Tuesday, February 03, 2015

10 கத்தி = 1 ஐ ?

சுனந்தா கொலை வழக்கில் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன்: சசிதரூர். # வேற வழி இல்ல மச்சி.நீ எதிர்க்கட்சி

=============


2 ஆம் ஆத்மி மீதுமக்களின் நம்பிக்கை பார்த்து மோடி பயந்துபோய் இருக்கிறார்: கெஜ்ரிவால்.# இன்னும் இந்த கட்சி இருக்கா?னு வியந்து போய் இருக்காராம்

=============

3
பிப்ரவரி 13 ல் அநேகன் ரிலீஸ் # உத்தம வில்லன் வர்றார் னு தெரிஞ்சும் தில்லா விடறார் பார் அங்க தான் நிக்கறார் ரஜினி யின் மாப்ளை

===============

4
பறக்கும் விமானத்தில் திரிஷாவின் காஸ்ட்லி திருமணம் #எவ்ளோவ் காஸ்ட்லியா கல்யாணம் பண்ணாலும் கழுத்துல தானே தாலியைக்கட்டுவீங்க?


=============


5 சூர்யா ஹரி மீண்டும் சேரும் சிங்கம் 3 //இனி வருசா வருசம் ஜேம்ஸ்பாண்ட் சீரியல் மாதிரி சிங்கம் சீரியல் வரும் போல==============


கரணுடன் 'அந்த' காட்சிகளில் நடிக்க கூச்சமாக இல்லை: பிபாஷா பாசு # ஏம்மா! நீங்கதான் எப்பவும் அதுல பெயில் ஆனதே இல்லையே.பிபாசா பாஸு


===============

7  என் தாடியைப் பார்த்து வாய்ப்பு வந்தது - .ஜி.வி.பிரகாஷ்! # ஷேவிங் பண்ணா வாய்ப்பு போய்டுமா?

=============

8
விஜயகாந்த் மகனின் 'சகாப்தம்' படம் போலீஸ் கதைனு ம் ,100 நாள் ஓடும்னும் எப்டி சொல்றே? டைட்டில்லயே cop இருக்கே ? # சcopதம் ,சதம்்


==============


9 சிம்புவுக்காக டப்பிங் பேசிய நயன்தாரா # சிம்பு குரலே நல்லாதானே இருக்கு.இவர் ஏன் மெனக்கெட்டு ஆண் வாய்ஸ் ல பேசனும்?


==============

10  பெங்களூர் மொய் விருந்தில் ரூ 40 லட்சம் வசூல் செய்தார் கெஜ்ரிவால் # அரசியல் உலகின் இளைய தளபதி !

=============


11  சோனியாகாந்தி , ராகுல்காந்தி இருவருமே காங்கிரசின் தலைவர்கள் தான் - ஈ.வி.கே.எஸ்# பிரியங்கா காந்தி மிஸ் ஆகிடுச்சு.


============

12
கற்பழிப்பு வழக்கில் கைதான பின்னணி பாடகர் அங்கித்போலீஸ் விழாவில் பாடினார் # ரேப் பாப்பா ரேப் பாப்பரி.புது மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா


=============

13 
முதல்வராகும் ஆசை இல்லை -வைகோ# ரைட்டு.தலைவர் கூட கைகோர்க்கப்போறாரு போல.கலைஞர் ஹேப்பி அண்ணாச்சி


=============


14 
தமிழகத்தில் அதிமுக பினாமி ஆட்சி நடத்துகிறது : முக ஸ்டாலின் # என்ன எதிர்பார்த்தீங்க? கலைஞரை சி எம் சீட் ல உக்கார வைப்பாங்கண்ணா/?

=============


15  ஐ படத்தில் 4 வேடங்கள் ,10 கெட்டப் - விக்ரம் # மைக்கேல் மதன காம ராஜன் ன் தசாவதாரம் னு டைட்டில் வெச்சிருக்கலாம்.


=============


16 உலகம் முழுவதும் ஐ பட வசூல் 1000 கோடி எதிர்பார்க்கிறோம் - தயாரிப்பாளர் # அடேங்கப்பா
தயாரிப்பு செலவை விட 15 மடங்கு!!!!


=============


17 நான் குடிகாரனா? பொங்கல் விழாவில்் விஜயகாந்த் # சொந்த ஊரு பரமக்குடினு சொல்லிடுங்க.பரம குடி காரன்னு சொன்னாலும் சமாளிக்கலாம்்

===========

18 மது குடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை - விஜயகாந்த்.. #நோ மிக்சிங்.அப்படியே சாப்பிடுவேன் டைப்?============

19 ரஜினி படத்துக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் வெளியாகிறது ஐ # ரைட்டு ரிசல்ட் எப்டி இருக்கும்னு பூடகமா சொல்றாங்க போல


==============

20 ஆம்பள’ படத்தின் தலைப்புக்கு தடைகேட்டு வழக்கு # பூஜை போடும்போது விட்டுட்டு அதெப்டிய்யா கரெக்ட்டா ரிலீஸ்க்கு முந்தின நாள் கேஸ் போடறீங்க?


====================

0 comments: