Tuesday, February 10, 2015

வருசா வருசம் புதுப்புது சம்சாரத்தோட ஹனிமூன் போறது யாரு?

1  தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணி தொடர்ந்து நடைபெறும் # ஏன் ஒட்டிட்டு? ஸ்டேப்ளர் பின் அடிச்சுக்கக்கூடாதா ?


=================

2 கப்பல்-ல் கரகாட்டக்காரன் பாடலைப் பயன்படுத்திய் ஷங்கருக்கு இளையராஜா நோட்டீஸ் # அடுத்த படத்துக்கு நீங்க தான் இசைன்னு சொன்னா .ஏமாந்து  கேசை வாபஸ்  வாங்கிக்குவாரு

================

3 நான் பி.கே. படத்தை டவுன்லோடு செய்து பார்த்தேன்: அகிலேஷ் யாதவ் #,அகிLOWஷ் யாதவ்!


===============

4 ரமணாபாணியில்.இறந்தவருக்கு சிகிச்சை அளித்து பணம் பறித்த திருப்பூர் தனியார் மருத்துவமனை! #ரமணா திருப்பூர் ல 150 நாள் ஓடும்போதே நினைச்சேன்


=================

5 உத்தமவில்லன் நன்றாக வந்து உள்ளது வீடியோ மூலம் கமல்ஹாசன் தகவல் # நல்லாருந்தா உத்தமம்.இல்லைன்னா உங்க நற்சான்றிதழே படத்தின் வில்லன் ஆகிடும்


==================


6 புதிய பட சி.டி.க்களை வீடுதேடி ரூ 50 க்கு விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்-சேரன் #வசுந்த்ரா DVD 100 ரூபான்னு சக்க ஓட்டம் ஓடுது

=================

7  தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு மேலானது  என எண்ணி வாக்களிக்கவும்-தமிழ் மக்களிடம் ராஜபக்சே கெஞ்சல்: # மிஷ்கின் கோவிச்சுக்கப்போறாரு


=============


8  திமுக மகளிர் அணி செயலாளர் ஆகிறார் கனிமொழி? கருணாநிதி ஆலோசனை # திமுக ஒரு நாளும் குடும்ப அரசியலை அனுமதிக்காதுனு ஒரு மானஸ்தர் சொன்னாரே?


==========


9  புத்தாண்டு தினத்தில் தமிழகத்தில் மது விற்பனை ரூ.164 கோடி- திருப்பூர் முதல் இடம் # பனியன் சிட்டி இப்போ சனியன் பிடிச்ச சிட்டி ஆகிடுச்சு போல


==================


10 புத்தாண்டு தினத்தில் தமிழகத்தில் மதுவிற்பனை ரூ.164 கோடி!-திருப்பூர் முதல் இடம் # அப்போ தேமுதிக வின் கோட்டை ஆகிடுமோ?


================


11 யுவனின் மூன்றாவது திருமணம் - கீழக்கரையில் எளிமையாக நடந்தது - # நாமம் போட்டாச்சா? சபாஷ்


==================

12  3-வது திருமணம் செய்த யுவன்சங்கர்ராஜா வெளிநாடு போகிறார் துபாயில் தேனிலவு..# வருசா வருசம் புதுப்புது சம்சாரத்தோட ஹனிமூன் போறாரு.


=================


13  சாலை விதிகளை மீறியவர்களுக்கு சிகப்பு ரோஜா அன்பளிப்பு: பஞ்சாப் போலீசாரின் அசத்தல் நடவடிக்கை...# அதை வாங்கி  நம்மாளு குல்கந்து சாப்டுவானே?


===============


14  பாலிவுட் சினிமாவிிலேயே ரூ.278 கோடி வசூலித்து அமீர் கானின் பிகே படம் சாதனை..# ஹிந்தி ல அமீர் னா பணக்காரன் னு சிம்பாலிக்கா நிரூபிச்ட்டாரோ?


=================


15  சிறுமியுடன் உல்லாசம்: ராணி எலிசபெத் மகன் ஆண்ட்ரூ மீது செக்ஸ் புகார்.. # ஏன் உல்லாசம் மட்டும் பார்த்தாங்க?ஆரம்பம் ,வீரம் பாத்திருக்கலாமே?


===================


16
சட்டப்பேரவை தேர்தலில் திமுகவினர் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்-கருணாநிதி# கவலைப்படாதீங்க தலைவரே!அழகிரி ,ஸ்டாலின் ஒத்துமையா இருப்பாங்க


===================

17 படம் பிடிக்கலையாபார்க்காதீங்க பீகே-படத்துக்குஎதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு # ஜட்ஜ் அய்யா கே எஸ் ரவிக்குமார் சொந்தக்காரரா?


==================


18 தமிழ் நாட்டில் ஊழல் மட்டுமே நடந்துவருகிறது -ராமதாஸ் # ஏன்? வை கோ ,அஜித் ,உடல் நலனில் அக்கறை உள்ளவர்கள் எல்லோரும் தான் நடக்கறாங்க


==================


19 

வறுமையை ஒழிக்க உதவுங்கள்: மோடி அழைப்பு # நீங்க பாரீன் டூர் போகும்போது ஏழைகளை கூட்டிட்டுப்போய்டுங்க


=================


20  திமுகவில் இருந்து நான் விலகப் போவதாக வந்த தகவல்கள் வெறும் வதந்தியே- ஸ்டாலின் - என்ன தம்பி ? இப்டி பண்றியேம்மா? ஆசை காட்டி மோசம்?-அழகிரி

====================

0 comments: