ஒரு நன்றியில்  மனம் மாறி  திருந்துவது  காதில் பூ 


6  நாயகியின்  பெயர்   சீதா ,   நாயகனின்  சொந்த   ஊர் பெயர்  சீதா புரம் , எதேச்சயாக  அமைந்த  இந்த  ஒற்றுமை பற்றி  நாயகனோ , நாயகியோ வியந்து  சிலாகித்துக்கொள்ளவே இல்லையே ? 

7  க்ளைமாக்ஸ்  சீன்  காதலுக்கு மரியாதை  படத்தையும் , க்ளைமாக்ஸ்   வசனங்கள் பூவே  உனக்காக  பட  வசனத்தையும்  நினைவு படுத்துகிறது 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+  குடும்பத்துடன் பார்க்கலாம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   வித்தியாசமான  ஒரு கதைக்களம் .  பார்க்கலாம் , ஆனால் 2 கே  கிட்ஸுக்குப்பிடிக்காது . சென்ட்டிமென்ட்  சீன்கள் அதிகம் . ரேட்டிங்க்  2.5 / 5 



0 comments: