Saturday, February 14, 2015

நெத்தியடி விமர்சகர் யார்? ஒரு அலசல்

1   டியர் ! எனக்கு மவுனமே பிடிக்காது ஓஹோ.அப்போ மவுனஜூன் ,மவுன ஜூலை பிடிக்குமா?


=================


2  லேடி = ஜோசியரே ! கை ரேகை ஜோசியம் பார்க்கச்சொன்னா  உள்ளங்கையைத்தடவிட்டு இருக்கீங்க?


சாரி மேடம்.இது பிரெய்ல் முறைல படிச்சது.ஹிஹி


================


3  சார்.36 மணி நேரம் லாட்ஜ் ல தங்கிட்டு 1 நாள் வாடகை தான் தர்றீங்க?


போன மாசம் வந்தப்ப 12 மணி நேரத்துல காலி பண்ணேனே ,டேலி ஆகிடுச்சா?


=================
சார்.சர்வர் பவ்யமா பரிமாறாம சாம்பார் பக்கெட்டை நங் னு கோபமா வைக்கறாரே? வீட்ல சாப்ட்ட மாதிரி இருக்கும்னு சொன்னேனே?


=================


பிலிம் இன்ஸ்டிடியூட் டீச்சர் = கஞ்சா கருப்பு சிறுகுறிப்பு வரை 


லொள் மாணவன் = கேள்வியே தப்பு.கஞ்சா மெரூன் கலர்


================


6  மேடம்.நீங்க டைரக்ட் பண்ணிட்டு இருக்கும்போது வேன்ல உக்காந்து உங்களையே பாத்துட்டிருக்காரே? 


அது என் புருசன் தான்.டைரக்சன் மேற்பார்வை 


============

7  உங்க சம்சாரம் வேலைக்குப்போய் 25000 சம்பளம் வாங்குதே.உங்களுக்கு மரியாதை தருதா? சம்பளத்தைத்தந்துடறாங்க 


===============


8  சார்.புது பட ரிலீஸ் க்கு எல்லாரும் காமன் டி பி வைக்கறாங்களாம்.நீங்க வைக்கலை? நான் ரதி டி பி வேணா வைக்கறேன் 


=================


9  டியர்.உங்கப்பா நம்ம வீட்டு விழாவுக்கு வரமாட்டார்.


 எப்டி சொல்றீங்க? 


 வந்தா மொய் வைக்கனும். சீர்செய்யனும்


===============

10  டியர்.உன்னை முதன் முதலா பார்த்ததில் இருந்து மெர்சல் ஆகிட்டேன். அது ஒக்கே்.டென்த் எக்சாம் 8 வது தடவையா எழுதுனீங்க்ளே.பாஸ் ஆகிட்டீங்ளா?


==============

11 
டியர்.ஒரே ஒரு புடவைதானா? மோடியைப்பாருங்க.100 புடவை தராரு. 


ஏம்மா மின்னல்.அவரோட சம்சாரத்துக்கா தந்தாரு?


===============


12  அஜித் ரசிகர்களுக்கு மட்டும் தான் லோன் தருவீங்களா?, அவங்க நடந்து போனாக்கூட துரத்தி லோனை வசூல் பண்ணிடலாம்.விஜய் ரசிகர்னா ஓடுவாங்க்ளே? 


=============


13 சார் பீட்சா வேணும் 

 புதுசு வேணுமா?,மகேஷ்பாபு சாப்ட்டாரே அதே பழைய மாடல் வேணுமா?=================


14  மிஸ்! உங்க டிபி ல கசமுச கசமுசவா இருக்கே? மாடர்ன் ஆர்ட்டா? 

யோவ்!,என் செல்பி ! 


================


15  சார்.எக்சாம்க்கு இன்னும் சரியா படிக்கலை.எக்சாம் டேட்டை 10 நாள் தள்ளிப்போட முடியுமா?


=========


16 
டியர், சூடா இருக்க வேண்டிய பொங்கல் ஜில்னு இருக்கே? ஃபிரிட்ஜ் செல்ஃப்ல வெச்சதா?


 இல்ல, அதுக்கும் மேல , ஃப்ரீசர்ல வெச்சது


===================


17 
டைரக்டர் கிட்டே பேசிட்டு இருக்கும்போதே எதுக்கு அவர் தலைல குட்டினே? நெத்தியடி விமர்சகர் னு பேர் வாங்கத்தான்


=================18  டியர்.சாரி.மேரேஜ்க்குப்பின் தான் எல்லா டச்சும் அலோடு.
 சாரி.இப்பவே தொட்டால் தொடரும்.நம்பிக்கை இல்லைன்னா நம் காதல் முற்றும் 


==================


19  சுயசரிதைப்புத்தகத்துக்கு ஏன் தடை விதிச்சுட்டாங்க?


 இது கல்யாணம் ஆன அன்னைக்கு ஒரு நாள் மட்டும் நடந்த சுயசரிதைப்புத்தகம் 


=================


20  சாரி சார்.பூரி சரியா உப்பலை.அட்ஜஸ் பண்ணிக்குங்க.


 சரி.எவ்ளவ் பில்?


 50 ரூபா நோட்டு கொஞ்சம் கிழிஞ்சிருக்கு.அட்ஜஸ் பண்ணிக்குங்க 

==================