Sunday, February 22, 2015

அல்ட்டிமேட் க்கு ஆல்ட்டர்நேட்டிவ் யார்?

1  எனக்கு ஆன் லைன் செட் ஆகலை.


 ஏன்? நெட் ஒர்க் சரி இல்லையா?


 ஐ மீன்.ஆன் லைன் ல காதலி எதுவும் செட் ஆகலை


===============


2  ப்ளூ,பிளாக் இங்க் பேனா ல எழுதாம மஞ்சள் இங்க் பேனால ஏன் எழுதறீங்க?என் எழுத்துல ஒரு மெச்சூரிட்டியே தெரியலைன்னாங்க.


===============3  சார்.இன்ட்டர்வெல் பைட் சூப்பரா இருந்தது.

வாவ்!  நிஜமா?


 அதாவது இன்ட்டர்வெல் விட்டதும் வெளியேறத்துடித்த ஆடியன்ஸ்,விட மறுத்த செக்யூரிட்டி 2 தரப்பு பைட்


==================


4  ஸ்போர்ட்ஸ் மிஸ் ஸ்டெல்லா = உங்க பையன் செமி பைனல்னு எழுதச்சொன்னா சுமி பைனல்னு எழுதறான்.


 ஓஹோ! டேய்.நான் எழுதறேன் பாரு.சவுமி பைனல்.


=================


5 டீச்சர்.என் இடுப்பில் இவன் கிள்றான். டேய்.ஏண்டா?


 ஸாரி மிஸ்! "நடுவில கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்" முன்னோட்டம்================


6   என்ன சார்?அன்னைக்கு 186 கோடின்ட்டு இப்போ 100 கோடி னு பல்டி அடிக்கறீங்க?பணத்தோட மதிப்பு குறைஞ்சிட்டே வருதுங்க்ளே?


=================

7   டாக்டர்.செவ்வாழைப்பழம் சாப்பிட்டா ரத்தம் விருத்தி ஆகும் ,ஆண்மை பெருகும்னு சொன்னீங்க்ளே?

 ஆமா.


 அதை ஒரு பொண்ணு சாப்ட்டா என்ன ஆகும்?===================


8  டியர்.என்னைப்பார்த்தாலே "குஷி" ஆவீங்க்ளே?இப்போ மேரேஜ்க்குப்பின்?உன்னைப்பார்த்ததும் கோபத்துல "கத்தி"ட்டிருக்கேன்


==============


9  
பிரபல ஒல்லி பெண் ட்வீட்டர் = டியர்! நீங்க கோடு போட்டா நான் ரோடு போட்ருவேன்


 லவ்வர்= ம்க்கும்.நீயே கோடு போட்ட மாதிரி தானே இருக்கே?


====================


10  சார்.உங்க படத்துல 2 கதையாமே?

ஆமா.1 ரீமேக் கதை 2 ரீ மிக்ஸ் கதை


================11 சார்.உங்க செக் பவுன்ஸ் ஆகிடுச்சு.

அடடா.அதை ஏன் கீழே போட்டீங்க? பேங்க் ல கலெக்சனுக்குப்போட்டிருக்கலாமில்ல?


================12 மேடம்.நீங்க எம் எஸ் படிச்ச டாக்டரா? ஏன் டிகிரியை பின்னால போடாம முன்னால போட்டிருக்கீங்க?

யோவ்.அது MISS என்பதன் SHORT FORM MS
================


13 சார்.கதைக்குத்தேவைன்னா மட்டும் தான் கவர்ச்சியோ கிளாமரோ காட்டுவேன்.

ஓஹோ.ஹீரோயினை வில்லன் 4 டைம் அவரோட பையன்.2,டைம் ரேப்புவதுதான் கதை


================

14 சார்.உங்களுக்கு 10,000 ரூ மதிப்புள்ள கிப்ட் பார்சல் வரும்.3000 ரூ டாக்ஸ் கட்டி எடுத்துக்கலாம்.அப்டியா.7000 ரூ க்கு மட்டும் அனுப்பவும்


================

15 உத்தமன் தான் வேணும்னு எந்த பொண்ணும் சொல்லுறதில்லையே. ஏன்?

ஏன்னா உத்தம வில்லன் கள் தான் ஜெயிக்கற காலம் இது


===============


16 என் நெம்பருக்கு நேத்து நைட் 10 மிஸ்டு கால் வந்துது.யார் பண்ணது ?

தெரியலீங்க்ளே?,உங்க நெம்பரை சொல்லுங்க.என் போன் ல அவுட்கோயிங் ல செக்


=================


17 செக்யூலரிசம் னா என்ன?அக்கவுண்ட்ல பணம் இல்லைன்னாக்கூட பேலன்ஸ் கோடிக்கணக்கில் இருப்பது போல் செக் தருவது


===================18 டியர்.கல்யாணக்கோலத்தில் உன்னைப்பார்த்ததும் மெய் மறந்துட்டேன்.

சரி சரி மாப்ளை நோட் பன்றாரு.மொய் மறந்துடாதீங்க


===================


19 ஹிந்தில எனக்கு ஏன் மெசேஜ் அனுப்பினீங்க? எனக்குதான் ஹிந்தி தெரியாதே?


மிஸ்! உங்களுக்கு தெரியாதுன்னு எனக்குத்தெரியும்.எனக்கு தெரியுமே?என் கிட்டே விளக்கம் கேட்டுக்குங்க


================


20 உங்க  படத்துக்கு U/A  சர்ட்டிஃபிகேட்  குடுத்திருக்காங்களே? 

டைரக்டர் = ULTIMATE க்கு ALTERNATIVE யாரும்  இல்லைனு அர்த்தம்


======================

0 comments: