Saturday, February 07, 2015

புலி -100 கோடி


தமிழ் மிஸ் தன்யா = கலிப்பா வுக்கு ஒரு உதாரணம் சொல். 


லொள் மாணவன் = வஞ்சிப்பா வுக்கு வேணா ஒரு உதா சொல்றேன்.புஷ்பா.


================

2  டியர்.நம்ம காதல் தான் ஊத்திக்குச்சே.எதுக்கு சக்சஸ் பார்ட்டி? 


ஊத்துனதை ஊத்தி மூடத்தான் சக்சஸ் பார்ட்டி வைக்கனும்.இதான் இப்போ ட்ரெண்ட் 


=============


 3  வரி கட்ட மாட்டேன்னு என் பையன் அடம் பிடிக்கறான்.


ஓஹோ.ராஜேஷ் வரி ,காளீஸ்வரி ,ஜெகதீஸ் வரி இப்டி யாரையாவது கட்டி வெச்சுடுங்க


=================


4  என் கிட்டே  எந்த வேலை  சொன்னாலும் அ”சால்ட்”டா  செஞ்சிடுவேன்.

அப்டியா? என்னை உப்பு மூட்டை தூக்குங்க  பார்ப்போம்


==============


5  சார்,இடைவேளை  வரை மேல  இருக்கும்  தியேட்டர்ல  படம்  ஓடுது,அதுக்குப்பின் பாதி படம்  கீழ்  தியேட்டர்ல  ஓடுதே?ஏன்?


  படத்துல   ட்விஸ்ட் இல்லைனு சொன்னாங்க.அதான்  ட்விஸ்ட்டா இருக்கட்டுமேன்னு இப்டி பண்ணிட்டோம்


================

6  ஹாலிவுட் படத்துல ”நடிக்க”  உங்களைக்கூப்பிட்டாங்களாமே? போகல?

போறேன்.நம்மை அடிமைப்படுத்துன ஆங்கிலேயர்களைப்பழிவாங்க நல்லவாய்ப்பு


=================


7 சார்!உங்க  சம்சாரத்து கிட்டே  இப்படி எல்லாம்  எதிர்த்துப்பேசுவீங்களா?

பேசறதா? அவங்க  பேசுவாங்க, நான் கேட்டுக்குவேன்


=================


8 சார், உங்க  படத்துல,  திரைக்கதை ல ஏதாவது  ட்விஸ்ட்/ ட்ரிக் இருக்கா?

 அது  இப்போ  சொல்ல  முடியாது, ஆனா  இது  ஹீரோவுக்கு  ஹாட்ரிக்


==================

9  டாக்டர், சமையல் ல  மஞ்சள்   சேர்த்துக்காம  இருந்தா  மஞ்சக்காமாலை  வராதா?

 அப்புறம் உங்களுக்கு மஞ்ச மாக்கான்னு  பேரு வந்துடும்


==============

10 டாக்டர் , குப்பை மேனி  இலையை   மேனி  பூரா தடவிக்கிட்டா மஞ்சக்காமாலை  கிட்டேயே வராதாமே?

 அப்புறம்  உன்சம்சாரமும் உன்கிட்டேயே வரமாட்டாங்க


=====================11 குருவே! எதுக்கு  எல்லா பொண்ணுங்களையும் ஃபாலோ  பண்றீங்க?
நாலும் தெரியனும்


அதுக்கு 4 பேரை  மட்டும் ஃபாலோவினா போதாதா? 400 எதுக்கு?

==================


12 ஜோதிடர்கள் தங்கள் பிரச்னைகளுக்கு ஜோதிடம் பார்ப்பார்களா ?

 வேற  ஊர்ல  போய்  ரகசியமா வேற  ஜோசியர்கிட்டேபார்த்துக்குவாங்க


================


13 டியர்! நாம 2  பேரும் சேர்ந்து சமைப்போமா?

ம், ஒரு வாரமா  சண்டை. பிரிஞ்சிருக்கோம்,முதல்ல சேருவோம்,அப்புறம் சமைப்போம். மையல் , பின் சமையல்


==============


14 நான்  டைரக்ட்  பண்ணா  அடுத்த  சீன்  என்ன? வரும்?னு  யாராலும்  யூகிக்கவே   முடியாது. இது சவால் அப்டியா? எங்கே  ? ஒரு ப்ளூ  ஃபிலிம் எடுங்க

==================


15  புதுக்காதலி = டியர்! நீங்க  எங்கே  வேலை  செய்யறீங்க?

புதுக்காதலன் = ஹூம், நான்  எங்கே வேலை செய்யறேன்?


=============


16 மேடம்,16  வருசத்துக்கு  முன்னே  நீங்க  சினி ஃபீல்டுக்கு  வந்தப்போ உங்களுக்கு  16  வயசு  இருக்குமா?


யோவ், எனக்கு  இப்பவே  18  வயசுதான்


========


17  டியர்!  நீங்க  என்ன   ஜாப்  ல  இருக்கீங்க?ன்னுஎங்கப்பா கேட்டுட்டு வரச்சொன்னார்

ஏதாவது  சால்ஜாப்  சொல்லி தப்பிச்சுடு


====================


18 சார்! நீங்க கணக்குல  புலியா?  நடிப்பில்  புலியா?

கணக்கு காட்றதுல  புலி # 100 கோடி

==================


19  போலீஸ் =  டேய், எங்கிருந்து   வர்றே?

கவர்மெண்ட் ஆஃபீஸ்ல  இருந்து

இந்நேரத்துல  ஏது  ?

 டாஸ்மாக் GOVT OFF தானே? # ரீமிக்ஸ்


==================


20 .ஏய்! மிஸ்டர்! ரோட்ல போற பெண்கள எல்லாம் உன் வீட்டுப் பெண்ணா பாரு.

ஓஹோ! என் வீட்ல என் சம்சாரமும், மச்சினியும் தான் இருக்கு


====================