Saturday, February 14, 2015

ராணா ராசி இல்லாத பேரா?த்ரிஷா அதிர்ச்சி


அன்பே!நீ ரசம் வைத்தாலும் அதிரசம் போல் இனிக்குதே எப்படி?


 ரசத்தில் உப்புபோடறதுக்குப்பதிலா அஸ்கா போட்டுட்டேன்


=============

2
டீச்சர்! கனிமொழி பழமொழி ரெண்டும் ஒண்ணுதானே?!


" கனிவா பேசினா அது கனிமொழி.கனியைப்பத்திப்பேசினா அது பழமொழி


=================
மிஸ்! உங்க பேர் என்ன? 
மாமாமாமாமாமாமாமாமாமா. 
அப்டின்னா? 
பத்துமா(பத்மா)
 ஓ.நான் என்னை மாமானு 5 டைம் கூப்பிடறீங்கனு நினைச்ட்டேன்
=================
4

மீட்டிங் ல எதுக்காக எம் டி மேடமை கட்டிப்பிடிச்சீங்க?
 கேப் விடாம பேசுன்னாரு.காத்து கூட நுழைய விடலையே?
=============
5
    
சார்.லோன் வாங்கனும்.யாரைப்பார்க்கனும். 
மிஸ்! என் எதிர் சீட்ல 5 நிமிசம் உக்காருங்க.நான் முதல்ல நல்லா பார்க்கனும்
============
6
    
மூணாறு ல 1 பொண்ணு ஜாதகம் வந்திருக்கு.30 பவுன் போடறாங்களாம்.
 ஓஹோ.அப்போ திருவையாறு ல பொண்ணு பார்த்தா 50 பவுன் போடுவாங்களா?


================


7
சார்.நான் குண்டாகிட்டேனான்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க.
 சாரி மேடம்.கொஞ்சம் பாத்து எப்டி சொல்றது?
================
8
அய்யரே! நயன் தாரா பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணுங்க.பிறந்தநாள் . 
என்ன நட்சத்திரம்? 
தமிழ் சினிமா நட்சத்திரம்தான்.நோக்குத்தெரியாதா?
===============
9
மேனேஜர் சார்.எம் டி சார் வேணும்னே என்னை தொட்டுத்தொட்டுப்பேசறார். 
ஓஹோ.பை த பை.ஏன் நிக்கறீங்க.?என் மடில உக்காந்துட்டே பேசலாமே?
================
10
ஒழுங்கா வேலை செய்யாம ஏதாவது தப்பு பண்ணிட்டு சாரி கேட்டா எனக்குப்பிடிக்காது. 
சுடிதார் ,மிடி கேட்டா பிடிக்குமா சார்?
=================
11
    
எங்க ஏரியாவிலேயே இவர் தான் கன்னியமானவர். 
எப்டி?
 கன்னிப்பொண்ணுங்க கிட்டே மட்டும் தான் பேசுவார்
=================
12
டாக்டர்.நீங்க சொன்னபடி தினமும் சாப்பாட்டில் பாகற்காய் சேர்த்தும் சுகர் குறையல. 
ஏன்? 
ரொம்ப கசப்பா இருக்குனு அஸ்கா தொட்டு சாப்ட்டேன்
==============
13

ஏம்மா! உன் புருசன் லாக்கப்ல இருந்து தப்பி டபுள்கேம் ஆடறானா? 
சிங்கிள்கேம்க்கே சிங்கி அடிப்பாருங்க ஏட்டய்யா.அவராவதுடபுளாவது
=================

    
11  இங்க்லீஷ் மிஸ் இன்பவல்லி = கேட் வின்ஸ்லேட் -ன் THE READER படத்தை ஏன் க்ளாஸ் ரூம் ல பாத்துட்டு இருக்கே?
 மிஸ்!டுடேREADER டுமாரோ லீடர்னீங்ளே?
===============

    
12  ராணா ஒரு ராசி இல்லாத பெயர் போல.
ஏன்?
ரஜினி படத்துக்கு டைட்டில் ஆகும் வாய்ப்பும் கிடைக்கலை.த்ரிஷா விற்கு கணவர் ஆகும் வாய்ப்பும் கிட்டலை
=============
13 
நான் பார்த்ததிலே உன் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன். 
ஓஹோ! அப்போ கெட்ட அழகிகள் நிறையப்பேரைப்பார்த்திருக்கீங்களோ?
===========
14 
லேடி = இன்ஸ்பெக்டர்.என்னை டெய்லி 5 பேர் பாலோ பண்றாங்க. 
தேவலையே!என்னை 2 பேர் தான் ட்விட்டர்ல / ஃபேஸ்ஸ்புக்ல  பாலோ பன்றாங்க
==============
15
குருவே! சந்நியாசி ஆகிடலாம்னு இருக்கேன்.இல்வாழ்வு கசந்து விட்டது. 
அப்டியா?ஆசிரமத்தில் தங்கு!உன் வீட்டு அட்ரஸை சொல்லு!
================
16 
    
டியர்.நம்ம ஊடல் போதும்.நீங்க கொஞ்சம் இறங்கி வரக்கூடாதா?
 பேக்கு.நீ தான் 2 வது மாடில இருக்க.நீ தான் இறங்கி வரனும்
=================

  
    
17  டியர்.உன் கிட்டே எனக்குப்பேசப்பிடிக்கலை.
 ஏன்? 
டெய்லி பேசிப்பேசியே டைம் வேஸ்ட் ஆகிடுது
=================
18
மிஸ்! க்ளாஸ் ரூம் ல பாடம் நடத்தும்போது ஏன் சரக்கை நினைவுபடுத்தறீங்க? 
நான்  என்ன செஞ்சேன்?
? பேப்பர்ல எழுதும்போது மார்"ஜின்" விட்டு எழுது ன்னீங்ளே?
=================
19 
சாரி சார்.எனக்கு ஆம்பளைங்களைக்கண்டாலே அலர்ஜியா இருக்கு.
 ஓ! எனக்கு பொண்ணுங்களைக்கண்டாலே எனர்ஜியா இருக்கு
=============

  
    
20 என் வாழ்க்கைல இது வரை எந்த ஆணுக்கும் இடம் தந்தது இல்லை. 
அடடா!மிஸ்! மிஸ்டு!ஆண்கள் தினத்தன்னைக்காவது ஒரு வாய்ப்பு குடுங்களேன்
============================

0 comments: