Wednesday, July 13, 2016

தலைவரே! கள்ளச்சாராயம் காய்ச்ச இப்போ என்ன அவசரம்?

தலைவரே ! நீங்க ஏன் ஓட்டுப்போடலை?

விரல் ல மை வைப்பாக.கறை படியாத கைக்கு சொந்தக்காரன்னு பேர் எடுக்கனும்

============

2 தலைவரே! கள்ளச்சாராயம் காய்ச்ச இப்போ என்ன அவசரம்?

சப்போஸ் ஆட்சிக்கு வந்தா முதல் கையெழுத்து மதுவிலக்கு.2வது கள்ளச்சாராயம்


==============


3 உதய சூரியன் வந்துடுமா?

எங்கே தலைவரே?நேத்து இன்னைக்கு 2 நாளும் மழை மேகம் மறைச்சிடுச்சு.சகுனமே சரி இல்லை


============

4 உங்க கருத்துக்கணிப்பு பொய்த்து விட்டால் என்ன செய்வீங்க?

1 ம் செய்ய மாட்டேன்.குமாரசாமி கணக்காகிடுச்சு சாரி ம்பேன்.எங்க ஊர்ல 2 ரூ க்கு 5 சாரி


=====

5 நீங்க ஆளுங்கட்சி ஆளா?

எதுக்கு வாக்களிக்கனும் என்ற நிலைப்பாடு வேற.எது ஆட்சிக்கு வரும் என்ற யூகம் வேற.குழப்பிக்காதீங்க


==================

6 தமிழன் சோற்றால் அடித்த பிண்டம் போல் 250 ரூபாய்க்கு விலை போய் விட்டான்.நான் மிக ஏழையாக இருப்பதாலும் கொடுக்க மனம் இல்லாததாலும் தோற்று விட்டேன்


===========

7 எத்தனையோ கணிப்பு ல திமுக தான் ஜெயிக்கும்னு சொல்றாங்களே?

சரித்திரத்தின் பக்கங்களை புரட்டிப்பாருங்க.கருத்துக்கணிப்புகள் பொய்த்ததே இல்லையா?


============

8 தலைவரே! தேர்தல் நடந்த விதம் எப்படி?

இப்பவே எதும் சொல்ல மாட்டேன்.ரிசல்ட் எனக்கு பாதகம் ஆனா மட்டும் தேர்தல் கமிசன் மேல் பழி போடுவேன்


=============

9 சார்.மல்யுத்தத்துுல சுமோ வீரன் னு சொல்றாங்களே அது யாரு?

டாடா சுமோ வண்டில விபத்து ஏற்படுத்தாம நிதானமா போற எல்லாரும் சுமோ வீரரே!


=============

10 ஓட்டுப்போடும்போது ரொம்ப நேரம் யோசிச்சீங்களே?
காவலன் ரிலீஸ் ஆகறப்ப திமுக வால பிரச்னை.தலைவா வுக்கு ஜெ வால பிரச்னை.யார் வந்தாலும் ஆப்பு நமக்கு்


=============

11 தலைவரே! எக்சிட் போல் ரிசல்ட் நமக்கு சாதகமா வந்ததால சன் டி வி ஷேர் 10%,எகிறிடுச்சாமே?


அதான் நம்ம பிளான்.அதுல 0.01% லாபத்தை தந்திடு

==============

12 தலைவரே! +2 ல நீங்க எவ்ளோ மார்க் வாங்குனீங்க?

எக்சாம்க்கு வித் அவுட் ல ட்ரெய்ன்ல போறப்ப டிடிஆர் ட்ட மாட்டிக்கிட்டேன்.


================

13 சார்,80,000 + ஃபாலோயர்ஸ் இருந்தும் உங்க ட்வீட்ஸ் RT அதிகம் ஆகலையே ஏன்?

2 கோடி தொண்டர்படை உள்ளவங்க
ட்வீட்சே 100 RT ஆகறதில்லை


===================

14 தலைவரே! அவங்க தரப்பில் லட்டு ஆர்டர் பண்ணிட்டாங்களாம், நாம என்ன ஆர்டர் பண்ணலாம்?

பொறுய்யா, எப்படியும் நம்க்கு அல்வா தான்


==============


15 1000  விளக்கு தொகுதில மட்டும் நாம தோத்துடக்கூடாது.

ஏன்?

அதுக்கு அப்புறம் 1000 விளக்கம் சொல்லிட்டு இருக்கனும்


=====================

16 டாக்டர்,எந்த பிரச்சனையானாலும் ஒரு பாட்டில் பீர் ஆறுதல்  தரும்னு சொல்றாங்களே?

அப்போதைக்கு ஆறுதல் , எப்”போதை”க்கும் கெடுதல்================


17 தலைவரே! வெற்றி கல்யாணம்-னு பேட்டி கொடுத்திருக்கீங்க\? புரியல

வெற்றி நிச்சயம்-னு இன்னும் எத்தனை நாளுக்கு சொல்லிட்டு இருக்கறது?


=================


18
 தீவிர திமுக காரரான நீங்க ஏன் டெய்லி மீனம்மா கிட்டே கடலை போடறீங்க?

ஏன்?

MEEN"AMMAA" கயல் ல அம்மா வருதே , ஆகாதே உங்களுக்கு?===============


19  சார், நீங்க வித விதமா கணக்கு போடறதா அவர் சொல்றாரே\?

 நான் மேத்ஸ் ஸ்டூடண்ட், சோ தப்பில்லை, வித விதமா கணக்கு பண்ணாதான் தப்பு ================


20   டியர், வழக்கமா கதவை டொக் டொக்னு தட்டுவீங்க, இப்போ பண்ணலையே ஏன்?

 எங்க கட்சி ஜெயிக்கலைன்னா KNOCK  கை கட் பண்ணிடுவேன்னு சொல்லிட்டேனே!


==================

0 comments: