Tuesday, July 12, 2016

உங்க தலைவர் கொள்ளை அடிச்சாரா? இல்லையா?

1  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் 5 வருடங்களுக்கு திருப்பதியோ, பழநியோ செல்லும் வேலையே இருக்காது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்==================


தலைவரே! இத்தாலி நிறுவனத்திடம் கப்பல் வாங்குனதுல ஊழல் நடந்ததா?

 10 ரூபா செப்பல் வாங்குனாலே 2 ரூபா கமிசன் அடிப்போம், கப்பல் வாங்குனா சும்மா விடுவோமா?


===============


3 உங்க தலைவர் கொள்ளை அடிச்சாரா? இல்லையா?

 கோர்ட்ல நிரூபணம் ஆகலை

 கேள்வி அது அல்ல. திருடுனாரா? இல்லையா?

 ஆதாரம் இருக்கா?

 அய்யோ ராமா


==================


தலைவரே!ஆட்சிக்கு வந்த உடன் கட்டப்பஞ்சாயத்து இருக்காதுன்னீங்களாமே?

ஆமா, முதல்ல முடிஞ்சவரை சேர்த்துக்கனும் சொத்து, அதுக்குப்பின் அண்ணன் கூட கட்டப்பஞ்சாயத்து


==============

5 தலைவரே! 10 வருசத்துக்கு முன் என்ன சொன்னீங்க?

 இதுதான் என் கடைசி தேர்தல்னேன்

 இப்போ ஏன் ?

 நான் எப்பவும் பேச்சு மாற மாட்டேன்,அன்றும்  இன்றும் என்றும்


===================

6  தலைவரே! டீக்கடைல , சலூன்ல இனாமா பேப்பர் படிச்சா தப்பா?
 தப்பே இல்லை, தப்பித்தவறி பனாமா பேப்பர் படிச்சுடாதீங்க யாரும்.நம்ம வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் 


================

7  எந்த எந்த MLA  உங்க கிட்டே தப்பா நடந்துக்கிட்டாங்க?

 சரிதாநாயர் -அது நீளமான லிஸ்ட் யுவர் ஆனர்,  என் வீட்டுக்கு வராதது 4 பேர்தான்


===============


8  டியர்,நீங்க அடுத்த பிறவிலே எனக்கு தாய்மாமனா பிறக்க வேணும்

அய்யய்யோ, உனக்கு சீர் செஞ்சு மாளாது.இப்டி டிஎம் மாமா வாகவே இருந்துடறேன்


==============


9 சீமான் கடலூர்ல செயிச்சா என்னாகும்?


சீ”மான்” SEE"MAN" ஆஃப் த மேட்ச் ஆகிடுவாரு
=============10 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 வருடங்களுக்கு ஒரு முறை புது சம்சாரம் கட்டி வைப்போம்.பழைய சம்சாரம் போர் அடித்தவர்கள் 70% பேர்
===============11 வாக்குக்குப்பணம் கொடுத்ததால கடலூர் மக்கள் தாக்கினாங்களாமே?மத்த கட்சிகள் எல்லாம் 250 ரூ ,500 ரூ தந்தப்ப இவங்க மட்டும் 25 ரூபா தந்தாங்களாம்


============

12 சார்.நீங்க இன்னும் ஓட்டுப்போட போகலை?உங்க ரசிகர்கள் வெய்ட்டிங்


இப்போ தானே நெ 1 ஹீரோ போய் இருக்காரு.வரிசைப்படி போவோம்


==============

13 தலைவரே! சென்னைல மட்டும் எல்லா தேர்தல்லயும் ஜெயிச்சுடறீங்களே எப்டி?


நமக்கு ஏகப்பட்ட குடும்பம் இருக்கு.குடும்ப வாக்கு பதிவானாலே போதுமே?============

14 ஹலோ .தேர்தல் கமிசனா?சென்னைல 100 கோடி கிளம்பிடுச்சு.வந்தா பிடிக்கலாம்.


ம்க்கும்.இப்டித்தான் சொல்வீங்க.எண்ணிப்பார்த்தா 25 கோடி தான் இருக்கும்


============

15 ஜட்ஜ் = பீப் சாங் பாடுனீங்களா?


சிம்பு +அனிரூத் = ஓட்டு போட்டேன், பீப் சத்தம், வந்தது. ஓடி வந்துட்டோம், வேற எதும் தெரியாது===================

16 எந்த கட்சிக்கு ஓட்டு போட்டீங்க?

கமல் = நல்லவங்களுக்கு போட்டேன்

 அப்போ 2 , 3 பேருக்கு போட்டீங்களா? செல்லா வாக்காகி இருக்குமே?


===============


17 


 டியர், சென்சிட்டிவ் ஏரியான்னா என்ன?  பெண்ணின் காது மடல் , இடை வளைவு, பின்னங்கழுத்து  யோவ்!நான் கேட்டது தேர்தலில் தொகுதியில்
=====================18  டாக்டர். ஒவ்வொரு நாளும் கண்ணுக்கு மையிட போர்,தேர்தல் மை வெச்சுக்கலாமா?அழியாதில்லை?


ஏம்மா, இப்டி ஒரு டவுட்? கண் அவுட்


==================


19 ஏப்பா  சி எம் சேர்  ரெடியா? பேனா ரெடியா?

  தலைவரே! உங்க ஆர்வத்தை அடக்குங்க.தேர்தல் தான் முடிஞ்சிருக்கு, ரிசல்ட் இன்னும் வர்லை


=====================


20  சார்,80,000 + ஃபாலோயர்ஸ் இருந்தும் உங்க ட்வீட்ஸ் RT  அதிகம் ஆகலையே ஏன்?

6 கோடி வாக்காளர்களில் 2 கோடி தொண்டர்படை உள்ளவங்க
ட்வீட்சே 100 RT  ஆகறதில்லை


==================

0 comments: