Saturday, July 09, 2016

ஸ்டாலின் VS நக்மா

கண் துஞ்சாமல் கடமையாற்றிட வேண்டும் : அதிமுக தொண்டர்களுக்கு  ஜெ வேண்டுகோள் # நீங்க எழுதப்போற பரீட்சைக்கு அவங்க ஏன் கண் விழிச்சு படிக்கனும்?===============

2

கலெக்‌ஷன்' - "கரப்ஷன்' - "கமிஷன்' மூன்றும் இல்லாத ஒரு ஆட்சியை தருவோம்: மு.க. ஸ்டாலின் #இந்த 3 க்கும் கலைஞருக்கும் கனெக்சன் இருக்கே ரொம்ப நாளா


======================


3  


கலெக்‌ஷன்' - "கரப்ஷன்' - "கமிஷன்' மூன்றும் இல்லாத ஒரு ஆட்சியை தருவோம்: மு.க. ஸ்டாலின் #இந்த 3 க்கும் கலைஞருக்கும் கனெக்சன் இருக்கே ரொம்ப நாளா


===================

4  

தேர்தலுக்காக மக்களை சந்திப்பவர் ஜெயலலிதா: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் # நாம மட்டும் குஷ்பூ வுக்காகவா மக்களை சந்திச்சோம்?===================


5  

திமுகவின் தேர்தல் அறிக்கை ஏமாற்று நடவடிக்கை: ஜெ # நமக்கு வந்தா ரத்தம், அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி=======================

6  அச்சமின்றி ட்ரைலரை வெளியிட்டார் விஷால்! # ஜெ ஆட்சியில் தான் அச்சமின்றி ட்ரெய்லர் வெளியிடப்படுகிறதுனு இன்னும் யாரும் கிளம்பலையா?


================

7 விஜயகாந்த் செய்ததை அதிமுக, திமுகவால் செய்ய முடியுமா?, சவால் விடுகிறேன்: பிரேமலதா # இப்போ அவங்க 2 பேரும் பணம் தர்றாங்க,உங்களால் முடியுமா?

===============

8

தேர்தலில் மீண்டும் போட்டியிடும் 89 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு இருமடங்காக உயர்வு # கணக்கில் காட்னதே டபுள்னா கணக்கில் வராதது விஜய் பட வசூல் அளவு?====================


திருப்பூர் அருகே 3 வாகனங்களில் ரூ.570 கோடி பறிமுதல் #இப்டி பறிமுதல் செஞ்ச பணத்தையாவது குடிசை வாழ் மக்களுக்கு, பிளாட்ஃபார்ம்வாசிகளுக்கு எதுனா குடுக்கலாமில்ல?==================

10 அதிமுக-திமுக-பா.ஜனதா கட்சியினர் கூட்டணியில் சேர பண ஆசை காட்டினார்கள் - விஜயகாந்த் # எவ்ளோவ் பணம்?னு ஒவ்வொர் பேரத்துலயும் எண்ணிப்பார்த்து போதாதுனுட்டீங்களா


===================


11 அதிமுகவில் இணைந்தார் கோபி தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி! # மிஸ்டர் குப்புசாமி! ஏன் குப்புற விழுந்தே சாமி?


================


12 சென்னை திமுக வேட்பாளர் சேகர்பாபு கொலைமிரட்டல்.. சுயேச்சை வேட்பாளர்கள் குமுறல் # தோல்வி பயம் தான். ஜெயிக்க வாய்ப்புள்ளவர் இப்படி பண்ணிட்டு இருக்க மாட்டாங்க 


===============

13 சர்க்கரை உற்பத்தியில் இந்தியா 2வது இடம்.. முதல் இடத்தில் பிரேசில் # இது இனிப்பான செய்தி,ஆனா சுகர் பேஷண்ட்சும் பெருகினா கசப்பு செய்தி


==============

14 ஓட்டுக்கு பணம் கொடுப்பதை ஆரம்பித்து வைத்ததே திமுகதான்: வைகோ தாக்கு # ஆனா இப்போ அதிமுக தான் அந்த வேலை அதிகம் வழி மொழிவது


=====================

15 தொண்டர்கள் விழிப்புணர்வுடன் இருங்கள்... 234 தொகுதிகளிலும் வெற்றி உறுதி: ஜெ. # வெற்றி உறுதின்னா எதுக்கு ஜாக்கிரதையா இருக்கனும்? ரிலாக்சா இருக்கலாமே?

===================


16 சசிகலா, இளவரசி, சுதாகரன்...இவர்கள் இருக்கும் போது குடும்ப அரசியல் பற்றி ஜெ. பேசலாமா? -கலைஞர் #கனிமொழி,.ஆ,ராசா இருக்கும்போது ஊழல் பற்றி நாம பேசலாமா?


=================

17 சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் கட்சி மாறும் பச்சோந்தி கட்சி பாமக: விந்தியா # ஏம்மா, சேலம் பாமக குப்புசாமியை விலைக்கு வாங்குனது யாரு?


=================

18 மக்களுக்காக தொடர்ந்து உழைக்க அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறேன்-கருணாநிதி # ஓய்வெடுங்க தலைவரே! உழைச்சது போதும்


==============

19 தேர்தல் நாளன்று தமிழகத்தில், காலை, மதியம் 2 வேளை சினிமா காட்சிகள் ரத்து # பூத்ல ஆளாளுக்கு படம் காட்டுவாங்க, அதே போதும்


===============


20 ஸ்டாலின் ஹீரோ மாதிரி இருக்கிறார் - நக்மா # ஆனா மாஸ்டர் ஹீரோ கலைஞர் தான், அவரை புகழ்ந்தா எதுனா கிடைக்கும்


=======================

0 comments: