Skip to content
அட்ரா சக்க

Adrasaka Web site for Tamil Hollywood movie reviews

Sunday, February 15, 2015

100 கோடி கிளப்பில் அனேகன் ? - தனுஷ் பேட்டி @ ட்விட்டர்

ட்விட்டரில் வியாழக்கிழமை இரவு ரசிகர்களின் கேள்விக்கு தனுஷ் உற்சாகமாக பதில் அளித்தார். எந்தக் கேள்விக்கும் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக, அழகாக தனுஷ் அளித்த பதில்கள் இங்கே:
உங்கள் கேரியரில் வித்தியாசமான கஷ்டமான கதாபாத்திரங்கள் கொண்ட படங்கள் எவை?
'புதுப்பேட்டை', 'ஆடுகளம்', 'மரியான்', 'ஷமிதாப்.'
'அனேகன்' படத்தின் கதை விஜய்க்காக சொல்லப்பட்டதா?
ஆமாம். கே.வி.ஆனந்த் சாரிடம் என்னைப் பரிந்துரை செய்ததே விஜய் தான். 'அனேகன்' ஹீரோவாக நான் சரியாக இருப்பேன் என விஜய் நினைத்தார்.
விஜய் உங்கள் இயக்கத்தில் நடிக்கத் தயார் என்றால் உங்கள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?
இயக்குநராக படம் இயக்கத் தயார் ஆனதும் விஜய்க்கு கதை சொல்வேன். அந்த கதை விஜய்க்குப் பிடித்திருந்தால் கால்ஷீட் தருவார். ஏன் கூடாது?
நெகட்டிவ் விமர்சனங்கள் தருபவர்களுக்கு உங்கள் பதில்?
சம அளவில் என்டர்டெய்ன் செய்ய முயற்சிக்கிறேன். அன்பை பரப்பி வெறுப்பை மறக்கச் செய்வதே வழி. அதை நான் செய்வேன்.
வேல்ராஜூடன் இணைந்துள்ள படம் 'வேலையில்லா பட்டதாரி பார்ட்- 2' தானா?
இல்லை. விஐபி டீம் அடுத்த படத்திலும் இணைந்துள்ளது.
மலையாளத்தில் நடித்து அங்குள்ள ரசிகர்களின் உள்ளம் கவரலாமே?
எனக்கேற்ற நல்ல கதை கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
அஜித் பற்றி உங்கள் கருத்து?
நல்ல மனிதர். அவரை பல சமயங்களில் கவனித்து இருக்கிறேன். ஸ்டாராக நடந்துகொள்ளாமல் இயல்பாக இருப்பார்.
பிரபுசாலமன் இயக்கத்தில் நீங்கள் நடிக்க இருப்பது எப்போது?
ஜூன் மாதம் ஷுட்டிங் ஆரம்பமாக உள்ளது.
சூர்யா?
ஸ்டைலிஷான நடிகர்களில் ஒருவர். கடுமையாக உழைப்பவர். அவரின் 'மாஸ்' படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
காதல் குறித்து உங்கள் கருத்து என்ன?
சந்தோஷமோ, வருத்தமோ அந்த உணர்வுக்கு அதிக பலம் இருக்கிறது. காதல் சக்தி வாய்ந்தது.
நவரச நாயகன் கார்த்தியுடன் நடித்தது பற்றி?
சிறந்த நடிகர். மீண்டும் கார்த்தியுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன்.
தெலுங்கில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?
பவன் கல்யாண்
'புதுப்பேட்டை பார்ட்- 2' வருமா?
பார்ட் -2 எடுப்பது சாதாரணம் இல்லை. கஷ்டமானது. அதுகுறித்து தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம்.
அமிதாப், ரஜினிக்கு அடுத்து நீங்கள்தான் அடுத்த சூப்பர்ஸ்டார்?
என் மேல் வைத்திருக்கும் கண்மூடித்தனமான அன்பு இது. உங்கள் நிபந்தனையற்ற அன்புக்கும், ஆதரவுக்கும் என் நன்றி.
மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிப்பீர்களா?
கதையும், காலமும் ஒத்துழைத்தால் சிம்பு, சிவகார்த்திகேயன், அழகான ஃபெர்பார்மர் விஜய் சேதுபதியுடன் நடிப்பேன்.