Saturday, February 21, 2015

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் - சினிமா விமர்சனம்

பல்  போனா  சொல்  போச்சு  இது பழமொழி , செல் ஃபோன்  போனா  எல்லாமே  போச்சு  இது  புது  மொழி. அதாவது  இன்னைக்கு  நம்ம  வாழ்க்கைல   நீக்கமற  கலந்துட்ட  செல்  ஃபோன்  டவர்  இல்லாம  ஒரு நாள் வாழ்க்கை   தடைபட்டா   என்ன  விளைவுகள்  ஏற்படும்  ?  என்ற  வித்தியாசமான  கான்செப்ட் தான் படம் .

ஹீரோ   ஒரு  சயிண்ட்டிஸ்ட். எதுவா  இருந்தாலும் அறிவியல்  கண்ணோட்டத்தோடயே  பார்ப்பவர் . இவர்  இஞ்சினியர் ஸ்டூடண்ட் ஹீரோயினியை  லவ்வறார். இது  ஒரு டிராக் .


பேங்க் ல  ஒர்க் பண்ணும்  குடும்பப்”பாங்க்”கான  ஃபிகரான  இன்னொரு ஹீரோயினை   பில்டிங்  பிரமோட்டரான  இன்னொரு  ஹீரோ  இன்னொரு  பக்கமா  லவ்வறார். இது  இன்னொரு  டிராக்.( 3  வரில  4 இன்னொரு)



ஒரு  தீவிரவாதி  செல்  ஃபோன்  மூலம்  வெடிக்க  வைக்கும்  வெடிகுண்டை  ஒரு    கால் டாக்சில  வெச்சிருக்கார் .  காந்தப்புயல்  எனும்  இயற்கைச்சீற்றத்தால்  சில  மணி நேரம்   செல்ஃபோன்  சேவைகளே  இயங்காது   என அறிவிக்கப்படுது.


இந்த  3  வெவ்வேற  டிராக்கும்  எப்படி  ஒரு  புள்ளில இணையுது ? என்பதை  தன் வித்தியாசமான  திரைக்கதை  மூலம்  சொல்லி  இருக்கார்.புது இயக்குநர்   ராம் பிரகாஷ்  ராயப்பா. கோடம்பாக்கத்துக்கு  புது வரவு. நல்வரவு. 


ஹீரோவா தேவயானி  தம்பி  நகுல்.சயிண்ட்டிஸ்ட்டா  காட்டனும்னா லைட்டா ஃபிரெஞ்ச்  தாடிவெச்சிருக்கனும்  என்ற கோலிவுட்  செண்ட்டிமெண்ட்டை  உடைச்சிருக்காங்க. ஆனானப்பட்ட ஷங்கர்  -ன் எந்திரன்லயே அந்த  ஃபார்முலாவை  மீற  முடியலை. ஆனா புது இயக்குநர்  அசால்ட்டா  மீறி  இருக்கார்.சபாஷ்.ஒரு  விதமான  கிறுக்குத்தனத்தையும் , அதிமேதாவித்தனத்தையும்   முகத்தில்  நல்லா பிரடிபலிக்கிறார்.




ஹீரோயினா  ஐஸ்வர்யா  தத்தா.ஐஸ்வர்யா ராய்  மாதிரி  உலக அழகியா  இருந்தாலும்  சரி , ஐஸ்வர்யா ( லட்சுமி மகள்) மாதிரி  ஆண்மை கலந்த  குரலாளா  இருந்தாலும்  சரி  தமிழன்  ரசிப்பான். ( இங்கன  தமிழன் என்பது நான் தான் ) ஐஸ்வர்யா தத்தா எளிமையான  அழகு..மூக்கு தான்  எடுப்பா இல்லை. நமக்கு மூக்கா முக்கியம்?



இன்னொரு  ஹீரோவா  அட்ட  கத்தி தினேஷ். பாடி  லேங்குவேஜில்  இன்னமும்  அவர்  குக்கூ வை  விட முடியாமல் பரிதவிப்பது  நல்லா  தெரியுது. இருந்தாலும்  சமாளிக்கிறார்.


இன்னொரு ஹீரோயினா  மாநிற  தேக  தேவதை பிந்து  மாதவி.இவர்  கண்களே  பாதி  நடிப்பை  அள்ளி  வழங்கிவிடுது.இவர்   வித  விதமான கூந்தல்  அலங்காரங்களில்  ஈடுபாடுள்ள  ஒரு கூந்தல்  அழகியும்  கூட .பார்த்தீங்களா?  தமிழன்  பொண்ணுங்களோட  கூந்தலைக்கூட  உன்னிப்பா  கவனிக்கிறான்  ( ஸ்கூல்  ல    டீச்சர்  பாடம் நடத்தும்போதும்  , ஆஃபீஸ்  மீட்டிங்க்ல  லேடி  எம் டி  எதுனா  ஸ்பீச்  குடுக்கும்போதும் இதையே  தான்  கவனிச்சான் ) 


காமெடி  டிராக்குக்கு  சதீஸ் . டாக்சி  டிரைவரா   வர்றார். சொந்த  சரக்கே  இல்லாமல்  மொக்கை  போடும்  புரோட்டா  சூரிக்கு  இவர்  100   மடங்கு  தேவலை . இயல்பான  வசன  டெலிவரி . இவர்  இன்னும்  ,மேலே  போக  வாழ்த்து 

ஹீரோ நகுலின்  அம்மாவாக  வரும்  ஊர்வசி  கலக்கறார்.  பொதுவா   அம்மா  ரோல் ல செண்ட்டிமெண்ட் ல  கசக்கிப்பிழிவாங்க. இதில்  காமெடி  கலந்த  அறிவு ஜீவித்தனம் 



காமெடி  சதீஷ்க்கு  ஜோடியா  வரும்   புதுமுகமும்  ஓக்கே.


வசனம்  ஆர் செந்தில்குமார். பல  இடங்களில்  கை  தட்டல் வாங்குகிறார்.

இசை  எஸ்  தமன்.  2  சூப்பர்  ஹிட்  பாட்டு  போட்டிருக்கார் . பின்னணி இசையும்  ஒக்கே   ரகம் .

 விறுவிறுப்பான  திரைக்கதையில்   இரண்டே  பாடல்களை  சலிக்க  வைக்காமல்  , தம்  அடிக்க  ஆடியன்ஸ்  எழுந்து  போகாமல்  இருக்கையில்  அமர  வைக்கும்  அளவுக்கு   படமாக்கம்  குட்



மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  ஏன் வேலைக்குப்போகலை?

போர் அடிக்குது.மீட்டிங் கற பேர் ல பேசுனதையே திரும்பத்திரும்ப பேசி டார்ச்சர் பண்றாங்க. #,த 1



2 பக் வீட் ஆண்ட்டி ( 36)=இந்த ரேடியோவை சரி செஞ்சு குடு.


மாமாக்கே தெரியுமே மாமி.



ம்க்கும்.அவருக்கு ட்யூன் பண்றது தெரியாது #,த 1 (டபுள் மீனிங்)


3 இந்த ஆம்பளைங்க எப்பவுமே இப்படித்தான்.எதை வேணாம்கறமோ அதைத்தான் முதல்ல செய்வாங்க # த 1



4 சொந்தமா வீடு இருக்கா?



இருக்கு.ஹவுஸ் ஓனருக்கு -சதீஷ் #,த 1




5   தம்பி.கண்டம் உன் ஜாதகத்தில் இல்லை.உன் வாய்ல #,த.1


6 பெட்ரோல் டேங்க் ல எதுக்குடி அஸ்கா கொட்றே? பாயாசம் செய்ய.

வாட்?



இன் ஜின் ஜாம் ஆகும் #,த.1


7 சார்.ஐ லவ் யூ.நீங்க?



மிஸ் ! நான் வீட்ல சும்மாதான் இருக்கேன்.லவ்விட்டா போச்சு #,த.1



8 என்னை கோபத்துல கண்டபடி திட்டுங்க.



சாரி.பொய்யா எப்டி திட்ட?



பொண்ணுங்க பொய்யா லவ் பண்றீங்க.பொய்யா திட்ட மாட்டீங்களா?#,த.1



9 சயின்ட்டிஸ்ட்டை லவ் பண்ணாதடி.பர்ஸ்ட் நைட் ல பல்பு எரியுதா ? னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பானுங்க #,த.1


10 சதீஷ் = இந்த ப்யூன் வேலை எல்லாம் ரொம்ப கஷ்டம் இல்லீங்ளா?


11 சதீஷ் = ஒருத்தர் மட்டும் போட்டா அது சைன் (SIGN) .பல பேர் சேர்ந்து போட்டா சயின்ஸ் (SCIENCE) #,த.1


12 என்ன?சின்னதா இருக்கேன்னு பார்க்கறீங்ளா?சயின்ஸ்படி சின்னதா இருந்தாதான் பவர் ஜாஸ்தி - ஹீரோ டூ ஹீரோயின் (டபுள் மீனிங் )#,த 1


13 ஐ.இதான் ஏ சி யா ?



என்ன? ஏ சி க்கு ஆசீர்வாதம் பன்றே? # த.1


14 யாராவது யாரையாவது அடிச்சா வேடிக்கை பார்த்துட்டு இருப்பது தமிழன் மட்டும் தான்




மனோபாலா.= யோவ்.நான் ப்ரின்சிபால் #,த.1


 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ஈரோடு தேவி அபிராமி யில் வித்தியாசமான ஆக்சன் த்ரில்லர் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் 9 45 pm ஷோ

2 இயக்குநர் ஒரு எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக் எஞ்சினியர் போல. பல காட்சிகளில் சப்ஜெக்ட் ஷாக்கிங்




3 பிந்து மாதவி தன் கூந்தலில் மணிபர்ஸ் பின்னல் போட்டு கலக்கறார்.அடடே! # த.1


4 தமிழுக்கு எண்.1 ஐ அழுத்தவும்= முன் பாதி வரை எங்கேயும் எப்போதும் போல் சுவராஸ்யமான.2 செட் லவ் ஸ்டோரி.குட்.இடை வேளை







இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   எங்கேயும்   எப்போதும்  படத்தில்  வருவது  போல்  இரு  மாறுபட்ட   காதல்  கதைகளை  சுவராஸ்யமாக   முன்  பாதியில்  வழங்கியது 


2    காமெடி டிராக்கை  சாமார்த்தியமாய்  திரைக்கதையில்  நுழைத்தது .  காமெடியனுக்கும்  ஒரு காதல்  கதை  வைத்தது 



3   கே  பாலச்சந்தரின்  ஒரு  வீடு  இரு வாசல்  பாணியில்    இரு  கதைகளை  ஒரே படத்தில்  கொடுக்கும்  டெக்னிக்கை  கொஞ்சம்  உயர்த்தி   3  கதைகளை  தந்தது 


4   பெண்களும்   பார்க்கும்  அளவு  கண்ணியமாக  காட்சிகளை  அமைத்தது ( 3  இடங்களில்  டபுள்  மீனிங்  இருந்தாலும்  முகத்தை  சுளிக்க  வைக்கும்  அளவு  எஸ் ஜே சூர்யா  பட்டவர்த்தனம் இல்லை )


5   பாடல்கள் , இசை  , ஒளிப்பதிவு  , எடிட்டிங்  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  சராசரிக்கும்  மேலே 


6  ஹீரோ  கட்டில் ல  படுத்துட்டு  டி வி  மேட்ச்  பார்க்க   ஹீரோவின் அம்மா  ஹீரோவுக்கு  வரும்   காதல்  மெசேஜ்க்கு   ஹீரோவின்  மேற்பார்வையில்   ரிப்ளை  அனுப்புவது 


7 ஹீரோயின்   பேங்க்கில்  ஒர்க்  பண்ணிகிட்டே   தற்கொலை எண்ணத்தில்  இருப்பவர்களுக்கு  கவுன்சிலிங்  தருவதும்  அதை  ஒட்டி  வரும்  காதல்   மிக கண்ணியமான  படமாக்கம்.  ஹீரோ  ஹீரோயினிடம்  என்னை  திட்டு  பார்ப்போம்  என்றதும்  அதுக்கு  ட்ரெய்னிங்  எடுக்கும்  ஹீரோயினின்  முயற்சிகள் 


8 காமெடியன்  சதீஷ்-ன்  காதலி  அப்பாவித்தனமா?  கில்மாத்தனமா? என்ற  புரியாத  ஒரு டைலம்மாவில்  காதலனிடம்  தன்  பாய் ஃபிரண்ட்ஸ்  பத்தி  பேசுவது 


9   செல்ஃபோன்  திருடன்  , காமெடியன்  , காதலி  மூவரும்  கான்ஃபரன்ஸ்  கால்  போட்டு  காதல்  டயலாக்  பேசுவது   கலக்கலான  காட்சி 


10  பாடல் காட்சிகள்  இரண்டும்  படமாக்கப்பட்ட  விதம்  , நாயகிகளை  காட்டி இருக்கும்  கண்ணியம்  அனைத்தும்  அசத்தல்


11  டாக்சி  டிரைவருக்கு  பெண்  தரப்போகும்  ஆள்  தன் பெண்ணுடனேயே  டாக்சியில்  ஏறி மாப்ளையஈ ஆழம்  பார்க்கும்  காட்சி  அசத்தல்  எனில் அந்தஃ  கில்மாப்பொண்ணு   தன்  பாய் ஃபிரண்ட்ஸ்  பட்டியலை  நீட்டி  முழக்குவதும் உனக்கு  கேர்ள் ஃபிரண்ட்சே  கிடையாதா?  என   சதீஷ்  அங்கலாய்ப்பதும்  கலக்கல்  காட்சிகள்




இயக்குநரிடம்  சில கேள்விகள்  


1   ஹீரோ  ஹீரோயினிடம்  பிராஜக்ட்டை   கொடுக்கும்போதே   அதில்  உள்ள  ஸ்பெஷல்  டெக்னிக்கை  ஏன்  சொல்லவில்லை ?

 2  என்ன தான் காமெடிக்கு  என்றாலும்   காலேஜ்  பிரின்சிபாலாக  வரும்  மனோபாலா  அம்புட்டு  தத்தியாவா  இருப்பார் ? 


3   இஞ்சீயரிங்க்  ஸ்டூடண்ட்ஸ்  அனைவரும்  எதுவுமே  தெரியாதவர்களாக  காட்டும்  காட்சிகள்


4   படத்தின்   முக்கிய  திருப்பமாக  வரும்  க்ளைமாக்சில்   ஹீரோ  எப்படி  செல்  ஃபோன்  டவர்க்ளை   இயக்குகிறார்? என்பது  ஏ செண்ட்டர்  ஆடியன்சுக்கே  புரிஞ்சிருக்காது . பி  சி  ஆடியன்ஸ்  என்ன  பண்ணப்போறாங்களோ  ? 


5   காமெடியன்  சதீஷ் இடம்  2  மொபைல்  இருக்கு .காதலி  முதல்  முறை   ஃபோன்  பண்ணும்போதே  அவர்  செல்   ஃபோன்  நெம்பரை  நோட்   பண்ணி  இருப்பார் .  அவரது  செல்  ஃபோன்  திருடு  போனது,ம்   காதலிக்கு   ஏன்  தகவல்  சொல்லலை ? எதுக்காக  திருடன்  கூட   கான்ஃபரன்ஸ்  கால்  ? 


6  க்ளைமாக்ஸ்  பதட்டத்துக்காக  காட்டப்படும்  வாஸ்து  பாறாங்கல்   நம்ப  முடியலை . யாராவது  அவ்வளவு  எடை  கொண்ட  பாறாங்கல்லை   தொங்க  விடுவாங்களா?


7 திரைக்கதையில் 3 வெவ்வேறு கதைகளை சுவராஸ்யமாக சொன்னதும் , இணைத்ததும் ஓக்கே . ஆனா மனதைத்தொடும் காட்சிகள் இல்லாதது பெரிய குறை . எங்கேயும் எப்போதும் படத்தில் டீப்பா டச் பண்ணி இருப்பாங்க

8 எப்பவும் அசால்ட்டா தேமேன்னு இருக்கும் சயிண்ட்டிஸ்ட் ஹீரோ க்ளைமாக்ஸ் பதட்டத்தில் கூட ரொம்ப சாதா முக பாவனியோட இருப்பது ஏனோ? ஒரு பதட்டம் வர வேணாமா?

9 நாட்டுக்கு முக்கியமான டவுட் . சயிண்ட்டிஸ்ட்டோட கவனம் எப்பவும் புது புது கண்டுபிடிப்பில் தான் இருக்கும். அதே சமயம் பக் வீட் கில்மா ஆண்ட்டி வேலண்ட்டியரா வந்து வெத்தலை பாக்கு வைக்காத குறையா விருந்துக்கு அழைக்கும்போது ஹீரோ தான் ஒரு உத்தம பத்தனன் போல் காட்டிக்கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது ( தமிழன் எல்லாத்துக்கும் அதிர்ச்சி ஆவான்)


10 இந்த மாதிரி காதல் கலாட்டா லவ் த்ரில்லர் கதையில் பின்னணி இசை பிரமாதமாக இருக்க வேண்டாமா?சராசரி தான்







சி  பி  கமெண்ட் -தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் - புதிய கதை,சாமார்த்தியமான திரைக்கதை,குட் லவ் த்ரில்லர் - விகடன் மார்க் = 45 ,ரேட்டிங் = 3.5 / 5. வாயை மூடி பேசவும் படத்துக்கு இதே போல் நான் நல்ல விமர்சனம் அளித்த படத்துக்கு விகடன் 40 தான் தந்தது. இதுக்கு ரசிகர்கள் கணிப்பு விகடன் மார்க் 42 டூ 43. இது ஏ செண்ட்டர்களில் அட்டகாசமான வரவேற்புடனும் , பி சி யில் மொதலுக்கு மோசம் இல்லாமலும் போகும். முதலீட்டுத்ஹ்டொகையைப்போல் 5 மடங்கு வசூலிக்கும். இந்த ஆண்டின் முக்கியமான படம்



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -45



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= நன்று



 ரேட்டிங் -3.5 / 5
ஈரோடு  தேவி  அபிராமி யில்  படம்  பார்த்தேன். செகண்ட்  ஷோ வுக்குக்கூட  புது  இயக்குநர்  படம்  ஹவுஸ்  ஃபுல் ஆனது  ஆச்சர்யம். 50  நாள்  ஓடிடும்


1 comments:

Unknown said...

Senthil avargalae, climax la Hero vuku padhattam illai enbadhu ungal karuthu..

aanal, padathin thiraikadhai padi - andha climax la hero than project ah test panrar.. avalodhan.. avar tension aaga vendiya avasiyam illai..

romba yadharthama naturala eduthirukar dir..

- Aravind
- @aravinditzme - twitter