Monday, February 23, 2015

முருகரோடு நான் பேசினேன் . பிரபல ட்வீட்டர் பேட்டி, வள்ளி தெய்வானை அதிர்ச்சி

1 நான் எந்த தவறும் செய்யவில்லை நான் ஏன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சசி தரூர் #கொலைக்குற்றவாளியை விசாரணை செய்யும்போது பதவியைப்பறிக்கனும்


===============

2  கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி..# பிறந்த வீடு ,புகுந்த வீடுன்னு ஊருக்கு 1 னு சமாளிங்க


==============


3  ஆரம்ப காலத்தில் விஜய வைச்சி படமெடுக்க யாரும் முன் வரவில்லை - SAC #இதுல சோகம் என்னன்னா இப்பவும் " ஆரம்பம்" காலம் தான்


===================


4  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அத்துமீறல்கள் நடக்கிறது -ராமதாஸ்#இடைத்தேர்தல்னா அத்துமீறலும் ,மருமகன்னா அத்தை சொல் மீறலும் சகஜம் தானே?


==============


5  பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம்! # சபாஷ்.ஹீரோ தலை சீவ மாட்டாரு.ஹீரோயின் பின்னாலயே சுத்துவாரு.க்ளைமாக்ஸ்ல செத்துடுவாரு


==============


6  / குடும்பத்துல 4பேர் இருந்தா மானியம் இல்லை / # நீ உங்கம்மா வீட்டுக்கு கோவிச்ட்டு போய்டு.நான் மான்யம் விலைல சிலிண்டர் வாங்குனதும் வந்துடு


===============


7  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும்: தமிழிசை சவுந்திரராஜன் # பிஜேபி க்கு டெபாசிட் கிடைச்சிடும்கறாரா?


================8  எனக்கு ஆன்மீக தேடல் அதிகமாகி விட்டது - சிம்பு#,புதுசா ஏதாவது ஜிஞ்சிதா , சிக்குச்சா பாஸ்?==============9  
என்னை நிம்மதியாக வாழவிடவில்லை இலங்கை அரசு-ராஜபக்சே புலம்பல் # கெடுவான் கேடு நினைப்பான்.ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.எல்லாம் உமக்கே


================


10  டூரிங் டாக்கீஸ் படம் பார்த்து பாராட்டிய இயக்குநர் ஷங்கர் #,இடைவேளை வரை மட்டும் பாத்துட்டு சொல்லி இருப்பார்.ரேப் கதை பின்னால===


===============

11  டீசல் விலை குறைந்தாலும் ரயில் கட்டணத்தை குறைக்க முடியாது : ரயில்வே அமைச்சர் -#,ஏறுனா மட்டும் ஏத்துவீங்க.இறங்குனா கமிக்க மாட்டீங்க

=================

12  மோடி அழைத்தால் மட்டுமே பிரசாரம்: விஜயகாந்த் முடிவு# வாத்தியார் பாடம் நடத்துனா படிக்க மாட்டேன்.ஹெச் எம் தான் நடத்தனும்னா எப்டிங்ணா?================
13 ரொம்ப நல்லது, போய்ட்டு வாங்க.. ஜெயந்திக்கு கோடானு கோடி நன்றி சொல்லும் EVKS # போய்ட்டு மறுபடி வந்திடப்போறாரு
================
14 பன்னாட்டு உணவு நிறுவனங்களிடம் ரெயில்வே துறையை அடகு வைக்ககூடாது - ராமதாஸ்# ஒரேயடியா வித்துட்டா செம லாபம்னு நினைச்சு செயல்படுத்திடப்போறாங்க
================
15 எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை-ஜெயந்தி நடராஜன்# திமுக வை விட்டு வெளில வர்றப்ப குஷ்பூ கூட இப்டி தான் சொல்ச்சு===============


16 ரவிதேஜாவின் பெங்கால் டைகர் இன்று துவக்கம் # நல்லா விசாரிங்கய்யா.தளபதியோட புலி கதை யா இருக்கப்போவுது.


===============


17 இயேசுவோடு இரண்டுமுறை பேசியுள்ளேன் : உமா சங்கர் ias# நல்லா செக் பண்ணிப்பாருங்க , கே ஜே ஏசுதாஸா இருக்கும்


==============


18 இளங்கோவனை "சைக்கோ" என்று வர்ணித்து "கா.சி" ஆதரவாளர்கள் போஸ்டர்! #  செல்வராகவன் சார் , வாங்க, அடுத்த படத்துக்கு  ஹீரோ ரெடி ==================


19  ஸ்ரீரங்கத்தில் எங்களுக்கு 60,000 ஓட்டு உள்ளது... டாக்டர் கிருஷ்ணசாமி # ஓட்டுக்கு 200 ரூபா அப்போ ஒண்ணே கால்  கோடி வருமானம்  உண்டு


==================


20
ஈ.வி.கே.எஸ்.-ன் அடாவடிப் பேச்சு... ராகுலைச் சந்தித்து சிதம்பரம் புகார்! #  டீச்சர்  டீச்சர்  அவன்  டெய்லி  என்னைக்கிள்ளி வைக்கறான்=======================

1 comments:

Ramakrishnan said...

அட்ராசக்க எப்பொழுதும் விஜய்-ku எதிரான Post வெளியிடுகிறது. 1 வருடத்திற்கு மேலாக தொடர்ந்து படித்து இதை கூறுகிறேன். நீங்கள் ஒரு அஜித் ரசிகர் போலும்