Monday, February 02, 2015

இசை- சினிமா விமர்சனம்

எஸ் ஜே  சூர்யா வின்  கிராஃப் வித்தியாசமானது.முதல்  படம்  அல்டிமேட் ஸ்டாருடன்  வாலி( லவ் த்ரில்லர்), 2வது  படம்  இளைய தளபதியுடன்  குஷி( அன்பே வா  டைப்  ரொமாண்டிக் காமெடி), 3 வது  படம் அவரே  நாயகனாக  வலம் வந்த    நியூ ( சயின்ஸ் ஃபிக்சன் ரொமாண்டிக் காமெடி),4 வதா அ ஆ,( ரொமாண்டிக் காமெடி) .இவர்  இயக்காமல்  ஹீரோவாக மட்டும் நடித்த  கள்வனின்  காதலி ( லவ்),நியூட்டனின் மூன்றாம் விதி ( ரிவஞ்ச்) .நீண்ட  இடைவெளிக்குப்பின்  இப்போ இசை.இந்தப்படத்தின்  கதை  இளையராஜா - ஏ ஆர்  ரஹ்மான்  சம்பந்தப்பட்ட  கதை  என்பதால் ஏ ஆர் ஆர்  இசை  அமைக்க  மறுத்தது  தனிக்கதை. சூர்யாவே  இசையும் . டி ஆர்க்கு கிட்டே  வந்துட்டார். இவரோட  இயக்கத்தில்  இசை  படம்  எப்டின்னு பார்ப்போம்.

இளையராஜா   20  வருடங்கள் தமிழ்  சினிமாவின்  தீர்மானிக்கும் சக்தியா  கோலோச்சி  வந்தார். பாரதிராஜா , பாலசந்தர் , கோவைத்தம்பி  போன்ற  பெரிய ஆட்களுடன்  மோதல்  வந்தபோது  பரஸ்பரம்  விலகிக்கொண்டனர் .அது தமிழ்  சினிமாவுக்குப்பேரிழப்பு. ஆனால்  மணிரத்னம்  மட்டும்  அவருக்குப்போட்டியாக   ரோஜா  மூலம்  ஏ ஆர் ஆரை  கொண்டு  வந்து இந்திய சினிவாவின்  இசை சரித்திரத்தையே  ஒரு புரட்டு  புரட்டினார்.

இளையராஜாவால் சாதிக்க முடியாத சர்வதேச  மார்க்கெட்  ரஹ்மானால்  சாதிக்க  முடிந்ததுஆஸ்கார்  அவார்ட் அள்ள முடிந்தது. பேசிக்கலாம்  ராஜா  கொஞ்சம்  கர்வம்  உள்ளவர் , ரஹ்மான்  பணிவின் சிகரம் . இந்த   பாயிண்ட்டை  கையில்   எடுத்து  குருவை  மிஞ்சிய  சிஷ்யனை குரு எப்படி பழி வாங்குகிறார்  என்பதை கற்பனை கலந்து எடுத்த  படம் தான்  இசை. 


ஹீரோ   ஃபேமசான இசை இயக்குநர். அவர்  வாழ்க்கைல  சில விநோதமான  சம்பவங்கள் நடக்குது. தன்னைச்சுத்தி ஏதோ  சதி  வலை  பின்னப்படுதுன்னு  தெரிஞ்சுக்கறார். அவர்  எப்படி  அந்த  சதியிலிருந்து  தப்பறார்? என்பதே  திரைக்கதை ,


ஹீரோவா எஸ்  ஜே சூர்யா . நியூவில்  பார்த்த  முகத்துக்கு முற்றிலும்  அகல நியூ முகம். சரக்கு  அடிப்பதைக்குரைச்சுக்கலைன்னா  கேப்டன்  ரேஞ்சுக்கு  கன்னங்கள் , முகம்  சதை  போட்டுடும், உஷார். முன்  பாதியில்  நாயகியுடன்  சரச  சல்லாப  காதல், டபுள்  மீனிங்  வசனங்கள்  என  அக்மார்க்  சூர்யா  முத்திரை .  ஓக்கே .பின் பாதியில்  படம்  ரொமான்சில் இருந்து  சைக்கோ த்ரில்லராக  மாறிய  பின்   சூர்யா  நடிப்பு  அருமை . அருமையான  நடிப்பு . வெல்டன்  2 வது  ஹீரோவா  அல்லது  வில்லனா  வரும்  சத்யராஜ்  இதுவரை  காட்டாத  சில   முக  பாவனைகளுடன்   அசத்தறார்.பின் பாதியில்  இவரது வில்லத்தனத்துக்கு செம அப்ளாஸ்  எனில்  முன் பாதியில்  கஞ்சா  கருப்புடனான  காமெடியில்  கலக்கல்  ரகம்,

 ஹீரோயினா   கிரண்  சாயலில்  கிரங்க  வைக்கும் அழகுடன்  சாவித்திரி.கிளாமர்  காட்சிகளில்  வகை  தொகை இல்லாமல்  வாரிவழங்கும் வள்ளல் ஆகி இருக்கார். தமிழனுக்கு  இந்த மாதிரி  தாராள  மனசு உள்ள  பொண்ணுங்கன்னா ரொம்பப்பிடிக்கும்


ஹீரோயினுக்கு தங்கச்சியா  ஒரு  ஃபிகரு   கலக்குது.செம  கிளாமர். அவர் ஹீரோவை    ரேப்ப  ட்ரை  பண்ணுவது  கலக்கல் . ஹாலிவுட்  படமான  டிஸ்க்ளோசரில் கூட  இப்படி  விஸ்தீரணமா   காட்டலை 

மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  தன்னோட வெற்றியை தக்க வெச்சுக்க தன்னையே இழக்கவும் தயாரா இருக்கான் மனுசன் # இசை


2  நான் பிச்சை போட்ட இசை ல கிடைச்ச வெற்றிடா இது #,இ ராஜா அட்டாக்கிங்
3  : நான் துப்புனாலே இசை தான்


ஓ.புதுசா துப்புங்க னு தான் கேட்கறோம் # இசை4  அய்யா என்னை ஆசீர்வாதம் செய்யுங்க.மனசாரச்சொல்றேண்டா.உனக்கு எவ்ளவ்.தேவையோ அந்தளவு பெரிய ஆள் ஆவே # இசை ( இ ராஜா  ஏ ஆர் ஆர் )


5  என்னோட வருமானம்  குறைஞ்சாலும் உன்னோட சம்பளத்தைக்குறைச்சேனா? நீ ஏண்டா எனக்குத்தரும் மரியாதையைக்குறைச்சே? #,ராஜா அட்டாக்6  எத்தனையோ லவ் சீனுக்கு நான் ம்யூசிக் போட்டிருக்கேன்.நானே லவ்வில் விழுந்தா யார் ம்யூசிக் போடுவா? # அனிரூத் அட்டாக்


காதலிப்பது தப்பா?
பேதைப்பெண்ணே! காதலிக்காமல் இருந்தால் தான் தப்பு  # இசை


8 எனக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கு.ஆனா ஓசி ல சோறு திங்கற மாதிரியே இருக்கு.ஏன்னா என் இசைக்கு மார்க்கெட் இல்லையே # ராஜா அட்டாக்


9  15 காதலன் முத்தத்தைக்கேட்டா காதலி மொத்தத்தையும் கொடுக்கனும் # இசை10  என் கிட்டே என்ன எடுத்துக்கணும்கற முடிவை நீங்க எடுங்க.எப்போ எப்டி குடுக்கறது னு முடிவை நான் எடுக்கறேன் # இசை11   கசக்கற மருந்தை  கசக்காம  கொடுப்பியா? எப்டி?இப்டி!  # இசை

12     10 தலை முறை க்கும் உங்க இசை பேசும்ஆனா இந்த தலைமுறை ? # இசை13 : ஒருத்தனாவது  என் கால்ல வந்து  விழுந்து அவன் இசை சரி இல்லை.நீங்கதான் படத்தைக்காப்பாத்தனும்"னு சொன்னா அப்போ போடுவேன் பாரு ஒரு ஹிட் மியூசிக்14  எல்லாப்பயலும் நாய் மாதிரி மறுபடியும் என் காலடி வந்து விழப்போறாங்க # ராஜா அட்டாக் @ இசை


15  சார்.சாங் சிச்சுசேசன் என்னான்னா,


கொஞ்சம் இருங்க.இன்னைக்கு என் சிச்சுவேசனே சரி இல்லை # இசை


16   கஞ்சா கருப்பு =
நல்ல சிஷ்யன்
கெட்ட குரு # இசை16  சத்ய(ராஜா)=  என் இசை ல இருந்து ஏதாவது சுட்டியா?
சூர்யா (ரஹ்மான்) = இல்லியே # இசை
17  போராடி ஜெயிச்ச இடம்  ,20 வருசமா ஆண்டு அனுபவிச்ச இடம் .யாருக்கும் விட்டுத்தர முடியாது # இசை1 8 நான் சொல்ற பிளான் படி நீ நடி.நீ எனக்கு பிளான் சொல்லித்தராதே # இசை19  உலகத்துலயே  பெரிய சந்தோஷம் எது தெரியுமா? நமக்கு துரோகம் பண்ணவங்களை நம்ம கையாலயே கொல்வது # இசை
20   : நீ என்ன பண்ணாலும் அவரை ஜெயிக்க முடியாது  #,இளையரஜா வை அட்டாக்
21  அவன் கிட்டே நடிக்கச்சொல்லி அனுப்பினா நீ என் கிட்டேயே நடிக்கறியா? சத்யமா சொல்றேன்.உன்னைக்கொன்னுடுவேன் # சத்யராஜ் அப்ளாஸ் ஆக்டிங்22  வழக்கமாக தமிழ்ப்படங்கள் பின் பாதியில்  தடுமாறும்.ஆனால் இசையில்  பின் பாதி திரைக்கதை  ந்டிப்பு இயக்கம் பட்டாசு #,எஸ்.ஜெ சூர்யா ராக்கிங்
 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  இசை=3 மணி நேரம் 10 நிமிசம்.அடேங்கப்பாஹீரோ ஓப்பனிங் சீன்  பிரமாதமா எல்லாம் இல்ல.சிம்ப்பிள் .நியூ ல நல்லாருந்தது3   ஹீரோவை விட.வில்லன் ஓப்பனிங் டாப்.சத்யராஜா? கொக்கா? சாரி ஹைட்லயே அவரு கொக்கு தான்


4 எஸ் ஜே சூர்யா கேரக்டர் என்னவோ  ஏ ஆர் ஆர்  தான்.ஆனா அவர் பாடி லேங்க்வேஜ்  யுவன் சங்கர் ராஜா5   ஹீரோயின் 7 பவுன் ல அரனாக்கயிறு சைஸ்ல ஒட்டியாணம் போட்டிருக்கு.அது இடையில் ஒட்டாம  தத்தளிக்குது .போட்ரா பாட்டு சீனை6    ஹீரோயினுக்கு லைட்டா தொப்பை இருக்கு.டைட் க்ளோஸப் அங்கன வெச்சா  டக் னு வயிறை எக்கிக்குது.வாட்டே பியூட்டி7 இசை  பாடலுக்கு பின்னணி இசைக்கு  முதல் வகுப்பில்  பாஸ்
8  ஹீரோயினுக்கு ஒரு தங்கச்சி.ஹீரோயினை விட அழகு எஸ் ஜே சூர்யா டச்


9 சத்யராஜ்  கஞ்சா கருப்பு  கலக்கல்  நடிப்பு10முன் பாதி யில் வழக்கமான எஸ் ஜே சூர்யா டச் குறைத்து மணிரத்ன டச்.சபாஷ்


11   சிராக்கோ கில்மாப்பட  வாஷ்பேசின்  கை கழுவி விடும் சீன் உல்டா ரீமிக்ஸ் @ இசை12  ஹீரோயின்  ஹீரோவுக்கு மருந்து தர்றேன்னு சொல்லிட்டு கொக்கோக முனிவரின் சாஸ்திரத்தை அரங்கேற்றிட்டு இருக்கு.ஈஸ்வரா! ஈஸ்வரி # இசை13 மணிரத்னம் வீட்டுக்கே போய் இ ராஜா மிரட்டி இருக்கார் போல .ரோஜா ஹிட்டுக்குப்பின் # கற்பனையாவும் இருக்கலாம்.#,இசை14  ஹீரோயின் சர்ச்சில்  பாதர் என நினைத்து ஹீரோவிடம்  பாவ மன்னிப்பு கேட்கும் காட்சி  தியேட்டரில் அதகளம் #,ஆனால் செயற்கை


15 நிலா தாக்குதே அப்டி னு பாடல் வரி அடிக்கடி வருது.அன்பே ஆருயிரே  நாயகி நிலா வுக்கான குறியீடு போல .நன்றிக்கடன்
16  ரஜினி ,அஜித் ,விஜய்  பாராட்டி ஒரு வசனம் வருது.வரிசையை கவனிங்க.வெற்றி பவனிங்க # இசை17  நடன அமைப்பு ( அதோ வானிலே நிலா போகுதே) ஆசையை காத்துல தூது விட்டு உல்டா ரீமிக்ஸ்.ஆனா குட் # இசை


18  க்ளைமாக்சில்  சொல்ல வேண்டிய ட்விஸ்ட்டை இடைவேளை வரும்போதே சொல்வது ஏனோ? ஒருவேளை வேற ஒரு ட்விஸ்ட் இருக்குமோ? # இசை


19 பின் பாதி 3 ,குடைக்குள் மழை  .மயக்கம் என்ன  பின் பாதி போல் போகுது # இசை20   தமிழ் சினிமா சரித்திரத்திலேயே 2 வது முறையாக வில்லி ஹீரோ வை அட்டெம்ப்ட் ரேப் சீன்.அடடே #,இசை21  ஹீரோவாக வருவதை விட  திரைக்கதை ,இயக்கத்தில் ,இசை யில்  வசனத்தில்  எஸ் ஜே சூர்யா கலக்கறார் .ராக்கிங் # இசை22  : பின் பாதி திரைக்கதையில்  விஷால் நடித்த சமர்  பாதிப்பு23  திருச்சிக்குப்பக்கத்துல விராலிமலை  னு ஒரு டயலாக் வருது.புதுக்கோட்டைக்குத்தானே அது பக்கம்.எட்ரா அந்த கூகுள் மேப்பை


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  கஞ்சா  கருப்பு  சத்யராஜ்  சம்பந்தப்பட்ட  காமெடி காட்சிகள் தியேட்டரில் செம  ரெஸ்பான்ஸ். இளையராஜாவை  செம  ஓட்டு  ஓட்டிட்டாங்க 


2   ஹீரோயின்   ஹீரோவுக்கு  மருந்து  கொடுக்கும்  காட்சிகள்  எல்லாம் விக்ரம்  பட  கமல் டிம்பில் கபாடியா  சீனையே   தூக்கி  சாப்பிடுபவை  கிளாமரில்


3  பின் பாதி  சைக்கோ  காட்சிகள்  அதில்   ஹோட்டல்  ரிசப்ஷனிஸ்ட்    கேர்ளின்  அட்டகாசமான  நடிப்பு , சூர்யா வின்  ரீ ஆக்சன் 


4   எல்லா  வாரும்  வாரிட்டு  க்ளைமாக்சில்  அடிச்ச  அந்தர்  பல்டி 


இயக்குநரிடம்  சில கேள்விகள் ,திரைக்கதையில்  சில ஆலோசனைகள்1   ஓப்பனிங்  சீன்லயே   வில்லனை  வில்லனா  காட்டி இருக்கத்தேவை  இல்லை . சீன்  பை  சீன்   காட்டி பின்  இடைவேளை டைமில்   ட்விஸ்ட்டாக  வெச்சு  இருக்கலாம். 


2  சத்யராஜ்  சாதிச்ச இசை  , அவர்  பெருமை  இன்னும்  நல்லா   காட்டி  இருக்கலாம். திரைக்கதையில்   ராஜா - ரஹ்மான்  போர்சன்  சாமார்த்தியமா  தவிர்க்கப்பட்டிருக்கு. ரொமான்ஸ்   எல்லாப்படத்துலயும்  காட்டுவதுதானே? இதே  மணிரத்னம்  இயக்கி  இருந்தா   இருவர்  போல்  இசை  ஒரு ஆவணப்படம்  ஆகி  இருக்கும். டீட்டெய்லா  காட்சி யை  முன் வெச்சிருப்பார் ( படம்  ஊத்தி  மூடி  இருக்கும்  என்பது  வேறு  விஷயம்)3 ஹீரோவை  மன நலன்  பாதிக்கப்பட்டவரா  காட்ட எடுக்கும்  முயற்சிகளில்  பல சறுக்கல்கள்.  சோபா  மேல  பேக்  வெச்சது , வைக்காதது  போல்  காட்டுவது  ஓக்கே , ஆனா  அவர் சாப்ட்டாரா?  சாப்டலையா?  என குழப்பும்  டெக்னிக்  தப்பு . அவர்  வயிறு  பசி  காட்டிக்குடுக்காதா? சமையல்காரன்  சொன்னா  நம்பிடுவாங்க்ளா?


4  வில்லி   ஹீரோவை  ரேப்  செய்ய  முயற்சிப்பதில்  ஒரு  நளினம் இல்லை. அதாவது  ஒரு ஆண்  வேணும்னா  அவசரமா  காரியம்  முடிஞ்சா  சரினு  அவசர அவசரமா  ஏனோ தானோன்னு  ரேப்ப  முயற்சிக்கலாம்.ஆனா ஒரு  பொண்ணு  இப்படி  அமெச்சூர்த்தனமாவா  ஆம்பளையை  ரேப்  பண்ணுவா?( ரேப் பண்ண  ட்ரை  பண்ணுவா?)


5  ஹீரோ  ஒரு  உத்தம  பத்தனன் அப்டினு  எங்கயும்  காட்டலை.  சோ  அவர்  தன்  மச்சினியோட   கில்மா  இன்விடேஷனுக்கு   மறுப்பது  ஒத்துக்கவே  முடியலை  ( அடடா  சீன்  போச்சே )முழுச்சாப்பாடு  சாப்பிட இஷ்டம் இல்லைன்னாலும்  அட்லீஸ்ட்  பாயாசம் , அப்பளம்  கூடவா ஒருத்தன்  சாப்பிட  ட்ரை  பண்ண மாட்டான்? அம்புட்டு  நல்லவன்  இந்த  உலகத்துல  எங்காவது  இருக்கானா? இதுல  மச்சினி  வேற   பால்கோவா மாதிரி  இருக்கு,சம்சாரத்தை விட சுமார் அழகுன்னாலும்  ஓசி ல  கிடைக்குதேன்னு  ஒரு கைப்பார்க்கும்  தமிழன்  சம்சாரத்தை விட  அழகான  தானா வந்து படிஞ்ச பாதாம் பாலை  வேணாம்பானா>?


6  பின்  பாதில   பெட்ரூம்ல  ஹீரோ  ஹீரோயின்   கில்மா  எல்லாம்  முடிச்ட்டு  படுத்துட்டு  ரிலாக்சா  இருக்கும்போது  அந்த  அடியாள்  எப்டி  பெட்ரூம்  உள்ளே  வர்றான் ? இவங்க  தான்  தாழ்  போட்டுக்கிட்டாங்களே?  சப்போஸ்  பிளான்  படி அவன் ஆல்ரெடி  உள்ளே தான்  இருந்தான்னா  லைவ்  ஷோ  பார்த்துட்டானா?  அதுக்கு ஹீரோயின்  எப்டி  ஒத்துக்கிட்டா/?7  என்ன தான்  எதிரியைப்பழி  வாங்கனும்னாலும்  யாராவது  தன் சொந்த  மகளை  பலிகடா ஆக்குவாங்களா? 8 க்ளைமாக்சில்  அப்பாவே  மகளை  கொலை  செய்யச்சொல்வது  அபத்தம் .  ஹீரோவைக்கொலைப்பழியில்  மாட்டி  விட  திட்டம்  என்றாலும்  அதில்  லாஜிக்  மிஸ்டேக்  இருக்கு . ஆல்ரெடி  மனநிலை  பாதிக்கப்பட்ட ஹீரோ  கொலை  செஞ்சாலும்  சட்டம்  அவரை தண்டிக்க  முடியாதே? சி  பி  கமெண்ட்  = : இசை - ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கான சைக்காலஜிக்கல் த்ரில்லர் - க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் சமாளிப்பு - விகடன் மார்க் = 43 ,ரேட்டிங் = 3 / 5ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  43குமுதம்  ரேங்க் ( கணிப்பு)=  ஓக்கே ரேட்டிங்  =  3/5 


 விருதாச்சலம்

Vridhachalam jai Sri Krishna
 Embedded image permalinka
டிஸ்கி


புலன் விசாரணை  பாகம் 2 - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2015/01/2_29.html
டூரிங்  டாக்கீஸ் - சினிமா விமர்சனம் ( இளைய தளபதி யின் அப்பா படம்)


http://www.adrasaka.com/2015/01/blog-post_30.html

0 comments: