Monday, February 02, 2015

பேங்க் மேனேஜர் லோன் தர்லைன்னா என்ன செய்யனும் ?

1  முறுக்கு நூல் , 10ம்  நெம்பர்  நூல்,பொசுங்கு நூல்  பத்தி  எல்லாம் எதுக்கு விசாரிக்கறே?

நூல் விமர்சனம்  பண்ண  கூப்பிட்டிருக்காங்க


=============


2  கண்டக்டர்  சார், யார் கேட்டாலும்  எரிஞ்சு விழாம சில்லறை  தந்துடறீங்களே  எப்டி?

 நாணயமான  மனுஷன்னு  பேர்  எடுக்க


==================


3 தன்னை  முன்னிலைப்படுத்திக்கறதுக்காக நம்மாளுங்க  என்னென்ன செய்யறாங்க?

மே மாச வெய்யில்ல  எல்லாரும் கதர் சர்ட் போட்டிருந்தாலும் கோட் சூட்  போட்டுக்குவாங்க


=============சாரிசார்.யாருக்காகவும் , எதுக்காகவும் வளைஞ்சு குடுக்க மாட்டேன்.ஏம்மா  மின்னல்! வந்திருக்கறது ஜிம்னாஸ்டிக் கிளாஸ்க்கு.பேசறது பஞ்ச் டயலாக்

===========
5
உன் கேர்ள் ஃபிரண்டுக்கு  ஏன் இங்க்லீஷ் -னு செல்லப்பேர் வெச்சிருக்கே?

என்ன பேசினாலும் அர்த்தம் தெரியாது.என்ன சொல்ல வர்ர்றானு அவங்கம்மா கிட்ட கேட்டுக்கனும்


==============


உன்  பேரு  என்ன ?


 பழநி சாமி

 என்ன  வியாபாரம்  பண்றே?

இளநி சாமி

===============ஜட்ஜ் = சாதியை  ஒழிக்கனும்கறதுக்காக கொலை  செஞ்சியா?அவ்ளவ் நல்லவனா நீ?

யுவர் ஆனர், நான் போட்டுத்தள்ளுனது என் பொஞ்சாதியை=================


6  எதுக்குமே  மெனக்கெடக்கூடாது.இயல்பா  இருக்கனும்  மேடம்.

 ஓஹோ! ஆனா  என் இயல்பே எல்லா விஷயத்துக்கும்  மெனக்கெடுவதுதான்


=================


7 நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா?

சுஜாதா ரசிகன் = இல்லை.எல்லாரும்  மத்யமர்


=================
============


9  டியர்.வாக்கிங் போகும்போது அரிசி 2 டம்ளர் ஊற வெச்ட்டுப்போய்டுங்க.


 ம்நீ சமைச்சுடறியா?

நோ.வாக்கிங் முடிச்ட்டு வந்து குக்கர் அடுப்புல வெச்டுங்


=============


10 டியர் 6 தோசையும் 3 வெங்காயமும் தட்டத்துல ஏன் வெச்சிருக்கே?ஆனியன் தோசை ஆசையா கேட்டிங்ளே.டைம் இல்லை.கடிச்சுக்கிட்டே சாப்டுங்க================


11  சார்.உலக சிரிப்பு நாளை முன்னிட்டு சிரிக்கற மாதிரி ஒரு ஜோக் சொல்லுங்க.


மிஸ்! நீங்க ஒரு உம்மணாம்மூஞ்சி ஆச்சே? வேண்ணா கிச்சு கிச்சு பண்ணட்டா?


===============


12 பியூட்டி பார்லரில் ்


மிஸ்! நீங்க வாட்சப் ல இருக்கீங்களா?  நோ.இப்போ மேக்கப் ல இருக்கேன்


============


13 சார்.திடீர்னு சாமியார் டிபி வெச்ட்டீங்களே? திருந்தீட்டீங்களா?


 ச்சே ச்சே சாமியார்னா தான் பொண்ணுங்க இன்னும் அதிகமா ஏமாறுவாங்க


===============

14
: சொல்வதை எல்லாம் தவறாகவே நீங்கள் புரிந்து கொள்வது என் தவறல்ல." 


 புரியாத மாதிரியே பூடகமா சொல்வது சரியல்ல டீச்சர்.


===============

15 
சாரி சார்.லோன் வாங்க உங்களுக்கு எலிஜிபிலிட்டி இல்லை. 


 சரி அதை விடுங்க.உங்க பொண்ணைக்குடுங்க.கட்டிக்கறேன்.அவங்களுக்கு லோன் தருவீங்க இல்ல?


===============

16 
சார் .உங்களுக்கு சம்பளம் சுமாரா எவ்ளவ் வரும்? 


 சம்பளமே சுமாராதான் வரும்

===============


17 
டாக்டர்.கோபமா இருந்தா என் சம்சாரம் சாப்பிடறதில்லை.என்ன பண்ணலாம்?


 அடிக்கடி சண்டை போட்டு கோபப்படுத்துங்க.சாப்பாட்டு செலவு மிச்சம்


============

18 டியர்.ஹோட்டல்ல சாப்பிட்ருக்கும்போது எதுக்கு என் இடுப்புல கை வைக்கறீங்க? 


= சாப்பிடும்போது கண் வைக்காதீங்கன்னியே? 


=================


1 9  பாம்பு 1 =,பால் குடிச்சா ஆண்மை போயிடுமாம்.


 பாம்பு 2 = அய்யய்யோ.இனி அமலா பால் படம் கூட பார்க்க மாட்டேன்


==============

20  நீர்யானை க்கு இங்க்லீஷ்ல என்ன? 


hippopotamus 

" வெரிகுட்.அப்போ யானை க்கு இங்க்லீஷ்ல என்ன? 

 சிம்ப்பிள் .POTAMUS 


==============0 comments: