Sunday, February 15, 2015

நைஸ் உப்புமா tips


டாக்டர்! துளசி சாப்பிட்டா தொண்டைக்கு நல்லதா?


 துளசியோ ,கார்த்திகாவோ அடம் பிடிக்காம சாப்பிட்டா ராதாவுக்கு நல்லது

===================


2  
பாதிரியார் = நீ கடைசியா செஞ்ச பாவம் என்ன? 


 ஒரு மாதிரி யார் = அபிலாஷா வின் முதல் பாவம் டிவிடி ல 3 டி ல பார்த்தேன்


=================


3  டீச்சர்.காட்டேரி க்கு சின்ன ரி வருமா? பெரிய றி வருமா? ஏரியில் குளிச்ட்டு இருந்தா காட்டேரி. நீ படுத்திருக்கும் கட்டில் ல ஏறி வந்தா COTடேறி 

==================

4   சுவாமி!  என் அறிவுக்கண்ணை  நீங்க தான் திறந்து  வைக்கனும்!


அட  இரம்மா, இப்போதான் ஆசிரமத்தையே  திறந்து  வெச்சிருக்கேன்


===========


5 டாக்டர்! பீர்  குடிச்சா  உடம்பு  குண்டாகும்னாங்க, ஆகலை?பீர்  மட்டும் குடிச்சா   தொப்பை  வரும், நீங்க  விஸ்கி, பிராந்தி  எல்லாம் அடிச்சா?

=============


6 சுவாமி! என் அறிவுக்கண்ணை நீங்க தான் திறந்து வைக்கனும்! அட இரம்மா, இப்போதான் ஆசிரமத்தையே திறந்து வெச்சிருக்கேன்

=================7
டாக்டர்! பீர் குடிச்சா உடம்பு குண்டாகும்னாங்க, ஆகலை? பீர் மட்டும் குடிச்சா தொப்பை வரும், நீங்க விஸ்கி, பிராந்தி எல்லாம் அடிச்சா?


================


8 சார்.உங்க நாவல் படிச்சேன்.உங்க எழுத்துல ஒரு தடுமாற்றம் தெரியுதே? 


 அது ஜாக்கிங் போய்க்கிட்டே எழுதுனது 


================


9 மார்கழி மாசம் கோலம் போடும் பொண்ணுங்களை ரசிப்பவன் இலக்கியப்பத்திரிக்கை ஆரம்பிச்சா என்ன பேரு வைப்பான்?


 கோலச்சுவடு 


=================

10 அத்தான்.காலண்டர் ல கெட்டநாள் எப்போன்னு பார்க்கச்சொல்றீங்களே எதுக்கு?


 நல்ல நாளும் அதுவுமா இதெல்லாம் வேணாம்னியே? 


================


11 டியர்.முதன் முதலா ஹோட்டல் வந்திருக்கோம்..ஆசையா ஏதாவது பேசேன். 


 ஆனியன் தோசை 1 ஆர்டர் பண்ணுங்க 


===============


12 டியர்.பீச் க்குப்போக 5 ரூபா தானே டிக்கெட்.அதைக்கூட என் கிட்டே கேட்கறீங்க்ளே? 


நீ தானே சொன்னே.எனக்காக நேரத்தை மட்டும் செலவு செஞ்சாப்போதும்னு 


==================

13 மிஸ்! எப்பவும் சுடி ல புல்லா கவர் பண்ணி வருவீங்க.திடீர் னு தொடை தெரிய மிடி ல வந்திருக்கீங்க? 


ஹிஹி.இது thigh (தை) மாசம்.மேட்சுக்கு மேட்ச் 

=================


14
எப்பவும் வாய் ல லட்டு ஜிலேபி மைசூர்பாக் னு மிதக்கிட்டே (மென்னுக்கிட்டே) இருந்தா அது ஸ்வீட் வாய் ஸ் ஆகிடுமா?


===============


15 டியர்.பீரோவை எதுக்கு பெட்ரூம்ல இருந்து ஹால் க்கு மாத்திட்டீங்க? வீட்டுக்கு யார் வந்தாலும் உன் சேலை கலெக்சனை காட்டிடற ==============

16 எம் டி = பொண்ணுங்க 12 பேரையும் நான் இண்ட்டர்வ்யூ பண்ணிக்கறேன்.நீங்க ஆண்களை கவனிச்சுக்குங்க. எனக்கும் ஒரு வாய்ப்பு குடுங்க சார்

===============

17 சார்.உங்க அடுத்த நாவல் என்ன கரு?னு முடிவு பண்ணியாச்சா?  ஏதோ 1,ஆனா ஏதாவது பிரச்னையை கிளப்பி சர்ச்சை உருவாக்கனும் 


================

18
அறிவுக்கொழுந்துகளை பசங்க பெரிதா விரும்புவதில்லை.ஏன்? 


 பசங்க என்னைக்கு பொண்ணுங்க கிட்டே மூளையை சிலாகிச்சாங்க?

===============


19
டியர்.உப்புமா கிளறும்போது கல் உப்பு போடாம ஏன் தூள் உப்பு போடறே? 


அப்போதான் நைஸ் உப்பு மா னு பேர் கிடைக்கும்


=================


20 டியர்.பார்ட்டி ல் எப்பவாவது நான் முட்டாள்தனமா ஏதாவது பேசுனா எனக்கு ஒரு சிக்னல் குடுங்க.  ம்.அதுக்கு நீ பேசாமயே இருந்துட்டா சவுகர்யம் 


================

0 comments: