Sunday, February 08, 2015

என்னை அறிந்தால் தரத்தில் ஐ யை விட ஒரு படி மேலா? கீழா? - த இந்து வின் அலசல்

அப்பாவின் அநியாயமான கொலை, தீயவர்களுக்கு எதிராகத் துப்பாக்கி தூக்கும் வெறியை ஏற்படுத்துகிறது சத்யதேவ் என்ற அந்த சிறுவனுக்குள். அந்த வெறியோடே வளரும் அஜீத், ஆபத்தை வலியத் தேடிப் போவதுதான் தனக்குப் பிடித்த போதை என்று ‘தன்னை அறிந்து’, தீய செயல்களில் ஈடுபடும் எல்லோருக்கும் எதிராகப் போர் தொடுக்கிறார்.
நிழல் உலக வலைப்பின்னலை அறுக்க தாதா உருவில் சிறை செல்லும் அஜீத், அங்கே நிஜ தாதா விக்டரை (அருண் விஜய்) சந்தித்து நட்புக் கொள் கிறார். இருவரும் சிறையிலிருந்து தப்பிக்கிறார்கள். அஜீத்தின் உண்மையான முகம் தெரிந்ததும் அருண் அவர் மீது கொலை வெறி கொள்கிறார்.
இதற்கிடையில் ஹேமானிகா (த்ரிஷா) என்னும் பரத நாட்டியக் கலைஞரைச் சந்திக்கும் அஜீத், அவர் மீது காதல் வயப்படுகிறார். தன் குழந்தையுடன் தனித்து வசித்து வரும் ஹேமானிகா முதலில் தயங்கினாலும் பிறகு அந்தக் காதலை ஏற்றுக்கொள்கிறாள். அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் சமயத்தில் ஹேமானிகா கொல்லப்பட, குழந்தை மீது ஒரு அப்பாவாகவே பாசம் காட்டி வளர்க்கிறார்.
வில்லன் வேட்டையிலிருந்து ஒதுங்கி இருக்கும் அவரை தீய சக்திகள் மீண்டும் களமிறங்க வைக்கின்றன. தேன்மொழி (அனுஷ்கா) என்னும் அப்பாவிப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் சேர்ந்துகொள்கிறது.
கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கும் அருணுக்கும் இந்தப் பக்கம் இருக்கும் அஜீத்துக்கும் இடையே நடக்கும் பரமபத ஆட்டத்தில் அஜீத் எப்படி ஜெயிக்கிறார்?
கௌதம் என்றால் அழுத்தமான, உணர்வுபூர்வமான கதை இருக்கும். யதார்த்தமான பெண் கதாபாத்திரச் சித்தரிப்பு இருக்கும். ஒரு அழகான காதல் இருக்கும். புத்திசாலித்தனமான வசனங்கள் இருக்கும் என நம்பிக்கையுடன் வருபவர்களுக்கு... அதெல்லாம் இருக்கிறது - கொஞ்சமாக! ‘வாரணம் ஆயிரம்’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ என முன்பே பார்த்த சில பாத்திரங்கள், அவற்றின் ஆசாபாசங்கள், ஆத்திர செயல்பாடுகள் கலந்த மாக்டெய்ல் இந்தப் படம்.
தந்தை மகன் உறவு, ‘சுயத்தை அறிய உதவும்’ பயணங்கள், ஏற்கெனவே திருமணமான பெண் மீது உண்டாகும் கண்ணியமான காதல், குற்றவாளிகளுக்கு எதிராக கூட்டம் கூட்டமாகப் பாயும் போலீஸ், கதாநாயகனின் பாசத்துக்குரிய பெண்ணைப் பணயக் கைதி ஆக்கி - ‘இப்ப நேரா வந்து மோது’ என்று ஆவேசக் கூச்சலிடும் வில்லன்... எல்லாம் கௌதமின் அதே முத்திரையுடன் அடி பிறழாமல் மீண்டும் அரங்கேறுகின்றன.
சில காட்சிகளும் சில பாத்திர வார்ப்புகளும் நன்றாக அமைந்துள்ளன. த்ரிஷாவிடம் அஜீத் தன் காதலைச் சொல்லும் விதம் அழகு. அருண் விஜயின் பாத்திரம் வலுவாக உள்ளது. பயணக் காட்சிகள் கண்களுக்கு விருந்து. ஒரு பெண்ணின் மறுமணத்தை மிக இயல்பாக சித்தரிக்கும் விதம் ஈர்க்கிறது.
கிளைமாக்ஸ் சண்டை விறுவிறுப்பு. ஆனால், அதற்குமுன் வருகிற சவால் வசனங்கள் ரொம்ப நீளம். கடைசியாக அடித்து வீழ்த்துவதற்கு முன் அருண் விஜய்யிடம் அஜீத்தே சொல்கிறார் - “ரொம்ப பேசிட்டோம்’’ என்று!
வில்லன் கூட்டத்துக்குத் தேவையான ‘சரக்கு’ நடைபாதையிலேயே கிடைப்பதாக ஒரு காட்சியே வருகிறது. அப்படி இருக்க, மெனக்கெட்டு ஏன் அனுஷ்கா பின்னாடியே அலைகிறார்கள் என்பதற்கான காரணம் பலவீனமாக உள்ளது. அதிலும், படை படையாக போலீஸார் கிளம்பி வந்து துரத்தும்போதும் விடாப்பிடியாக வில்லத்தனம் பண்ணுகிற அளவுக்கு அருண் விஜய்க்கு அப்படி ஒன்றும் அசாத்தியமான பின்னணி பலம் இருப்பதாகத் தெரியவில்லை.
கையில் துப்பாக்கியுடன் அத்தனை போலீஸ் வளைத்த பிறகும், “சொல்லு விக்டர்... இப்பவே இவனை போட்டுரட்டுமா?” என்று அடியாள் வில்லன் செல்பேசியில் ஜபர்தஸ்து காட்டுகிறார். அத்தனை கிள்ளுகீரையா தமிழ்நாடு போலீஸ்?!
இத்தனையும் தாண்டி, சின்ன சின்ன உணர்வுகளைக்கூட அழகாக அஜீத்திட மிருந்து வரவழைத்து அசத்தியிருக்கிறார் கெளதம். வெவ்வேறு காலகட்டங்களில் இயல்பாக மாறும் தோற்றம், அசரடிக்கும் கம்பீரம், அலட்டிக்கொள்ளாத வேகம் என்று அஜீத்தை ஒரு நல்ல நடிகராக நன்றாகவே தூக்கி நிறுத்தி இருக்கிறார்.
கதைக்காக ஏகத்துக்கும் அடிவாங்கும் சில காட்சிகளில் துளிகூட தயங்காமல் ஒத்துழைத்திருப்பதன் மூலம், மற்ற பல நடிகர்களின் ‘மாஸ் ஹீரோ’ ஃபார்முலா வையே கடகடந்துப் போகச் செய்திருக்கிறார் அஜீத்.
இரண்டு நாயகிகளுமே அஜீத்தின் நிழலில் மறைந்துவிடுகிறார்கள். என்றா லும் த்ரிஷா, அனுஷ்கா இருவரும் கொடுக்கப்பட்ட வேலையை நன்றாகவே செய்திருக்கிறார்கள். கண்களாலேயே காதலைப் பொழியும் த்ரிஷாவின் நடிப்பு அழகு என்றால் அதிரடியாகக் காதலைச் சொல்லும் அனுஷ்காவும் ஓகேதான்!
வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் ஜொலிக்கிறார். அவரது உடலும் முகமும் வசன உச்சரிப்பும் பிரமாதமாக வில்லத்தனம் காட்டுகிறது. பேபி அனிகா மனதில் நிற்கிறார்.
கௌதம் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணிக்கான எதிர்பார்ப்பு முழுசாகப் பூர்த்தி ஆகவில்லை. என்றாலும், ‘அதாரு உதாரு’ பாடல் ரகளை... ‘உனக்கென்ன வேணும்’ இனிமை. ஒளிப்பதிவில் டான் மெக் ஆர்தரின் கடும் உழைப்பு கண் ணாரத் தெரிகிறது. ஆண்டனியின் படத்தொகுப்பு பல காட்சிகளில் பரபரக்க வைக்கிறது.
தன் வழக்கமான ‘போலீஸ் பீட்ஸா’வை ‘அஜீத் டாப்பிங்’ போட்டு கொடுத்திருக் கிறார் கௌதம். இதுவும் சுவைக்கத்தான் செய்கிறது.


readers views


 • Kathir Ambelaar Owner at Business 
  அஜித் , அருண்விஜய் நடிப்பு பெர்பெக்ட் எ ஸ்டைலிஷ் பிலிம்
  about 17 hours ago ·   (6) ·   (1) ·  reply (0) · 
     
  • raja  
   don't miss ஜி.........?
   Points
   345
   about 23 hours ago ·   (13) ·   (3) ·  reply (0) · 
   • good
    about 23 hours ago ·   (8) ·   (2) ·  reply (0) · 
    • parthi  
     ஒரு பெண்ணின் மறுமணத்தை மிக இயல்பாக சித்தரிக்கும் விதம் ஈர்க்கிறது.
     Points
     1850
     about 23 hours ago ·   (27) ·   (4) ·  reply (0) · 
     • Bala  
      அற்புதம் அஜித் சார் மற்றும் அருண் விஜய் நல்ல படம்
      about 22 hours ago ·   (20) ·   (4) ·  reply (0) · 
      • படம் நன்றாக உள்ளது இன்னும் கொஞ்ச வேற மாதிரி கெளதம் யோசிச்சு இருக்கலாம். படத்தின் முதல் நாள் வசூல் முந்தைய படங்களின் சாதனை முறியடித்து உள்ளது. ஆனால் சில பேர் படம் எந்த போட்டி இல்லாமல் வந்ததால் தான் இவளு வசூல் என்று புலம்பி தள்ளுகிறார்கள். போட்டி இல்லாமல் வந்தாலும் படம் விடுமுறை நாளில் வரவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் இணைய வாசிகளே...... அஜித்-விஜய் இருந்த போட்டி இப்போது மெல்ல மெல்ல ரஜினி - அஜித் ஆகா மாறி கொண்டிருக்கிறது...........
       Points
       265
       about 22 hours ago ·   (50) ·   (21) ·  reply (1) · 
       • Rajni;aijth rendu perukum tha poti; Yaru moka padam tharuvom nu poti pola
        about 21 hours ago ·   (10) ·   (13) ·  reply (0) · 
       • jeyapal  
        <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<ஒரு நல்ல விமர்சனம் கொடுத்த இந்துவுக்கு நன்றி>>>>>>>>><<<<<<<<<<< தல தல தான் >>>>>>>>>>>>>>
        about 22 hours ago ·   (20) ·   (4) ·  reply (0) · 
        • siddiq  
         அருண் விஜய் அருமை
         Points
         140
         about 22 hours ago ·   (13) ·   (2) ·  reply (0) · 
         • THALA THALATHAN
          about 22 hours ago ·   (6) ·   (3) ·  reply (0) · 
          • dhoni  
           Nice Thala
           about 22 hours ago ·   (5) ·   (4) ·  reply (0) · 
           • மரண மாஸ் தல
            about 21 hours ago ·   (8) ·   (7) ·  reply (0) · 
            • abi  
             சூப்பர் தல
             about 21 hours ago ·   (8) ·   (2) ·  reply (0) · 
             • Nice movie
              about 21 hours ago ·   (7) ·   (3) ·  reply (0) · 
              • shankar  
               Path breaking script and story. Yes sometime reminds us of kaakka kaakka and vettyaadu vilayadu.But then this is Ajith's version and he stands tall.
               Points
               13610
               about 21 hours ago ·   (6) ·   (2) ·  reply (0) · 
               • M.kumar  
                தல தல என்றும் thala.
                about 21 hours ago ·   (9) ·   (2) ·  reply (0) · 
                • மொக்க
                 about 20 hours ago ·   (13) ·   (24) ·  reply (1) · 
                 • manju  
                  பாஸ் நீங்க விஜய் fana? அப்புறம் ஒய் திஸ் கொலைவெறி? டெல் மீ எ ற்று ரிசல்ட் பாஸ்
                  about 18 hours ago ·   (11) ·   (2) ·  reply (0) · 
                 • Dinesh  
                  பொண்ணுங்கள தூக்கி கேம் ஆடுற பார்முலவ கொஞ்சம் மாத்துங்க மேனன்....
                  Points
                  150
                  about 20 hours ago ·   (12) ·   (1) ·  reply (0) · 
                  • Super thala......
                   about 20 hours ago ·   (5) ·   (2) ·  reply (0) · 
                   • Anbu  
                    சிம்ப்லி சூப்பர் சினிமா. அஜித் சார் சூப்பர் டிபிபிறேன்ட் 4 கெட்டப் .
                    about 20 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
                    • Anbu  
                     சிம்ப்லி சூப்பர் சினிமா. சூப்பர்.
                     about 20 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
                     • Nice movie ajith super arun vijay acting nice. ..........
                      about 19 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
                      • yennai arinthal a nice entertaining .ajith looking good and rockzzzz, arun vijay acting is awesome. ........
                       about 19 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                       • sekar  
                        படம் nalla இருக்கு அதனாலதான் vijay fanskku பயம் வந்துடுச்சு kathi ஒரு மொக்க படம் mathavanka kathayai திருடி படம் எடுக்கேறது ஒரு polappa
                        about 19 hours ago ·   (16) ·   (12) ·  reply (0) · 
                        • rahul  
                         சூப்பர்
                         about 19 hours ago ·   (3) ·   (1) ·  reply (0) · 
                         • Nice movie. .. அருண் விஜய் & அஜித் அக்டிங் சிம்ப்லி சூப்பர்
                          about 19 hours ago ·   (2) ·   (1) ·  reply (0) · 
                          • Sema film thala acting superooo suprrr......
                           about 18 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
                           • farhan  
                            Nice movie by GVM
                            about 18 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
                            • எங்க அண்ணன் அஜித் ரொம்ப சூப்பரா இருக்காரு. திரிஷா நல்ல இருகாங்க அருண் விஜய் சூப்பர். தன் கௌதம் சார்
                             about 18 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
                             • தல படம் சூப்பர். அஜித் சார் சூப்பர் சூப்பர் சூப்பர், செகண்ட் டைம் பார்க்கணும். திங்க கிழமை எப்போ வரும் பாஸ்.
                              about 18 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
                              • எங்க தல போல வருமா? சூப்பரோ சூப்பர் .

                              1 comments:

                              Unknown said...

                              Ajith is ready to move on with the next phase of his acting.