Wednesday, July 27, 2016

சிங்கிள் டீ க்கு கூட வழி இல்லைனு யாரும் புலம்ப வழி இல்லை,


1 மம்தாபானர்ஜி பதவியேற்பு விழாவில் நாகரீகமான வரவேற்பு கிடைத்தது:-கனிமொழி #எப்டி?ராஜபக்சே கூட விருந்து சாப்ட்டீங்களே .அங்கே கிடைச்சது போலா?

=================
2  புதுச்சேரி முதலமைச்சராக நாராயணசாமி அறிவிப்பு #செய்தி
பதினைந்து நாள்ல அடுத்த முதலமைச்சர் வந்துடாம பார்த்துக்கவும்


================


3 விஜய் படத்தை வெளியிடாமல் தடுத்தது தமிழக அரசுதான்!- ஜெ அன்பழகன் # தலைவா ஓகே.காவலன்?


=============

4 நேருவை புகழ்ந்ததால் 'டிரான்ஸ்பர்'; கலெக்டர்

மீது மபி அரசு நடவடிக்கை
# மிசஸ் மவுண்ட்பேட்டன் பிரபு வையே கரெக்ட் பண்ணிட்டாரே ன்னாரோ?=============

5 எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம்; துரோகிகளை மன்னிக்க முடியுமா? -கலைஞர் # முடியாதுதான்.ஆனா அழகிரி உங்க.ரத்தம் ஆச்சே?சத்யசோதனை

===========

6 தனிப் பெரும்பான்மைக்கு வேண்டிய 118 பேரை விட 12 பேர் தான் அங்கே அதிகம். -கலைஞர் #,நீங்க கணக்குலயும் வீக்கா இருக்கீங்களே குமாரசாமி போல


============

7 அ.தி.மு.க.,வின் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு நன்றி -ஜெ #   வைகோ, அழகிரி , அன்புமணி ,  விஜய்காந்த்க்கு நன்றி-ன்னு ஓப்பனா போடலாமே?=====================8  காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதற்கு, அ.தி.மு.க.,வின் பணபலம் தான் காரணம்.-EVKS #  ஜெயிச்சதுக்கு திமுக வின் வாக்கு வங்கி காரணம், மொத்தத்துல நாம சுத்த வேஸ்ட்
==================


அதிமுக ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கிறது - அனிதா குப்புசாமி # மிலிட்ரில சல்யூட்தானே அடிப்பாங்க? கால்ல விழுவாங்களா?

==================

10 ஊழலை ஒழித்து விட்டது மத்திய அரசு - மோடி # முதல்ல உங்க பாஸ்போர்ட்டை ஒளித்து வைக்கனும், எப்போ பார், ஃபாரீன் டூரு


========================


11 என்னைப் பொறுத்தமட்டில், நாட்டில் உள்ள, 125 கோடி மக்களும், என் குடும்பம்.-மோடி # ஆனா எப்பவும் குடும்பத்தை விட்டுட்டு தனியே கிளம்பிடறீங்க


====================


12 

இரண்டு நாட்களில் வெயிலின் தாக்கம் குறையும்: வானிலை ஆய்வு மையம் # சூரியனோட தாக்கம் மே 16 ல் இருந்தே குறைஞ்சிருச்செ?===================


13 

புதுச்சேரியில் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: நாராயணசாமி உறுதி # 15 நாட்களில் நிறைவேற்றப்படும்னு சொல்லுங்க,அதானே உங்க ஃபார்முலா?================


14 

புகைப் பிடிக்கும் பழக்கத்தால் 8 வினாடிக்கு ஒருவர் இறக்கிறார்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் # தம் அடிச்சா ஏழரை தான், அஷ்டமத்துல சனி தான்===================


15 

எம்.எல்.ஏ.க்களை அலைபாய விடாமல் தடுப்பது அதிமுகவுக்கு சவால்: கருணாநிதி # பண வலை பாயப்போகுதுன்னு சூசகமா சொல்றாரு,இதையே ஒப்புதல் வாக்குமூலமா எடுத்து......======================


16 புதுச்சேரி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணசாமிக்கு எதிர்ப்பு: நமச்சிவாயம் ஆதரவாளர்கள் போராட்டம், மறியல், தடியடி # வைணவ கோஷ்டி VS  சைவம்  கோஷ்டி மோதலா?


===================


17 

கர்நாடக மாநிலத்தில் வேகமாக பரவும் பறவை காய்ச்சலால் 2 லட்சம் கோழிகள் இற‌ப்பு: தமிழகம், ஆந்திரா, கேரள எல்லைகளில் கண்காணிப்பு # சிக்கன் பார்ட்டிக்கு எல்லாம் திக்கென இருக்குமே?


===============


18 

மும்பையில் ஒவ்வொரு வார்டிலும் நமோ டீ ஸ்டால்: பாஜக கவுன்சிலர் வலியுறுத்தல் # சிங்கிள் டீ க்கு கூட வழி இல்லைனு யாரும் புலம்ப வழி இல்லை, சபாஷ்================


19 

கர்நாடகாவில் பெண் ஊழியரை ( விதவை)பலாத்காரம் செய்ய முயற்சி: சிசிடிவி கேமராவில் பதிவு; ஊராட்சித் தலைவர் கைது# தலைவர் ஆகிட்டாலே லேடீஸ் மேட்டர்ல வீக் ஆகிடறாங்க


=======================

20 

சீனா: வயது முதிர்ந்த பெற்றோரை கவனிக்க ஊதியத்துடன் கூடிய விடுமுறை # நல்ல திட்டம்தான்,ஆனா பாசம் என்பது தானா வரனும்,சட்டம் போட்டு வரக்கூடாது====================

0 comments: