Thursday, February 19, 2015

முதல் இரவு அறைக்குள்ளே போகும்போது எப்படிப்போகனும்?

1  ஜோசியரே!செத்துப்போன பச்சைப்பாம்பை  நீவி விட்டா சமையல் நல்லா வரும்னு சொல்றாங்களே, நிஜமா?

பாம்போட  ரிலேசன்ஸ் வீட்டுக்கு வந்துடப்போகுது


================

2  குருவே! மயில்  இனம் போல்  மனித இனத்தில் ஆண்  அழகில்லைனு பேசிக்கறாங்களே? நிஜமா?ஆமா, உருவ அழகில்  சுமார்தான், ஆனா  உள்ள அழகில் ஆண் முன்னணி


=================


3  லட்சுமணன் கோட்டை தாண்ட  மாட்டியா?


ஆமா. ஆர்  கே லட்சுமன் கார்ட்டூன்  கோட்டை  பார்க்காம  தாண்டமாட்டேன்


==============
4
டாக்டர்! முதல் இரவு அன்னைக்கு விளக்கை அணைக்கனும் என்பது மூட நம்பிக்கையா?

 இல்லை, மூடா நம்பிக்கை


=================


5  டியர்! நாகரீகமா  கடலை  போடுவதுன்னா என்ன?

பீச்ல  இருட்டும்  வரை  வேற  வழி  இல்லாம  பேசிட்டு மட்டும் இருப்பமே அதான்


===============


6  செக்யூரிட்டி ஜாப் ஏன் வேணாம்னுட்டே?


 அதுல ஜாப் செக்யூரிட்டி இருக்குமா?


=============


7  ஆபீசுக்கு லேட்டா வந்த பொண்ணுங்களை கண்டிக்கச்சொன்னேனே ?


அய்யய்யோ.கண்ணடிச்சு வெச்சுட்டனே?

================

8  Dr.!குளிர்காலத்தில் சுடுநீரில் குளிப்பது நல்லதா அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா?


 புது மனைவி/காதலி யுடன் (ஏதோ 1) குளிப்பது நல்லது


===============


9
என்னைப் பிடிக்காதவர்கள் RT செய்யவும் 


 மேடம்.நீங்க சிங்கப்பூர்.நாங்க தமிழ்நாடு.எப்டி பிடிக்க முடியும் ?எட்டாதே?


===============

10 டியர்! என் ட்வீட்டை ஆர் டி பண்ணுங்க.இல்லைன்னா என் பாய் பிரண்ட்ஸ் க்ரூப்ல இருந்து உங்களை நீக்கிடுவேன்.


 ஆ! ஒரு குரூப்பே வெச்சிருக்கியா நீ? 


==============


11 விமர்சனம் செய்யும்போது 3.25/5 -னு துல்லியமா எப்டி ரேட்டிங் போடறீங்க? 


சிம்ப்பிள்.ஆல்ரெடி வந்த 5 விமர்சன ரேட்டிங் சராசரி எடுத்துக்குவேன் 


================

12 
ஒபாமா = எனக்கு மூட நம்பிக்கை கிடையாது.


 மோடி=ஓஹோ.அப்போ தஞ்சைப்பெரிய கோயில் உள்ளே வாங்க பார்ப்போம் 


==============\\

13 சன்யாசி=என்னால் அரசாங்க மதுபானக் கடைக்கு ஒரு பயனும் இல்லை .


 ஓ! சரக்கு அடிக்க மாட்டீங்களா?


 ஹிஹி,, நைசா சரக்கை ”அடிச்ட்டு” வந்துடுவேன்


====================

14 சீக்கிரம் கல்யாணம் பண்ணி ஹவுஸ் வைப் ஆகனும் ;)இதுதான் என் லட்சியம் 


 நிதானமா கல்யாணம் செஞ்சா பங்களா ஒயிபா மாறிடலாமே மேடம்?" 


===============


15
35 மார்க்குக்கீழே வாங்குனவங்க பெஞ்ச் மேல ஏறி நில்லுங்க.


 டீச்சர்.>35 வாங்குனவங்க பெஞ்ச்சுக்குக்கீழே உக்காந்துக்கனுமா?


=================


16   டியர்.என் கிட்டே எல்லை மீறாம பழகனும்.டீலா?


 சரி.உள்ளூர்க்காரன் பார்த்துட்டா வம்பு தான்.எனக்கென்ன போச்சு?


==================

17 மேடம்! முதல் இரவு அறைக்குள்ளே போகும்போது பயத்தோட போனீங்களா?எதிர்பார்ப்பு/ஆர்வத்தோட போனீங்களா?


 3ம் இல்லை.என் புருசனோட போனேன்


=================
==================

18 
சார்! உங்க படம் 100 வது நாளா ஓடுதாமே?எந்த தியேட்டர்ல? 


 டூரிஸ்ட் பஸ் ல ,லாட்ஜ் ல ,க்ளப் ல


==================


19  சார்.இந்த சீன் ல கெத்தா நடந்து வரனும்.


 அய்யய்யோ.அது நமக்கு வராதுங்களே?வேணும்னா டான்ஸ் ஆடிட்டே வரட்டுமா? 


==================


20 தமிழ் மிஸ் தன்யா = நிலாவில் முதன் முதலில் வடை சுட்டது யார்? 


 மாண்புமிகு மாணவன் = அது சரியா தெரில.வாயாலயே வடை சுடறவங்களை வேணா சொல்லவா? 


=======================