Wednesday, July 13, 2016

108% சதவீத வாக்குப் பதிவு

தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் கட்டப்பஞ்சாயத்து இருக்காது; மு.க.ஸ்டாலின் வாக்குறுதி # உடனே எப்படி இருக்கும், ஒரு வருசம் ஆகனும்


===============

என்னுடன் ஆபாச படங்களில் உள்ள எம்.பி.க்கள், மந்திரிகள் விவரத்தை வெளியிடுவேன் -சரிதா நாயர் # அந்த லிஸ்ட் அப்புறம், முதல்ல வீடியோ

============

3 90 வயதுக்கு மேல் உள்ளவர்களை தூக்கி எறியுங்கள் - ராகுல்காந்தி # சார், இந்த ஆர்டர் கேரளாவுக்கு மட்டும்ங்களா? தமிழ் நாட்டுக்குமா?


==============


4  வாசுதேவநல்லூர் (தனி) தொகுதி பா.ம.க வேட்பாளர் காசிபாண்டியன் திமுகவில் இணைந்தார்!# பேரில் புண்ணியஸ்தலம், சேர்ந்த இடம் பாவஸ்தலம்


==============

5 ஆண் வாக்காளர்கள் - 2,88,62,973

பெண் வாக்காளர்கள் - 2,93,33,927 # எங்கே போனாலும் லேடீஸ் தான் லீடிங்


==============

6 அரவக்குறிச்சியில் தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணயம் அதிரடி உத்தரவு.. # தேர்தலே தேவை இல்லை. மே 19 ல் எது ஆளுங்கட்சியோ அதுதான் ஜெயிக்கும்

==============

7 ரூ.570 கோடி பணம்: 18 மணி நேரத்திற்கு பின் வங்கி உரிமை கோரியது ஏன்? – கருணாநிதி # நேர்ல போனாவே 2 மணி நேரம் ஆகும் மேனேஜரை சந்திக்க.============
8 தமிழகத்தில் 2 மணி நேரத்தில் 18 சதவீத வாக்குப் பதிவு # குத்து மதிப்பு குமாரசாமி.=அப்போ 12 மணி நேரத்தில் 108%?!!!!
===========9 ஜெ. மீண்டும் முதல்வராவார்- OPS#மே 19 ல் முதல்வர் ஆவார்.ஜூன் ல தீர்ப்பு வரும்.ஜெயில் போவார்.நீங்க மீண்டும் முதல்வர்.மனக்கணக்கு==============10 தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றால் 23/5/16ல்  தி.மு.க., வெற்றி பெற்றால், 21/5/16ல் அரசு பதவியேற்பு விழா நடத்த திட்டம் # தானைத்தலைவருக்கு எப்பவும் அவசரம்தான்====================

11  புதிய தமிழகத்தை உருவாக்க ஒரு வாய்ப்பு கேட்டு, மக்களிடம் மன்றாடுகிறோம்.- ராம்தாஸ் # புதிய தமிழகம் ? அதான் டாக்டர் கிருஷ்ணசாமி ஆல்ரெடி உருவாக்கிட்டாரே?


===============

12  5 ஆண்டுகளில், லண்டனுக்கு இணையாக, சென்னையை மாற்றிக் காட்டு கிறோம்.- பிரேமலதா  # இப்பவே சென்னை மாடர்ன் பொண்ணுங்க எல்லாம் ஃபாரீன் கேர்ள்ஸ் போல ட்ரெஸ் போட்டிருக்காங்க


===================

13 மதவாத கட்சியான பா.ஜ.,வை, தமிழக மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்-இந்திய கம்யூ., ராஜா # மதத்தை மதிப்போம்,மதவாதகட்சியை எதிர்ப்போம்

==============

14 புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள வசந்தராஜா திரையரங்கம் வாக்குச்சாவடியாக மாறியது # ரிப்பீட் ஆடியன்ஸ் வந்திருக்கப்போறாங்க. கள்ள வாக்காகிடும்


=================


15 

சின்னம் தவிர்த்து எண்ணம் பார்த்தால் நாடு உருப்படும்: டி.ராஜேந்தர் # விரைவில் மாறுவது திண்ணம்.இளைஞர்கள் மாறிய வண்ணம்


=====================
16  வாக்களிப்பில் வரிசைமுறையைப் பின்பற்றாத விஷால்.. பொதுமக்கள் அதிருப்தி # அடுத்த வாரம் மருது வருது, அவருக்கு படிப்பினை தருது

===============

17 தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு ஒளிமயமாக, பிரகாசமாக இருக்கிறது; கருணாநிதி # தோத்துட்டா பணநாயகம் ஜனநாயகத்தை வென்றதும்பீங்களா?=============18 234 தொகுதிகளிலும்


திமுக அமோக
வெற்றி பெறும்
-ஸ்டாலின்
#232 ன்னு சொல்லி அப்டேட் ஆகுங்க.2 தொகுதில தேர்தலே நடக்கலை============

19  கடந்த முறை, நம்பியது போன்று, இந்த முறை, அ.தி.மு.க.,வின் இலவசங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். -
பொன்.ராதா # இதை உங்க கட்சி ஆளுங்களே நம்ப மாட்டாங்க


===============


20  காங்,பா.ஜ.,வுக்கு எதிராக, தேசிய அளவில் ஒரு மாற்று தேவை.-இ.கம்யூ., பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி: # ஆம்,சரிதான்,ஆம் ஆத்மி க்கு வாய்ப்பு இருக்கு


=====================

0 comments: