Sunday, July 24, 2016

வாக்கு வங்கியில் வறுமை, இதில் என்ன பெருமை?

மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழாவுக்கு அமிதாப்பச்சனை அழைத்ததால் சர்ச்சை # ஐஸ்வர்யாராய் டான்ஸ் வேற இருக்காம்


============2 தனியார் பஸ்களில் புதிய படங்களை ஒளிபரப்ப வேண்டாம் நடிகர் சங்கம் வேண்டுகோள்# FDFS ஷோ மட்டும் தான் இன்னும் ஓடலை"============3 பெரிய அறை வேண்டும்: தி.மு.க. கோரிக்கை # பெரிய கருப்பன் பெரிய அறை பெரிய கட்சி அடடே==============4 விஜயகாந்திற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது -சுப்பிரமணியசாமி # சுவாமி சார், சரியான ட்யூப் லைட்னு சொல்லிடப்போறாங்க உங்களை
================
5 திமுக 2016 தேர்தலோடு அழிந்துவிடும்,அன்றுஅரசியலில் இருந்து விடை பெறுகிறேன்- இன்று - -தமிழருவி மணியன் # நாவன்மை இருப்போரிடம் நாவடக்கம் தேவை


==================


6

இறப்பு என்னை தழுவும் வரை மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைக்கமாட்டேன்- தமிழருவிமணியன்# அருவி ரொம்ப அடி வாங்கிடுச்சு போல

=============

7 அரசியலை விட்டு விலகுகிறேன் - தமிழருவி மணியன் அறிவிப்பு # அப்போ இத்தனை நாளா அரசியல்லதான் இருந்தீங்களா? அதே பாதிப்பேருக்கு தெரிஞ்சிருக்காது=================


8 விஜயகாந்திற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது -சுப்பிரமணியசாமி # இப்படிச்சொல்லித்தான் வை கோ கேப்டனைக்கவுத்தாரு, அடுத்து உங்க டர்னா? நடத்துங்க

============

9 சிம்புவின் நடிப்பை பார்த்து வியந்த ஆண்ட்ரியா # ஊரெல்லாம் உன்னைப்பார்த்து வியந்தாரா?சக்களத்தி சண்டை போடலையா நயன் தாரா?

=================

10 1.125 பில்லியன் இந்தியர்களும் என் குடும்பத்தினர்: பிரதமர் மோடி உருக்கம் # ஆனா குடும்பத்தை விட்டுட்டு அடிக்கடி ஃபாரீன் போய்டறீங்க

===============

11 மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களுக்கு ரூ.1000 கோடி செலவு: கெஜ்ரிவால் #அரசின் சாதனை விளக்க விளம்பரத்துக்கு வரம்பு இருக்கு,விதி மீறி இருக்கு


===============

12 ஜெயலலிதாவின் செயல்பாடு ஆறுதல் தருகிறது - திருமாவளவன்! # எங்களுக்கு உங்கள் நடவடிக்கை சந்தேகம் தருகிறது


===========

13  உ.பி.,யில் மதுவிலக்கை அமல்படுத்துவதில், பல சிக்கல்கள் . மதுக் கடைகளை நம்பி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்;-அகிலேஷ் யாதவ்:#  ஆமா, டாக்டர்கள் , நர்ஸ்கள் , வெட்டியான்கள் இவங்களும்====================


14 மத்திய அரசின் விழாவில் அமிதாப் பச்சன் பங்கேற்பதற்கும், கறுப்பு பணம் தொடர்பான அவர் மீதான விசாரணைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.-சதானந்த கவுடா பேச்சு # இது மோடி அரசின் கறுப்புப்பக்கம், மோடிக்கு பங்கம்


=======================


15  இது நம்ம ஆளு'  கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை  மாவட்டங்களில் மட்டும் வெளியிட இடைக்கால தடை # சிம்பு வும் கமல், விஜய் வரிசையில்

=======================


16  அதிமுகவிற்கு வியத்தகு வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு நன்றி - ஜெ # நீங்கள் பட்டுவாடா பண்ணச்சொன்ன 250 ரூபா வுக்கு நன்றி

===============

17 தமிழை சொல்லிக் கொடுக்காமல் உலகத் தமிழ் மாநாடு... செம்மொழி அந்தஸ்து எதுக்கு? உயர்நீதிமன்றம் காட்டம் # சாரி யுவர் ஆனர், வி வில் டேக் ஆக்சன்ஸ்

==============

18 100க்கும் மேற்பட்ட துணிக்கடைகளில் திருடிய ‘பலே’ பெண் சென்னையில் கைது # கேடி லேடி க்கு அரசியல்ல வாய்ப்பு உண்டா?


===============

19 தேர்தலில் 5.3 % ஓட்டுகளை பெற்று தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்த இடத்தில் பாமக-ராமதாஸ் # வாக்கு வங்கியில் வறுமை, இதில் என்ன பெருமை?

==============

20 விஜயகாந்த், அன்புமணி ஆகியோர் முதல்வராக வேண்டும் எனும் சுயநலத்தால், MLA ஆகக் கூட வெற்றி பெற முடியவில்லை.-தமிழிசை # ரெண்டே சாய்ஸ் தான் எனும் நிலையை மாற்றியதே  வெற்றி தானே?


====================

0 comments: