Tuesday, July 19, 2016

ஆட்சி பாதிலயே அவுட் ஆகிடும்னு ஜோசியர் சொன்னாரா?கலைஞர் மகிழ்ச்சி

டியர், என்னை விட அவனுக்கு 1000 ரூபா தான் சம்பளம் ஜாஸ்தி, அதுக்காக என்னை கழட்டி விடறியே?

 வெறும் 1.1% வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியே மாறுது, கல்யாணக்காட்சி மாறாதா?


=============


 மேடம், நீங்க கொடுத்த இலவ்ச செல்ஃபோன் சில குறிப்பிட்ட ஃபோன் நெம்பர் க்கு மட்டும் போக மாட்டேங்குதே?

 ஆமா,  எதிர்க்கட்சி ஆ|ளுங்க நெம்பர்க்கு போகாது

===============


குருவே! சர்வ அங்கமும் தரையில் கிடத்தும்படி விழும் சர்வாங்காசனம் செஞ்சா என்ன பலன் கிடைக்கும்? 


 அமைச்சர் பதவி கிடைக்கும்


==============


4  இன்ஸ்பெக்டர், விஜய் மல்லைய்யா ஸ்ரீலங்கா வில் தான் தலைமறைவா இருப்பார்னு எப்டி கண்டுபிடிச்சீங்க?

 இலங்கையின் பழைய பெயர் சி”லோன்”. அவருக்குப்பிடிச்சதும் லோன்


=================


5  எங்கள் தலைமுறையில் ஓடிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் முன்னணியில் இருப்பது இவருதாங்க.

ஓஹோ, எழுதிட்டு இருப்பார்னு நினைச்ச்சேன், ஏன் ஓடிட்டு இருக்காரு?


====================

6 யார்யா அந்தாளு? எனக்கு வணக்கம் வைக்கல, ஸ்ட்ரிப்பா நிக்கறாரு, தூக்கிடலாமா?


அய்யோ , மேடம், அவருதான் கவர்னர்


===================


7  மேடம், அமலா பால் சம்பளம் இப்போ 10 லட்சம் தானாம் , மேரேஜ்க்கு முன் 25 லட்சம்

வெரிகுட்.நான் ஆட்சிக்கு வந்ததும் பால் செலவு குறைஞ்சிடுச்சில்ல?


====================


8 படம் ரிலீஸ் ஆகி 39 நாள் ஆகியும் எல்லா தியேட்டர்லயும்  ஹவுஸ்ஃபுல், இது ப்யூர் மேஜிக்


ஸ்யூர் சார்,இதுல நோ லாஜிக்


==============


 மேடம், கட்சில சேர 50 லட்சம் பேர் மிஸ்டு கால் விட்டாங்கன்னீங்க ஆனா 12 1/4 லட்சம் வாக்கு தான் விழுந்திருக்கு?

எலக்சன் டைம்ல நாட் ரீச்சபிள் ஏரியால இருந்தாங்களாம்


===================


10   நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்காத ஒரே கட்சி நாங்க தான்

அப்போ டெபா”சிட்டிங்” லீடர் ஆஃப் சீட்டிங் னு ஒரு பட்டம் கொடுத்துடுவோம்


==================

11 டாக்டர்.எந்திரிச்சு நிக்கக்கூட முடியல.

ம்
கை கால் எல்லாம் நடுங்குது
ம்.ரெஸ்ட் எடுங்க.
அதெப்பிடி?இன்னைக்கு பதவி ஏற்கனுமே?

===============

12 என் வகுப்பில் 54 பேருக்கும் தலா 5 அரியர்.

அடப்பாவி.சமச்சீர் கல்வி ங்கறதை இப்டி புரிஞ்சுக்கிட்டீங்களா?


=================


13 தலைவரே"மகளிர் அணித்தலைவிக்கு எப்போ வாழ்க்கை குடுப்பீங்க?

இப்போ பதவி ஏத்துக்கப்போறேன்.நாளை ஏத்துக்கறேன்


================


14 தலைவரே! நம்ம வீடியோ வந்தும் ஜெயிச்சது எப்டி?

மதி கெட்ட மக்கள்.நித்தியானந்தா வீடியோ வந்த பின் தான் ரசிகைகள் பெருகுச்சாம்


============

15 சார்.நீங்க ஏன் புத்தக விமர்சனம் பன்றதில்லை?

THE JUNGLE BOOK விமர்சனம் வேணா பண்றேன்


=================

16 மேடம்.232 க்கு 1 சேர் தான் போட்டிருக்கீங்க?

படையப்பா படம் பார்க்கலை?


================


17 மேடம்.யாரும் கால்ல விழக்கூடாதுனு சொல்லிட்டீங்களாமே?

ஆமா.1 அடி தள்ளி விழலாம்


============

18 மேடம்.கட் அவுட் வேணாம்்னு சொல்லீட்டிங்களாமே?

ஆட்சி பாதிலயே அவுட் ஆகிடும்னு ஜோசியர் சொன்னாரு


============

19 என்ன தலைவரே! ஓப்பனிங் பால்லயே சிக்சர் அடிக்கறாங்க.என்ன பண்ணலாம்?

1ம் பண்ண முடியாது.வேடிக்கைவேணா பார்க்கலாம்


============

20 தலைவரே! தமிழர்களை வாழ்த்தலையா?

நல்ல நாள்லயே வாழ்த்த மாட்டேன்.இப்போ கடுப்பில் இருக்கேன்.சாபம் வேணா விடலாம்


==================

0 comments: