Monday, February 02, 2015

வீட்டோட மாப்ளையா இருப்பவனுக்கு சாமி சத்தியமா மச்சினி இருக்காது ,அது ஏன்?

1  ரிசப்ஷனிஸ்ட்டை முந்திக்கொண்டு ஆபீசுக்கு சென்றிடு # வேலை விதி


===============


என் இரு கைகளுக்கும் வேலை தர வேண்டும் என்பதால் தான் அவள் ஒற்றை ஜடை யில் வருவதில்லை # ரெட்டை ஜடை ஜ(ம்)முனா


==============


3
தமிழன் பொங்கலை சிறப்பாக்கொண்டாட முக்கியக்காரணம் வருசத்துல 3 நாள் லீவ் தரும் ஒரே பண்டிகை அது என்பதால்தான்


================


4 வெற்றிலை போடவே அவசியம் இல்லாத இயற்கைச்சிவப்பு உதட்டழகி நீ!


===============


5 அதிகாலையில்  தினமும் 5 மணிக்கு எழுவதை  வழக்கப்படுத்தினால்  நீ அம்பானி!ஏழரை வந்தாலும் பரவாயில்லை என ஏழரை  வரை  தூங்கினால் அம்போ நீ!

================

6 நிச்சய வெற்றிக்கூட்டணி 1 முருகதாஸ் + விஜய் 2 ஹரி + சூர்யா 3 ஷங்கர் + விக்ரம் 4 ஆர் கே செல்வமணி+கேப்டன்


=============


7 பெரும்பாலான கடன் காரர் சொல்லும் பதில்.


 சார்.வாங்குன கடனை எப்போ கட்டுவீங்க?


 எனக்கு வர வேண்டிய பணம் வந்ததும்

===============

8
எனக்குப்பிடிச்ச பாட்டு இது தான் னு அஜித் ரசிகர் யதார்த்தமா " மீனம்மா! அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகம்"னு சொல்ல முடியாது


==============

9 இலியானா மாதிரி பொண்ணு கல்யாணத்தரகர் வேலை பார்த்தா அவரை "இடை" தரகர் னு சொல்லலாம்


===============

10  கை யை நம்பி பிழைப்பை ஓட்டிட்டு இருப்பவர்கள் 1 கை ரேகை ஜோசியர் 2 காங்கிரஸ் காரர் 3 குஷ்பூ


============


11  உன் குடும்பத்துடன் இருப்பதே பெரும் செல்வம் என்பதை உணர்ந்தால் நீ செல்வத்துக்காக வெளிநாடு போக மாட்டாய்!

==============

12 
பெரும்பாலான ஹோட்டல்களில் முள்ளங்கி சாம்பார்/முருங்கைக்காய் சாம்பார் தான் சமைக்கறாங்க.பஞ்சாபி யில் தான் பாசிப்பயிறுகுழம்பு ,கொள்ளு


=============

13  காலைல இருந்து ஒரு கால் கூட வர்லை.பேட்டரி டவுன் னு ஆல்டர்நேட்டிவ் பேட்டரி போட கழட்ன 46,விநாடில 8 கால்.அதெப்டிய்யா?;-))

============


14 மார்கழிப்பனி ,குளிரை சமாளிக்க பிரம்மச்சாரி தன் இரு உள்ளங்கைகளை தேய்த்து சூடாக்கிக்கொள்கிறான்


=============


15 திருமண ,விசேஷ நிகழ்வுகளுக்கு தம்பதியாகப்போனால் தனி மரியாதை ,தனியாகப்போனால் ஒரு மரியாதை என சொந்தங்கள் நம்மிடம் காட்டுகிறார்கள்


============

16 சம்சாரத்தோட பந்தில உக்காந்து சாப்ட்டா நைசா பல எக்ஸ்ட்ரா பலகாரம் அம்மணி இலைல இருந்து நகர்த்திக்கலாம் #தமிழேண்டா


===============


17 வீட்டோட மாப்ளையா இருப்பவனுக்கு சாமி சத்தியமா மச்சினி இருக்காது #,மாமனார் விவரம் இல்ல?


=============


18 நீங்கள் தினமும் டைரி எழுதுபவராக இருந்தால் சிரமப்பட்டு ஒரு வரியாவது சம்சாரத்தைப்புகழ்ந்து எழுதவும்.எப்படியும் பார்ட்டி படிக்கும்


==========

19 பிரம்ம முகூர்த்தத்தில் நீ அதிகாலையில் எழுந்து விட்டால் அன்றைய நாளின் வெற்றி முகூர்த்த நேரம் உருவாகி விடும்


===============


20 பெற்றோரின் 25 வருட அனுபவம் எந்த செலவும் இல்லாமல் உனக்குக்கிடைக்கும் பொக்கிஷம்.எந்த பிரச்சனைக்கும் பெற்றோர் ஆலோசனை கேள்!


===============

0 comments: