Sunday, February 01, 2015

அன்பே லில்லி டோன்ட் பி சில்லி

1 வீட்டு சாப்பாடு மாதிரியே எங்க ஹோட்டல் ல சாப்பாடு இருக்கும்


குட்.டேஸ்ட் லயா?நோ.பரிமாறுவதில்.திட்டிட்டே பரிமாறுவோம்

================

இந்த மாசம் உங்களால கம்பெனிக்கு 25000 RSநட்டம்.என்ன பண்ண? 


சிம்ப்பிள் சார்.போன மாசம் என்னால 75000 லாபம்னீங்களேஅதை டேலி பண்ணி மீதிகுுடுங்க


=============

3  சார்.உங்க எழுத்து ரொம்ப மோசமா இருக்கே?


 இருக்காதுங்களே? டைப் தானே பண்றேன்? 


================


4  
சயின்ஸ் மிஸ் சமந்தா = மச்சக்கன்னியை எப்டி அடையாளம் கண்டுபிடிப்பே? 


லொள் மாணவன் = உடம்பு பூரா நிறைய மச்சம் இருக்கும் டீச்சர்


==============\


5 இண்ட்டர்வ்யூவில்  


்நீங்க படி ஏறி வந்த மாடில எத்தனை ஸ்டெப் இருந்தது?


 சரியா கவனிக்கலைங்க.18 வது ஸ்டெப்ல உங்க ஸ்டெப்னி உக்காந்து அழுதுட்டு இருந்துது


================


உங்க நாக்குல சனி குடி இருக்கு.


 பிரமாதம் ஜோசியரே?வாடகை எவ்ளவ் தரும்?


=================


7
உங்க ஜாதகப்படி உங்களுக்கு 2தாரம்.இதுக்கு பரிகாரம் இருக்கு 


அதெல்லாம் வேணாம்.ஒரு தாரம் இங்கே இருக்கு.இன்னொரு தாரம் எங்கேஇருக்கு?அட்ரஸ்?

=============


8 அத்தான்.டெய்லி என் காதோரம் வந்து ஐ லவ் யூ சொல்லனும்


 சரி.இந்த ஜிமிக்கியைக்கழட்டு.4 பவுன் தேறும் போலயே!


=============


டாக்டர்.தூங்கிட்டு இருந்த நர்ஸ் கையைப்பிடிச்சு என் புருசன் இழுத்துட்டாரு. 


ஓஹோ.தூக்கத்துல மடக்கற வியாதியா?


===============


10
சார்.நீங்க கேட்டபடி 200 கோடி ரூபா இந்தாங்க.
 அப்டியே பாண்ட் பேப்பர்ல சைன் பண்ணுங்க.
 நட்ட ஈடு கேட்கமாட்டேன்.உண்ணா விரதம் இருக்க மாட்டேன்னு


==============


11
சென்னிமலை போக 11 ம் நெம்பர் டவுன் பஸ் ல தானே போகனும்?நீங்க ஏன் 5 ம் நெம்பர் பஸ் ல ஏறிட்டீங்க?


 ஜோசியர் தான் எனக்கு 5 ராசியான நெம்பர் னாரு


==============


12 
சார்.3மணி நேரம் பர்மிசன் வேணும்.


 ஸாரி.அரை மணி நேரம்தான் அலோடு 


அப்போ 6 டைம் அரை மணி நேர பர்மிசன் வேணும் சார்.


==============


13 என் காதலருக்கு  சில்லி  புரோட்டான்னா  ரொம்ப பிடிக்கும்,அதான் அவரை எனக்கு ரொம்ப  பிடிக்கும்,

அன்பே லில்லி டோன்ட் பி சில்லி 


================


14
அத்தான்.எல்லா சேலையையும் நனைச்சு வெச்ட்டேன்.துவைச்சி முடிச்சுடுவீங்க்ளா? 


டோண்ட் ஒர்ரி.டியர்.நீ நனைத்ததை (துவைத்து) முடிப்பவன் நான் நான்


================


15 அது ஏன்ணணே விடியறதுக்கு முன்ன வாக்கிங் போறிங்க ? ;-))))" 
பொண்ணுங்க கோலம் போடற டைம் முடியறதுக்குள்ளே போய்ட்டா கண்ணுக்கு நல்லது 


==============


16  ராஜா வின் தங்கை இறந்துட்டாங்க.இதை அவருக்கு sms பண்ணிட்டு கீழே என் பேரை போட்டுடு. 


ம்.ஓகே. 


டியர் சார்.யுவர் சிஸ்டர் எக்ஸ்பயர்டு - பை மாடசாமி 


==================


17 
மேடம்.இயல்பான நடிப்புதான் வேணும்.நீங்க நடிப்பதே தெரியக்கூடாது. டோன்ட் ஒர்ரி டைரக்டர் சார்.எனக்கு நடிக்கவே தெரியாது


==============


18  ஆன்மீக மிஸ் ஆரவல்லி = காயத்ரி மந்திரம் சொல்லு


 லொள் மாணவன் = ஓம் க்ரீம் காயத்ரி நமஹ 


================

19
சலூன் கடைல என்ன தகராறு?


 இங்கு கட்டிங் = 150 ரூபா னு போர்டு பார்த்துட்டு நம்ம தலைவர் அநியாயம்.டாஸ்மாக்ல 50 ரூ தானேன்னாராம்

================


20 டாக்டர்! டெங்கு காய்ச்சல் வந்தா  முதல் கட்டமா  என்ன செய்யனும்?

போலி டாக்டர் கிட்டே போய்  ஏமாறக்கூடாது=================== 0 comments: