Monday, February 16, 2015

சம்சாரம் கூட சண்டை போடனும்னு முடிவு பண்ணிட்டா முதல் கட்டமா என்ன செய்யனும்?

1  ஸ்கூட்டியை ஓவர்டேக் பண்றவன் புத்திசாலி. 2 அடி கேப் விட்டு பின்னாலயே போறவன் பாக்யசாலி சரிக்கு சமமா கூடவே போறவன் சாமார்த்தியசாலி=============


2 நடப்பது ராம ராஜ்யம்.டெல்லிக்கு ஒபாமா வருகைக்காக குரங்குகளை விரட்றாங்களாம்.இது ஏதோ சாமி குத்தம் ஆகப்போகுது னு ஜோசியர் மோடியை எச்சரிக்கலை?

============


3 எனக்குத்தெரிஞ்ச வரை வாட்சப்பால ் 1 புது புது பிகரு நெம்பர் க்ரூப் அட்மின் மூலம் கிடைக்குது 2,நெட் ல வரும் புது பிட் ,செல்பி கில்மா


==============

4  தேசிய அளவில் உடலுறுப்பு தானத்தில் தமிழகம் ""முதலிடம்""# காதலுக்காக இதயத்தை குடுத்த கணக்கு பார்த்தா உலகத்துலயே தமிழன் தான் முதல்ல


===========

5 3ஷா வை விட 9 தாரா 3 மடங்கு அழகி என கணக்குப்போடுவதும் ஒரு அரித்மேட்டிக் மிஸ்கால்குலேசனே!


===============


6  வீர பாண்டியக்கட்டபொம்மனே இப்ப இருந்தாக்கூட எமி ஜாக்சனின் ஆடைக்குறைப்பை எதிர்த்திருப்பாரா?என்பது சந் தேகமேஏ!


===========


7 தமிழனின் மிகப்பெரிய பலமும் ,பலவீனமும் ஒன்றே! தன் மனதுக்குப்பிடித்த பெண்ணுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பது!


============


8 சம்சாரத்துக்கு ,சமையலுக்கு உதவியா காய்கறி அரிந்து  தரும்  புருசன் கூட  ஒரு அரிஞனே!# அறிவோம் அறி(ரி)ஞர்கள்
================
9  அம்மா வின்  விருப்பம்  = பொங்கி எழு மனோகரா!

சம்சாரத்தின் விருப்பம் = சோறு பொங்கிய பின் எழுப்பி விடு புருஷா!


===========
10 கூந்தல்  நீளமா  இருக்கும் பெண்  வேணும்னு  தமிழன்  தேடறான், இதுல  சோகம்  என்னான்னா  அவனுக்கு  வாய் நீளமா  இருக்கும் பொண்ணுதான்  கிடைக்குது
==================
11  ஆர்யா  யார் கூடக்கூத்தாடினாலும்   கிசு கிசு எழுதும் காரியத்தில் கண்ணாயிரு
================


12 மாமா  பொண்ணைக்கூட்டிட்டு  ஒரு முறையாவது மகாபலிபுரம் போகாதவனும் ,அத்தை பொண்ணைக்கூட்டிட்டு  ஊட்டி  போகாதவனும் வாழ்நாள்  பூரா வருத்தப்படுவான்


==================

13 எனக்கும் , பொண்ணுங்களுக்கும் ஆகாதுன்னு  ஒருத்தர்  வாய் சொல்லிட்டு இருந்தா  அவர்  கை ஏதாவது  ஜடையைப்பிடிச்சு இழுத்துட்டு இருக்கும்


==============14 இந்தியாவுக்கு  வந்துட்டார் ஒபாமா!
ஆனாலும் எங்க வீட்ல எப்பவும் போல் உப்புமா!


================


15 பெரும்பாலான  காதலிங்க  கிட்டே காதலன்  சொல்ற அழகுப்பொய்- எனக்குள்ளே  ஒரு  குழந்தை ( மனசு  ) ஒளிஞ்சிட்டு இருக்கு

==============


16 சப்போஸ்  சம்ரிதா  அழகிய  பெண்ணா  இருந்தா ஹேண்ட்சம் ரிதா என அழைக்கலாம்


=============


17 சம்சாரம்  கூட சண்டை  போடனும்னு  முடிவு  பண்ணிட்டா  முதல் கட்டமா  குழந்தையை  மாமியார்  வீட்ல  விட்டுட்டு  வந்துடனும்


==============18 அன்பே! நிர்மலா! உன்  தொண்டையில்  ஏன்  எப்போதும்  இருமலா! உனக்கும்  சிரப்பு  வரவேற்பு அளிக்கிறேன். டானிக் குடி !


=============19 ஒபாமா வும்  மோடியும்   கட்டிப்பிடிச்சு  கொடுக்கும்  போஸ்  இருவர்  படத்தில்  மோகன்லால்(எம்ஜிஆர்) , பிரகாஷ்ராஜ்(கலைஞர்) போஸ்  போல்  இருக்கு


=================


20 ஒ!பாமா!  பாமாயில் வாங்க  ரேஷன்  கடைக்குப்போலாமா?ன்னு மொக்கைக்கவிதை எழுதுனாக்கூட அதை  ஒபாமா  டேக்ல  போட்டுடுவாங்க போல 


=================

2 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...
ரசிக்க வைத்தது...

Bharat kumar said...

Nice Post

-- Please Follow my blog

bharatkumarr.blogspot.in