Wednesday, July 20, 2016

டியர்.நாமே தனிக்குடித்தனம் தானே?இந்த வீட்டை ஏன் ரெண்டா பிரிக்கனும் ?

டீச்சர்.நான் 33.9% மார்க்.அந்தப்பொண்ணு.35% மார்க்.வித்தியாசம் 1.1% தானே?


இந்த ஈர வெங்காயம் எல்லாம் எதுக்கு?நீங்க பெயில் .அவங்க பாஸ்


============

2 வில்லன் ஹீரோவோட மாமியாரை முதல்ல சாகடிக்கறாரு.க்ளைமாக்ஸ்ல பாட்டியை கொல்றாரு


மொத்த்த்துல ஆடியன்சுக்கு எம கண்டம்?


================

3 தலைவரே!500 சரக்குக்கடை க்ளோஸ் பண்றாங்களாம்.என்ன செய்யலாம்?


நாம பிரைவேட் சரக்குக்க்டை ஓப்பன் பண்ணிடலாமா?==========

4 எதிர்க்கட்சி எம் எல் ஏ க்களுக்கு ஏன் 18,வது வரிசை ல இடம்?


அதுல எத்தனை பெரிய கருப்பன் கள் இருக்காங்களோ?எதுக்கு வம்பு.துஷ்டனை தூர வை============

5 சார்.க்ளைமாக்ஸ் ல நீங்க நயன் தாரா கூட சேருவீங்களா?ஆண்ட்ரியா கூடவா?


நயன் தாரா கூட ஆல்ரெடி சேர்ந்தாச்்.அப்போ மிச்சம் இருப்பது ஆன்ட்ரியாதானே?================

6 தலைவரே! நியூமராலஜில நம்பிக்கை உண்டா?


நான் பகுத்தறிவுவாதி.
ஓ.உங்க ட்விட்டர் ஹேண்டில் என்ன?
கலைஞர்89 தேர்தலில் பெற்ற சீட்?
அது!
89


============

7 மேடம், அமைச்சர்களுக்கு ஏன் தனித்தனி பதவி ஏற்பு இல்லை?

 ஆட்டு மந்தைகளுக்கு அந்த மரியாதை போதும்


==================

8  மேடம், எந்த அடிப்படைல டாஸ்மாக் மூடப்படும் முதல் 500 இடங்களை தேர்ந்தெடுத்தீங்க?\

 சிம்ப்பிள் லாஜிக், எங்கெல்லாம் அதிமுக தோற்றதோ அங்கெல்லாம்


====================


தலைவரே! செம்மொழி மாநாட்டில் முதல் வரிசை யாருக்கு?
என் குடும்பங்களுக்கு.
2006 பதவி ஏற்பில்?
முதல்ல நாம திருந்தனும்.
என் குடும்பத்துக்கு.


===========

10 தலைவரே! உங்க பையனை முதல்வர் வேட்பாளரா அறிவிக்க மனசு.வந்ததா?

வர்லை.
நாமே உரிய மரியாதை தராதப்போ நம்ம எதிரி தருவங்கனு எதிர்பார்க்கலாமா?

=============

11 மேடம்.டாஸ்மாக் வருமானம் இதனால் குறையுமா?

ச்சே ச்சே மன்த்லி டார்கெட் 10% அதிகம் பண்ணிடுவோமில்ல?

==============

12 வரலட்சுமி =,எப்போ கல்யாணம்?
விஷால் = கடனை கட்னதும்
லட்சுமிமேனம் =,எப்போ கட்டுவீங்க?
விஷால் = சித்தப்பா டூர் போறப்ப


===========

13 தலைவரே! எதிர்க்கட்சித்தலைவரா மக்களுக்காக என்ன செஞ்சீங்க?

என் பையனுக்கு முன் வரிசை சீட் வேணும் னு அடம் பிடிச்சேன்.எப்டி நம்ம பொது நலன்?

=============

14 பிரபல நிறுவனங்களின் ரொட்டிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயன பொருட்கள்:விசாரணை #,ரொட்டி சாப்பிட்டா ஆயுள் கெட்டி கிடையாது


===============


15 டீச்சர்.மீனலோசனி தானே சரி.மீனலோச்சனி னு வெச்சிருக்காங்க?

எக்ஸ்ட்ரா ச் வெச்சது லவ்வரா இருக்கும்.


================


16 எதுக்காக அவரை லாக்கப் ல தனிமை ல வெச்சிருக்கீங்க?

கூட்டத்தோட கூட்டமா அடைச்சு வெச்சா கூப்பாடு போடுவீக.உரிய மரியாதை இல்லைனு


================

17 ஜட்ஜ் = பதவி ஏற்பு விழால எப்டி தில்லா திருடுனே?

கைதி = எனக்கு ஆதரவா 232 திருடங்க இருந்த தைரியம் தான்


============

18 மேடம்.தாலிக்கு தங்கம் திட்டத்தால நம்ம காசு நம்மகிட்டயே.வருமா?எப்டி?

எப்டியும் தாலியை அடமானம் வெச்சு குடிக்க வருவானில்ல?

=============

19 இன்ஸ்பெக்டர்.அரசியல்வாதி யாரும் அந்த எஸ் ஐ பணத்தை திருடி இருக்க மாட்டாங்களா?
ஆமா.அவங்க லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் கொள்ளை.ஜஸ்ட் 40,000 rs?

=============

20 டியர்.நாமே தனிக்குடித்தனம் தானே?இந்த வீட்டை ஏன் ரெண்டா பிரிக்கனும் ?

அடியே! இப்போ 200 யூனிட் செலவு.இனி 100 + 100 , எப்டி ஐடியா?


================

0 comments: