Tuesday, July 12, 2016

நீ உத்தமனா? ன்னு கேட்டா கோபப்படாதவன் யார்?

தமிழக தேர்தல் வாக்குப்பதிவு 70% டூ 75% வரும் என கணிக்கிறேன்.இதனால் ஆளுங்கட்சிக்கு ஆபத்து குறைவு

=============

2 அடுத்த தேர்தலில் இளைஞர்கள் வெள்ள சமய பணி ஆற்றியது போல் வாக்குப்பதிவு % உயர உழைத்தால் 90% டூ 95% உறுதி. அப்போ புது ஆட்சி வர வாய்ப்பு உண்டு


============

3 கடலூர் வாக்கு % மாலை  4.30  வரை 73%  . 6 க்குள் 80% வந்தால் சீமான் வெற்றி உறுதி


==================

பண பலம், பாரம்பரிய கட்சி வாக்கு வங்கி பலம் இவற்றை மீறி  ம நகூ , பாமக , நாம் தமிழர் பெறும் ஒவ்வொரு தொகுதி யும் சிறப்பு மிக்கவை


===================

தவறாது வாக்களிக்கவும் என பிரச்சாரம் செய்த சூர்யா ,ஃபாரீனில் இருப்பதால் வாக்களிக்க வரவில்லை. சூழ்நிலைக்கைதி என்பது இதான் போல


=========

6 விஜயை தவறான வழியில் திருப்பி விட்டது அவர் அப்பாதான், அவரது படங்களுக்கு ரிலீசில் பிரச்னைக்கும் அதுவே காரணம்


===========

7 கணிப்பு , யூகம் தவறி விட்டால் வேறு இடம் போகனும்னா மீடியாக்கள் நிலை?


==============

8 சென்னையில் வாக்குப்பதிவு மிகவும் குறைந்திருப்பது திமுக வுக்குப்பின்னடைவு. படித்தவர்கள் ஓட்டு பெரும்பாலும் திமுக வுக்கே விழும்


==================


9  படிக்காதவர்கள் முட்டாள்கள்  என்ற தவறான பிம்பம் படித்தவர் மூளையில் பதிந்திருக்கிறது. அவர்கள் காமராஜர் பற்றி சரியா படிக்கலை போல , அய்யோ பாவம்


====================


10  பள்ளி கல்லூரி பாடம் படித்தவரை விட வாழ்க்கைப்பாடம் படித்த பாமரர்கள் தான் தமிழ் நாட்டின் பலம்


==================

11  நடிகரோ, அரசியல்வாதியோ வாக்களிக்கவில்லை எனில் ஏன் வரவில்லை? என கேட்க ஒவ்வொரு வாக்காளனுக்கும் உரிமை  உண்டு.


===================

12  என் தேர்தல் கருத்துக்கணிப்பு ( ஆல்டர்டு)

1 அதிமுக = 174
2 திமுக = 40
4 பாமக =4
3 தேமுதிக =10 5 பாஜக =2
7 சுயேட்சை =1
6 நாம் தமிழர் =1


===============
13 நீ உத்தமனா? ன்னு கேட்டா கோபப்படாதவன் தமனா ரசிகன் தான். உத்"தமனா?"


================


14 நகரவாசிகளைவிட கிராமவாசிகளுக்கு பொறுப்புணர்வு ,சமூக அக்கறை அதிகம் என்பதற்கு லேட்டஸ்ட் உதா தர்மபுரி 85% வாக்குப்பதிவு சென்னை லோயஸ்ட் %


==========

15 ஜாதி வெறி தவறு.ஜாதிக்கட்சிக்கும் எதிர்ப்பு.ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் அதிகம் எந்த ஜாதி ஓட்டு இருக்கோ அந்த ஜாதி வேட்பாளரை நிறுத்துவது சரியா


==


16 காதலித்தது அனாமிகா அளவு.
சைட் அடிச்சது கடல் கன்னி அளவு

============

17 இப்போது அறுவடை செய்யமுடியவில்லை என்பதற்காக விதைத்தது வீண் என்று கருதாதே.எதிர்காலத்தில் சேர்த்து வைத்து பலன் பெறுவாய் ,PMK,NT


==============

18 நெட் தமிழன் புதுசா ஒரு டெக்னிக் கண்டு பிடிச்சிருக்கான்.எதுனா ஒரு பொண்ணுக்கு மென்சன் போட்டு எங்கே உன் தோழியைக்காணோம்கறான். ஒரே அழுத்தில் 2 பாமக வாக்கு


=================

19 சன் டி வி ஷேர் வெச்சிருக்கறவங்களுக்கு மே 19 திக் திக்னு இருக்கும்.தோல்வி எனில் 15% இறங்கும், படு தோல்வி எனில் 25%. வெற்றி எனில் 10% ஏறும்===========


20 நெட் தமிழன் தான் ஃபாலோ பண்ணும் 389 பெண் ஃபாலோயர்ஸ் கிட்டேயும் மென்சன் போட்டு ~ நீங்க எல்லாம் என் கிட்டே ஏன் பேசறதில்லை?னு ஜெராக்ஸ் போட்டுட்டு இருக்கான்


================

0 comments: