Friday, February 20, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 20/2// 2015 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

1 தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் 2,சண்டமாருதம் 3 கதிர் கஞ்சா கருப்பு(k3) ,4 DEATH WARTIOR #,20 2 2015

1 தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்

ராக் சினிமா சார்பாக வி.சந்திரன் தயாரிக்கும் படம் 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்'. எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணனிடம் இணை இயக்குனராய் பணிபுரிந்து, பல விளம்பர படங்களை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்குகிறார். 

இப்படத்தைப்பற்றி இயக்குனர் பிரகாஷ் கூறியதாவது:- 

இப்படத்தை இயக்க முடிவு செய்தவுடன் தயாரிப்பாளர் வி.சந்திரனை சந்தித்து கதையை கூறினேன். கதை அவருக்குப் பிடித்த போக உடனே படத்தை இயக்குவதற்கான வேலையை செய்யுமாறு சொன்னார். அதன்படி படப்பிடிப்பு ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பு 60 நாளில் முடிந்துள்ளது. இன்னும் பாடல் காட்சி மட்டுமே பாக்கி உள்ளது. 

பூமியை நோக்கி வரும் காந்த புயலால் தகவல் தொழில்நுட்பம் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. இதில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பில் இருந்து அனைவரும் எவ்வாறு மீண்டு வந்தனர் என்பதே மீதி கதை. கதாநாயகனாக அட்டக்கத்தி தினேஷ், நகுல் ஆகியோர் நடிக்கின்றனர். 

இவர்களுக்கு ஜோடியாக பிந்து மாதவி, ஐஸ்வர்யா நடிக்கிறார்கள். எதிர்நீச்சலில் சிவகார்த்தியேன் நண்பனாக வரும் சதீஷ் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நகுல் அம்மாவாக நகைச்சுவை கேரக்டரில் ஊர்வசி நடித்துள்ளார். காதல், த்ரில்லர், சஸ்பென்ஸ், ஆக்சன் என ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அனைத்து கலவைகளும் படத்தில் உள்ளது. 

ஆனாலும் மற்ற கமர்சியல் படங்களை போல் அல்லாது இப்படம் சிறிது வித்தியாசப்படும். தாய்க்கும் மகனுக்குமான உறவை ஒரு புதிய கோணத்தில் காட்டியுள்ளனர். பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தாலும் அனைவருக்கும் சமமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நகுல் மற்றும் அட்டகத்தி தினேஷ் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இவ்வாறு பிரகாஷ் கூறினார். 

இப்படத்திற்கு தமன் இசையமைக்க, தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்கிறார்.
ஈரோடு  தேவி  அபிராமியில்  ரிலீஸ் 





2,சண்டமாருதம் -நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகனாக சரத்குமார். படம் சண்டமாருதம். இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம் சரத்குமாரின் புதிய அடைமொழி. இதுவரை சுப்ரீம் ஸ்டாராக இருந்தவர் இந்தப் படத்திலிருந்து புரட்சி திலகமாக மாறியிருக்கிறார். புரட்சித்தலைவரிலுள்ள புரட்சியையும், மக்கள் திலகத்திலுள்ள திலகத்தையும் சேர்த்து... புரட்சி திலகம். சண்டமாருதத்தின் படப்பிடிப்பு தொடங்கிய கையோடு பத்திரிகையாளர்களுக்கு படப்பிடிப்பு இடைவேளையில் பேட்டியும் அளித்தார்.
ஜக்குபாய்க்குப் பிறகு ஹீரோவாக நடிக்க ஏனிந்த பெரும் இடைவெளி...?
 
நான் அரசியலில் பிஸியாக இருந்ததால் ஹீரோவாக நடிக்க நேரம் கிடைக்கலை. அதனால்தான் சென்னையில் ஒருநாள், நிமிர்ந்து நில் படங்களில் கௌரவ வேடத்தில் நடித்தேன். நல்ல கதைக்காக நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 
 
அது என்ன சண்டமாருதம்...?
 
சண்டமாருதம் என்றால் ஊழிப்பெருங்காற்று என்று அர்த்தம்.
 
படத்தின் கதையை நீங்களே எழுதியிருக்கிறீர்களாமே?
 
என்னுடைய படங்களின் கதைக்கருவில் நான் அபிப்பிராயங்கள் சொல்லி திருத்தியிருக்கேன். ஆனா முழுக்கதையையும் எழுதியது இப்போதுதான். சமீபமாக திகில் - நகைச்சுவை கலந்த கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அப்படியொரு கதைதான் சண்டமாருதம். நான் எழுதிய கதையை ஏ.வெங்கடேஷிடம் சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது.  என்னுடைய கதைக்கு ரான்ஜஷ்குமார் திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார்.
 
படத்தில் உங்களுக்கு என்ன மாதிரியான கேரக்டர்...? 
 
ரவி, சர்வேஸ்வரன் என்கிற இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறேன். இரண்டுமே மாறுபட்ட கதாபாத்திரம். புலன்விசாரணைக்கு அப்புறமா இந்தப் படத்தில் வில்லனாகவும் வர்றேன்.
 
மற்ற நட்சத்திரங்கள்...?
 
சரயு, அவ்னி மோடின்னு இரண்டு ஹீரோயின்கள். நிமிர்ந்து நில் படத்தில் சமுத்திரகனியுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அவரும் என்னுடைய மனைவி ராதிகாவும் முக்கிய வேடங்களில் நடிக்கிறாங்க. விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, கன்னட நடிகர் அருண் சாகர்னு நிறைய பேர் நடிக்கிறாங்க. ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். அருண் சாகருக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம்.
 
இயக்குனர் ஏ.வெங்கடேஷ்...?
 
அவரும் நானும் இதற்குமுன் இணைந்து பணியாற்றிய மகாபிரபு, சாணக்யா, ஏய் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. அதே மாதிரி  இந்தப் படமும் வெற்றிப் படமாக அமையும்



3  கதிர் கஞ்சா கருப்பு(

காமதேனு இண்டர்நேசனல் பட நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு கே3 என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாயகனாக விமல்ராஜ், நாயகியாக ஆதிரா நடிக்கின்றனர். விஸ்வநாத், சுதிர், பாவா லட்சுமணன், மீசை ராஜேந்திரநாத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.எஸ்.அண்ணாதுரை இயக்குகிறார். இவரே ஒளிப்பதிவும் செய்கிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.

இரவு நேரத்தில் போஸ்டர் ஒட்டும் கதிர், கஞ்சா கருப்பு என்ற மூன்று இளைஞர்களின் வாழ்க்கையே இப்படம். அந்த மூவரும் கூலிப்படையாக எப்படி வாழ்கிறார்கள் என்பது திரைக்கதையாக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் இன்றைக்கு கூலிப்படை வேலை செய்வது பெரும்பாலும் பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் கூலிப்படையாக மாறுவதற்கான காரணம் சூழ்நிலையும் படத்தில் இருக்கும். காதல் மற்றும் திரில்லர் படமாக உருவாகிறது.

சென்னை, திருநெல்வேலி, கேரளாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இசை: பிரத்வய் சிவசங்கர், பாடல்: ரவிசங்கர், எடிட்டிங்: கே.தணிகாசலம், நடனம்: அஜய்சிவசங்கர், இணை தயாரிப்பு: என்.திருமுருகன், வி.பிரகாஷ்ராஜ்.

நன்றி - மாலை மல்ர்  , வெப் துனியா 

0 comments: