Thursday, July 14, 2016

மேடம், டி எல் வாங்கன்னு டி எம் பண்ணாக்கூட பிடிச்சுடுமா போலீஸ்?

வாக்களிக்காத பிரபலங்கள் டாக்டர் கிருஷ்ணசாமி, விக்ரம், தனுஷ் ,சூர்யா #விஐபிகள் மக்களுக்கு ரோல்மாடலிங்கா இருக்கனும், இப்டி ட்ரோல் மாடல் ஆகக்கூடாது


=============


பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் தவறிவிட்டது- வாசன் # எதிர் காலத்தில் இதுக்குன்னு தனி குழு அமைத்து அரசியல் கட்சி தலைவர்கள் வங்கிக்கணக்கை கண்கா|ணிக்கனும்================


பெண்கள், இளைஞர்கள் எங்களை பார்க்கும்போது, இன்முகத்துடன் வரவேற்றனர்;tதிமுகவுக்கு வெற்றி நிச்சயம் -நாராயணசாமி # வாக்குக்கு காசு தர வந்திருப்பீங்கனு நினைச்சிருப்பாக


==================


என்ன செய்தாலும், உதய சூரியன் வெல்வது உறுதி.- மு.க.ஸ்டாலின் # மே 16,17,18 இந்த 3 நாளா உதய சூரியனை பார்க்க வே   முடியலையே? நோ வே?


=================


பிரதமராவதே எனது லட்சியம்.. 1195 மதிப்பெண் எடுத்த சென்னை மாணவி சத்ரியா # எல்லாருக்கும் உலகம் சுற்றும் ஆசை வந்துடுச்சு

=================

6 மதிமுக.,வில் இருந்து மணிமாறன் திடீர் விலகல்: # அட, பொறுங்கய்யா, நாளை செட்டா போலாம் இப்டி தனித்தனியா போனா எப்டி?


===================


7 வாக்காளர்களுக்கு ரூ.6000 கோடி பணம் பட்டுவாடா ஆகியுள்ளது... ஈஸ்வரன் # இதுல 4000 கோடி ஜெ , 2000 கோடி கலைஞர்


=================


8 தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் #கனமழை-க்கு வாய்ப்பு # எலக்சன் நடந்தப்பவும் லீவ், கவுண்ட்டிங் அன்னைக்கும் லீவ்.ஐ ஜாலி


=====================

9 நெட்டில் பெண்களுக்கு தொந்தரவு செய்வோர்க்கு புதிய சட்டம் வரும் - மேனகா காந்தி # மேடம், டி எல் வாங்கன்னு டி எம் பண்ணாக்கூட பிடிச்சுடுமா போலீஸ்?


================


10  வெற்றிவித்தியாசம் குறைவாக இருந்தால் தபால்ஓட்டு மீண்டும் எண்ணப்படும்- ராஜேஷ்லக்கானி # முதல் டைம் எண்ணும்போதே நிதானமா பொறுமையா பொறுப்பா எண்ணவும்

=================

11

கண்டெய்னர் லாரிகளில் சிக்கிய ரூ.570 கோடியை 6½ மணி நேரம் எண்ணிய வங்கி ஊழியர்கள் # கவுண்ட் பண்ணாம வெயிட் போட்டு பார்த்து அந்த கால்குலேசன் ல ஈசியா எண்ணலாமே?


===============

12 ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி 24-ம் தேதி சீனா பயணம் # பிரதமரும், ஜனாதிபதியும் போட்டி போட்டுட்டு வேலை செய்யறாக


============

13 மருது படத்தின் வில்லன் மனுஷனே கிடையாது: விஷால் # ஹீரோ மட்டும் என்னவாம்? வாக்கு போட க்யூ வில் நிக்காம இண்டீசண்ட்டா நடந்துக்கிட்டது

========


14  சென்னைமழை.மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழகஅரசு அறிவுறுத்தல் # நல்லபொறுப்புள்ள அரசு போல.அட்வைஸ் சொல்றாங்க.ஆனா நடவடிக்கை எதும் எடுக்க மாட்டாங்க


===================

15 என் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: ராகுல் காந்தி # பாவம், நாளை மனநிலை தான் சரி இருக்காது, ரிசல்ட் வருது


==============


16 எனது கணவர்  முகேஷ் அரசியல்வாதி ஆக தகுதி இல்லாத்வர் - சரிதா # இல்லீங்களே, இப்போ உங்களை டைவர்ஸ் பண்ணாமயே மெத்தில் தேவிகா கூட வாழறாரு,இந்த ஒரு தகுதி போதுமே


==============


17 நான் ஒருத்தன் ஓட்டுப்போடாததுனால ஆட்சியாங்க மாறப்போகுது - தனுஷ் # இப்படியே 6 கோடி தமிழர்களும் நினைச்சா என்னாகும்?


============

18 வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை :வைகோ # அப்படி தோசையை திருப்பிப்போடுங்க, அப்போ கேப்டனின் சிஎம் ஆசை? ஆசை தோசை அப்பள வடை தானா?


==================

19 வை கோ விஜய்காந்த்தை தலைவனாக ஏற்றுக்கொண்டதால்  நான் அவரை தலைவனாக ஏற்காமல் விலகுகிறேன் - மணிமாறன் # இப்போதான் அந்த தகவல் இவருக்கு வ்ந்ததா? 40 நாளுக்கு முன்பே ஏத்துக்கிட்டாரே?


================

20  ரிசர்வ் வங்கி கவர்னரை உடனடியாக நீக்க வேண்டும்;- சுப்பிரமணியசாமி # வேற யார் பேரையாவது மனசுல் ரிசர்வ் பண்ணி வெச்சிருக்கீங்ளா?

==================

0 comments: