Friday, July 08, 2016

காஜல் அகர் “வால் போஸ்டர்”

1 வெயில் காதலன்= நான் ஆபிஸ் போனதும் 20 பேர்  என்னை சுத்தி நிப்பானுக..

மழையின் காதலன் = ஏன்? எல்லார் கிட்டயும் கடன் வாங்கி இருக்கியா?

=================


தலைவரே! குங்குமம் வார இதழ் நம்ம கட்சிதானே?எதுக்கு அதை அழிக்க நினைச்சீங்க?


யோவ்.நெத்தில வெச்சு விட்ட குங்குமத்தை அழிச்சேன்.புரளி கிளம்பிடுச்


=============

3 விஜய் மல்லைய்யாவுக்கு பிடிச்ச தமிழ் பத்திரிக்கைகள் எவை?


ஆனந்த வி"கடன்",ஜூனியர் வி"கடன்",சுட்டிவி"கடன்" ,டைம் பாஸ் வி"கடன்"


=============

4 தலைவரே! இந்துக்களின் சின்னமான குங்குமத்தை நெத்தில ஏன் அழிச்சீங்க?


நான் ஒரு பகுத்தறிவுவாதி.


அப்போ குங்குமம் வெச்சவங்க ஓட்டும் வேண்டாமா?

===============

5 தலைவரே! கழகம் கலகம் என்ன வித்தியாசம்?


நம்ம அமைப்புக்குப்பேரு கழகம்.நம்ம அமைப்பு க்கு ஏதாவது பிரச்னைனா நாம பண்றதுக்குப்பேரு கலகம்


================
6 டாக்டர்,  அடிக்கடி உப்புமா சாப்பிட்டா  ஒல்லியா இருக்கும் என் உடல் உப்புமா?

 யோவ், உணவில் அதிகம் உப்பு,எண்ணெய் சேர்த்தா தான் உப்பும்


=======================


7 டாக்டர் , அடிக்கடி முந்திரி  சாப்பிட்டா மந்திரி ஆகிடலாமா?

எந்திரி  க்கவே முடியல, ஆனா பதவி ஆசையை மட்டும் விட முடியல?


==========================8 தலைவரே! உங்களை ஆதரிக்காதவங்க எல்லாரும் அரைகுறைனு சொல்றாங்களே?

என்னைப்பற்றி முழுசா தெரிஞ்சவங்க என் பரம்பரையையே ஆதரிக்க மாட்டாங்க


==================


9  தலைவரே! படிச்சவங்க பூரா உங்களுக்கு ஆதரவாமே?

 ஆமா , குடிச்சவன் குடியைக்கெடுத்தான், படிச்சவன் பண்பைக்கெடுத்தான்


=================


10 
நான் ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்திருக்கேன்


ஓஹோ என்ன பண்றீங்க?
சமையல் தான். நான் ஒரு குக், கிராமத்தில் இருந்து வந்திருக்கேன்னு சொன்னேனே


===============

11 ரஜினி படம் மாதிரி இருப்பார்னு பார்த்தா நம்ம தலைவர் விசு படம் மாதிரி ஆகிட்டார்

எப்டி?
நாட்டுக்கு ஒரு நல்லவன்
வீடு மனைவி மக்கள்

============

12 சர்வர் , தோசை 1 சொல்லுங்க

நைஸ் தோசையா? கல் தோசையா?
நிக்கி கல் ராணி தோசையா கேட்கப்போறேன்? ஏதோ 1 போட்டுக்கொண்டு வாய்யா


==================


13 பொண்ணு ஸ்ரீதிவ்யா மாதிரி இருக்கும் மாப்ளே

அடடா, ரொம்ப சின்னப்பொண்ணோ?
ரெண்டே வருசத்துல 4 பேர் கூட ஜோடி சேர்ந்துடுச்சு


================

14 டியர், உங்க கூட பேசிட்டிருந்தா ஈசியா டைம் பாஸ் ஆகிடுது

இப்டியே பேசிட்டே இருந்தா நீ எக்சாம்ல பாஸ் ஆக மாட்டே


================


15 தலைவரே! நீங்க சொன்னபடி எல்லா இடத்துலயும் வால் போஸ்டர் ஒட்டிட்டோம்

நிஜமாவா?
காஜல் அகர் வால் கூட விட்டு வைக்கலை. முதுகில் ஒட்டிட்டோம் 1


================


16 சார், உங்க கடைல சிம் வாங்கலாம்னு வந்தா பூரா பசங்களா இருக்காங்க?

யோவ், அதுக்காக ”சிம்”ம வாஹினியையா ரிசப்ஷன்ல வைக்க முடியும்?


=============


17 வீட்டுக்கு திருடனுங்க வந்து எல்லா லைட்சையும் ஆஃப் பண்றவரை என்னம்மா பண்ணிட்டு இருந்தே?


வாக்குக்கு பணம் தருவாங்கன்னு பார்த்துட்டு இருந்தேன்


==============

18 சார், நீங்க சுட்ட தோசை வானத்தைப்போல சினிமா தோசை மாதிரியே இருக்கே?

சினிமாக்காரங்க தான்யா எப்பவும் நம்மை பார்த்து சுடுவாங்க


===============


19  வால் போஸ்டர்” கிளுகிளுப்பாக ஒட்ட எங்களை அணுகுவீர்

காஜல் அகர் “வால் போஸ்டர்”
நிஷா அகர் “வால் போஸ்டர்”
சோனியா அகர் “வால் போஸ்டர்”


===============

20 தலைவரே! ஆட்சிக்கு வந்ததும் மதுக்கூர், மதுக்கரை ஊர் பேரெல்லாம் மாத்துவீங்களா? ஏன்?

எங்கள் ஆட்சியில் மதுவை ஒழித்தோம்னு சொல்லிக்கலாமில்ல?


==================

0 comments: