Sunday, February 08, 2015

இந்தியக்கிரிக்கெட் வீரர்களும் , கள்ளக்காதலிகளும்

1  தாறுமாறாய் தலைக்கேறிய போதை: மனைவியைக் கொன்ற கணவன் கைது @ கோவை.# பார்ட்டி தெளிவா இருக்கும்போதுதான் போட்டுத்தள்ளி இருப்பாப்டி


============: கிரண்பேடி பாஜகவில் இணைந்தார். -செய்தி # மோடி கட்சியில் இணைந்த லேடி கிரண்பேடினு ஹெட்டிங்நியூஸ் போடுவாங்க்ளோ?

============


‘ஐ’ படத்திற்கு எதிராக திரளும் திருநங்கைகள்: ஷங்கர் வீட்டு முன் போராட முடிவு # ஐஐயோ னு அலறி இருப்பாரா?


================

4  டியர்.நம்ம காதல் தான் ஊத்திக்குச்சே.எதுக்கு சக்சஸ் பார்ட்டி? ஊத்துனதை ஊத்தி மூடத்தான் சக்சஸ் பார்ட்டி வைக்கனும்.இதான் இப்போ ட்ரெண்ட்


===================


5  சுனந்தா கொலை வழக்கு: மீடியாக்கள் எனது பெயரை கெடுக்கின்றன சசிதரூர் குற்றசாட்டு # இல்லியே.உங்க பேரை சரியாதானே போட்டாங்க?================


6  வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் ஆளுங்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் -கருணாநிதி # எல்லாம் நாம பண்ணுனதுதானே தலைவரே!


==============7
ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தலிலும் அதிமுகவை ஆதரிப்போம்-சரத்குமார்# ராதிகா ,சரத் ,வரலட்சுமி ன்னு 3 ஓட்டு கெட்டி


===========


விஜய் ஆங்கிலப்படத்தில் நடிக்கபோகிறார்.- செய்தி # டைட்டில் ல இளைய தளபதி க்கு இங்க்லீஷ் ல என்ன னு போடுவாங்க?===============


9  மக்களின் எதிர்பார்ப்புகள் காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரிவது இல்லை -பிரியங்கா# அம்மா ,சகோதரர் கூட சண்டை போல.தன் குடும்பத்தையே தாக்கிக்கறார்


============
10
கலகலத்து போயுள்ள திரையுலகம்! சென்சார் போர்டு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா!!# மீராநாயர் ,SJ சூர்யா ஹேப்பி அண்ணாச்சி

===============11
கெஜ்ரிவாலை விட கிரண்பேடி மேல்:ராம்தேவ் # காமாலைக்காரன் கண்ணுக்கு ஊர்மிளா கூட மஞ்சுளாவாத்தான் தெரியும் சுடிதார் சாமி!

=================

12  தமிழ் சினிமா சூழல்தான் உலக அளவில் சிறப்பாக உள்ளது: - இயக்குநர் வெற்றிமாறன் # ஆமாங்க்ணா, ஆளாளுக்கு 100  கோடி வசூலிச்ட்டோம்கறாங்க

============


13 10  படத்துக்காக ஸ்ரீதேவியின் வளர்ப்பு மகளாக மாறும் கமல் மகள் # காலம்  மாறலாம் , ஆனா  முறை  மட்டும் மாறலை


==================14  ஜல்லிக்கட்டு மேற்கத்திய கருத்தாக்கம்; பாஜக அதை எதிர்க்கிறது: அமைச்சர் மேனகா காந்தி # மேடம், நம்ம  ஹேர் ஸ்டைல் கூட  ஃபாரீன் ஸ்டைல் தான்
==============


15 டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜியின் மகள் போட்டி # மன்னராட்சி  முடிஞ்சாலும்  மக்களாட்சியில் அது  தொடருது
===============


16  மனைவிகளுக்கும் தடை, காதலிகளுக்கும் தடை.. சோகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் # கள்ளக்காதலிகளைப்பத்தி  எதுவும்  சொல்லலையே?
================


17 அமீத்ஷாவுடன் விஜயகாந்த், அன்புமணி சந்திப்பு # சகாப்தம்  படப்பெட்டியைத்தூக்கிட மாட்டீங்களே?
அதை எல்லாம்  ஒரு படமாவே நினைக்கலை
================


18  பன்னீர்செல்வம் புடவை கட்டி நிற்கிறார்; ஜெ வேட்டி கட்டி நிற்கிறார்-விஜயகாந்த்#  எப்டியோ   தடுமாறாம நின்னுட்டு இருக்காங்க கேப்டன், நாம?
=================


19  ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது - ஜி.கே.வாசன் # எப்டியோ  டெபாசிட்  தப்பிச்சுட்டுது,ராஜதந்திரிய்யா நீர்


===============


20 ஸ்ரீரங்கத்தில் அதிமுகவிற்கே வெற்றி -சரத்குமார் #ஆளுங்கட்சி தான்  இடைத்தேர்தல்ல  ஜெயிக்கும்னு பேபிக்குக்கூடத்தெரியுமே?சித்தப்பு


=================

1 comments:

dfgtrdefg said...

உங்கள் தளத்தில் விளம்பரம் போட மாதம் எவ்வளவு