Friday, February 27, 2015

காக்கி சட்டை- சினிமா விமர்சனம்


ஹீரோயின்  ஒரு நர்ஸ் .அவங்க வேலை  பார்க்கும்  ஹாஸ்பிடலில்  தலைமை  டாக்டரின்  கண்காணிப்பில்  ஒரு அக்ரமம்  நடக்குது. அதாவது  ட்ரீட்மெண்ட்க்கு வரும்  ஆதரவு அற்ற அனாதைகள்  உடல்  உறுப்புகளை  திருடி  ஃபாரீன்  செல்வந்தர்களுக்கு  விற்பது. இதுக்காக   செயற்கையா அவங்களுக்கு மூளைச்சாவு  ஏற்படும்  விதமா  கார்பன் மோனாக்சைடு  கொடுக்கப்படுது. இந்த  மேட்டரை  ஹீரோயின்  போலீஸ்  கான்ஸ்டபிளா  இருக்கும்  ஹீரோ  கிட்டே  சொல்லுது.

 சாதா  கான்ஸ்டபிளா  க்ரைம் பிராஞ்ச்சில் வேலை  பார்க்கும்   ஹீரோ  இந்த   கேசை  எப்படி  அர்விந்த்  கேஜ்ரிவால்  டில்லியை  கில்லி  மாதிரி   கைப்பற்றினாரோ  அப்படி  டீல்  செய்வது  தான்  கதை  
  
கதைக்கரு  என்னவோ  என்னை  அறிந்தால்  , ஆனஸ்ட் ராஜ்   போல்   கதை  தான். ஆனா  திரைக்கதை ட்ரீட்மெண்ட்  திருடன்  போலீஸ்  போல  .


 வழக்கமா  நாம    வால்டர்  வெற்றிவேல்  , சிங்கம் 1   சிங்கம்  2    மாதிரி   ஓவர்  ஹீரோயிச  போலீஸ்  ஸ்டோரியியையே  பார்த்துட்டு   இந்த மாதிரி   ஹீரோயிசம்  அதிகம்  இல்லாத  நார்மல்  ஸ்டோரி  பார்க்க  சந்தோசம் .

ஹீரோவா  பெண்களின்  மனம்  கவர்ந்த  , சுட்டிக்குழந்தைகளின்   அடுத்த  ரஜினி , விஜய்   ஆன  சிவகார்த்திகேயன்.  ஓப்பனிங்கில்   சூர்யா  போல்  கலக்கலா வந்து  பின்  தன்  பாணி   நடிப்பில்  அடக்கி  வாசிக்கிறார். ஹீரோயின்  உடன்  இவரது  காதல்  காட்சிகள்  கல  கல ரகம் பாடல்  காட்சிகளில்   விஜய்  பாதிப்பு .  ஆனால்  சிவாவின்  பாடி லேங்குவேஜ்   டான்ஸ்  மூவ்மெண்ட்சில்  நல்ல  முன்னேற்றம்., இதே  போல் தொடர்ந்து  நடித்தால்  இவர்  டாப்  ஹீரோ  ஆகிடுவார்


ஹீரோயினா  வாட்சப்  செல்ஃபி  புள்ள  ஸ்ரீ திவ்யா .  ரசகுல்லா ஜீராவில்   பால்கோவாவை  தொட்டு  எடுத்தது  போல் பள பள  கன்னம் . பீட்ரூட்  அல்வாவை   பஞ்சு  முட்டாயில்     முக்கி  எடுத்தது  போல்  சோ ஸ்வீட்  உதடு  (  இந்த  வர்ணணை  உத்தேசமா ,குத்து  மதிப்பா  எழுதுனது)கூந்த ல்  எப்போதும்   அலை  பாய்ந்து  கொண்டே  இருப்பது  கொள்ளை அழகு. பாடல்  காட்சிகளில்  கூட கண்ணியம்  காட்டும்  இவரது  ஜாக்கிரதைத்தனம்  டிரஸ்சிங்க் சென்ஸ்  அபாரம் . அடுத்த  நதியா  இவர் தான்  

காமெடிக்கு  இமான்  அண்ணாச்சி. கணீர்க்குரல்.  நல்ல  பாடி  லேங்குவேஜ். இவர் பெரிதாக   விட்  ஏதும் அடிக்கலைன்னாலும்  முன்  பாதி  கலகலப்பா  போக  இவரும்  காரணம்

அனிரூத்தின்   இசை  இந்தப்படத்தில்  பிரமாதப்படுத்தவில்லை  எனினும்   ஏமாற்றவில்லை . இண்ட்டர்வல்   ஃபைட்டின்போது  பிஜிஎம்  கலக்கல் ரகம். ஸ்ரீ திவ்யா  வைக்காப்பற்றும்  அந்த   ஃபைட்   காட்சியில்   ஒளிப்பதிவு  பின்னிப்பெடல்


பட்டுக்கோட்டை  பிரபாகர்  தான்  வசனம் . ஆங்காங்கே   இவரது   டச்   தெரிந்தாலும்   ஆஹா  அசத்திட்டார்ப்பா  என  சொல்லும்  அளவு   பெரிதாக   இல்லை.   


சிவகார்த்திகேயன்  படங்களில்   முன்  பாதி அளவு  பின் பாதி  ஒர்க் அவுட் ஆவதில்லை  என்ற  பெயர்  இதிலும் உண்டு
மனதைக் கவர்ந்த  வசனங்கள்


உன்னைப்பார்த்தா பிச்சைக்காரன் மாதிரி தெரியலையே?


பின்னே?ஐபிஎல் ல ஏலம் எடுக்கறவன் மாதிரியா இருக்கு?2 உனக்கு எப்டி தெரியும்?
இட் ஈஸ் மதிமாறன் இன்ஸ்டிங்க்ஸ் #,சிவா பஞ்ச் ( கமல் டயலாக்)


3 டீ விக்கறவர் பி எம் ஆன மாதிரி ,பஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான மாதிரி யார் வேணா எப்போ வேணா என்னவா வேணா ஆகலாம் #,சிவா பஞ்ச்


4 நான் நர்சா இருக்கேன்.நீங்க?
உங்க ஹாஸ்பிடல்ல டாக்டர் வேலை இருந்தா சொல்லுங்க.நல்லா செய்வேன்


5 பொய் சொன்னதுக்காக ஒருத்தர் மேல நாம கோபப்படனும்னா அவங்க மேல நமக்கு உரிமை இருக்கனும் # பிகேபி


6 பொண்ணுங்களை பாலோ பண்ணற நேரத்துல புக்சை பாலோ பண்ணி இருந்தா அமெரிக்க பிரசிடென்ட்டாவே ஆகிடலாம்


7  மத்தவண்டில இல்லாத ஸ்பெஷல் அம்சம் ஏதாவது காணாமப்போன உங்கவண்டில இருக்கா? டச்


8 பசங்க  எப்படி  இருக்காங்களோ  அப்படியே  ஏத்துக்குங்கடி.அவங்களை  மாத்த  நினைச்சா  ஏறி  மிதிச்சு  போய்க்கிட்டே  இருப்போம்  # பிகேபி


9  ஏழைங்க  உயிரோட இருந்தா  அவங்க  குடும்பத்துக்கு  மட்டும் தான்  லாபம் , ஆனா  செத்துட்டா அவங்க உடல்  உறுப்பு  மூலம் ஏகப்பட்ட  பேருக்கு நன்மை 


10  பொண்ணுங்க  ஆளை  எல்லாம் மாத்த  மாட்டோம், காதலனுக்காக காத்திருப்போம் #  பிகேபி

11  மனோபாலா  = வண்டிக்கு சொந்தக்காரனா   இருந்தாலும்   வண்டியை   ஓட்ட விடமாட்டேங்கறாங்க்ளே?

மனைவி = ம்க்கும் , ஓட்டிட்டாலும்

  
Hot actress sree divya pictures 10 


 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  அடேங்கப்பா.சிவாவுக்கு லேடீஸ் ஆடியன்ஸ் ஜாஸ்தி போல.ஏழாங்கிளாஸ் ,எட்டாங்கிளாஸ் பொண்ணுங்க கூட்டம்


2 அடேங்கப்பா.1120 சீட் உள்ள தியேட்டர்ல 280 டிக்கெட் வித்தாச்சாம்.இன்னும் 100 பேர் வந்தாதான் படமாம்.வாங்க சார் வாங்க.100 ரூபா டிக்கெட் 50 ரூ


3 நாளைய முதல்வர் இளையதளபதியின் அடுத்த வாரிசு ,மாநிற ரஜினி ,நாளை மறுநாள் முதல்வர் சிவகார்த்திகேயன் ன் காக்கிசட்டை 100 கோடி கிளப்பில் விரைவில்


4 ஒரு பக்கி ஆறாங்கிளாஸ் பொண்ணைத்தள்ளிட்டு வந்திருக்கான்.ஸ்ரீதிவ்யா ஸ்கூல் யூனிபார்ம்ல வந்திருக்கு.சாமி சத்தியமா கார்னர் சீட்டாதான் இருக்கும்


5 காக்கிசட்டை ல விஜய்'யின் மாஸ்

டயலாக்
உள்ளது - சிவ கார்த்திகேயன்
# அதைத்தான் அவர் படத்துலயே பார்க்கறோமே.ஜெராக்ஸ் ஆப் ஜெராக்ஸ் எதுக்கு?
6 சிங்கம் சூர்யா மாதிரி செம ஓப்பனிங்7 ஹீரோ ஓப்பனிங் சீனுக்கு 12 பேரும் ஹீரோயின் ஓப்பனிங் சீங்கு 312 பேரும் கை தட்றாங்க.தமிழேண்டா.ஸ்ரீ திவ்யாடா


8 ஸ்ரீ திவ்யா தினமும் தலைக்கு தான் குளிக்கும் போல.யூகம்


9 வசனம் பட்டுக்கோட்டை பிரபாகர்.சுசீலா பனியன் வசனத்துக்கு வெய்ட்டிங்


10 ஓப்பனிங் சாங் கில் திருமலை விஜய் டான்ஸ் ஸ்டைலில் கலக்கல் டான்ஸ்


11 ஹீரோயின் நர்சாவருது.ஆனா புல் பேண்ட்யூனிபார்ம்.தொடை போச்சே.சாரி.வடை போச்சே


12 ஸ்ரீ திவ்யா ஸ்கூட்டி ஓட்டுது.பின்னால சிவா.அய்யய்யோ என்ன ஆகப்போகுதோ


13 தேன் மிட்டாய் உதட்டழகி ஸ்ரீ திவ்யா வாடா மல்லிக்கலர் லிப்ஸ்டிக் போட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது -ஜெர்க் ஜெகன்


14  டூயட் காட்சியில் கூட நதியா வுக்கு தங்கச்சி போல் ஸ்ரீ திவ்யா கண்ணியம் காட்டி சாரி காட்டாமல் நடித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது


15 ஷங்கர் /மணிரத்ணம் படத்தில் நடிச்சாலும் ஸ்ரீ திவ்யா கண்ணியமாதான் வரும் போல புள்ள


16 கார்பன் மோனாக்சைடை ஆக்சிசன் க்கு பதிலா ஹாஸ்பிடல் டாக்டர் வில்லனே கொடுப்பது போல் காட்சி.யப்பா


17 பேமிலி ஆடியன்ஸ்,லேடீசைக்கவரும் கலகலப்பான முன் பாதியுடன் காக்கிசட்டை இடைவேளை.தேறிடும்
Hot actress sree divya pictures 09
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்  ,


1    ரஜினி  , அஜித்  விஜய்   ரசிகர்கள்    கை  தட்டலை  வாங்க  எல்லார்  படத்தில்  இருந்தும்   தலா  ஒரு  டயலாக்  வைத்தது2   பெண்களைக்கவரும்  வகையில்   கண்ணியமான  காட்சிகள்  அமைத்தது 
3  இமான்  அண்ணாச்சி  , மனோபாலா  காமெடி  காம்போ   நல்லா  ஒர்க் அவுட்  ஆனது 


4  கட்டிக்கடி   பாட்டு    செம   டப்பாங்குத்து , அனிரூத்   ராக்கிங் 5   சாது   மாதிரி  வரும்  ஸ்ரீதிவ்யா   குத்தாட்டப்பாட்டில்  போடும்  ஆட்டம்   செம . ஹாஸ்டல்  பொண்ணுங்க   ரூமை  சாத்திட்டு   சரக்கடிச்சா  மாதிரி  ஆடுவாங்க்ளே   அப்டி   ( கேள்வி அறிவு}


6

இயக்குநரிடம்  சில கேள்விகள்

1  ஹீரோயின் நர்சா டே ட்யூட்டி நைட் ட்யூட்டி மதிய ட்யூட்டி எல்லாம் பாக்குது.வீட்ல தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களா?


2 ஹீரோ போலீஸ் கான்ஸ்டபிள் . டிவிஎஸ் 50 அல்லது லூனாவில் தானே வரனும்? ராயல் என்ஃபீல்டு வெச்சிருந்தா அதில் பவனி வந்தா ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டர்க்கு என்ன மரியாதை ? லாரியே வாங்கும் வசதி இருந்தாலும் எந்த பி சி யும் பைக்கில் ஸ்டேசன் வர மாட்டார்

3 ஹீரோ போலீசா இருந்தாலும் குறுந்தாடியோட ஸ்டைலா படம் பூரா வர்றாரு. ஃபுல் தாடின்னாக்கூட சபரி மலைக்கு மாலைன்னு சமாளிக்கலாம். இதுக்கு ஃபிரென்ச் ஐய்யப்பன்னு சொல்வாங்களோ?


4 நர்சா வரும் ஹீரோயின் ஆக்சிசன் சிலிண்டர் அருகே நின்னு அது கார்பன் மோனாக்சைடுதான்னு எப்படி கண்டு பிடிக்குது? தெளிவா விளக்கமா சீன் இல்லையே ?. எஒ

5 சுஜாதாவின் கதைகளில் கணேஷ் துப்பறிவார் . வசந்த் குறும்பு கமெண்ட் அடிப்பார் . ஆனால் இதில் இமான் அண்ணாச்சி பாதி கேசை அவர் தான் டீல் பண்றார். ஹீரோ ஹீரோயினை லவ்வுவதில் காட்டும் அக்கறையில் பாதி கூட கேசை டீல் செய்வதில் காட்டலை


6 ஹீரோயின் ஆபத்தில் இருக்கும்போது ஹீரோவுக்கு ஃபோன் பண்றார். அப்போ வில்லன் அடியாள் ஃபோனை தட்டி விடறார். எப்டி எக்சாக்ட்டா ஹீரோ அடுத்த செகண்ட்டே வர்றார் ?
சி  பி  கமெண்ட் =காக்கிசட்டை =முன் பாதி காதல் கலாட்டா கலகலப்பு ,பின் பாதி க்ரைம் இன்வெஸ்டிகேசன்.ஓக்கே ரகம்.விகடன் மார்க் =41 ,ரேட்டிங் = 2.75 / 5ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) = 41குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  = ஓக்கே ரேட்டிங்  = 2. 75 / 5ஈரோடு  அன்னபூரணியில்  படம்  பார்த்தேன்Erode annapoorani
 Embedded image permalink

1 comments:

'பரிவை' சே.குமார் said...

அப்ப காக்கிச் சட்டை கசங்காமல் வந்திருக்கு என்கிறீர்கள்... பார்த்து விடலாம்.