Sunday, July 03, 2016

நஷ்டத்தில் இயங்கிவரும் மின்வாரியம், vs லாபத்தில் இயங்கி வரும் டாஸ்மாக்

1 ஏழை மக்களின் பக்கம் இருப்பது அ.தி.மு.க.- ஜெ # உங்க ஆட்சி 5 வருசம் நடந்துமா ஏழைங்க இன்னும் இருக்காங்க?பணக்காரங்க ஆகி இருப்பாங்களே?


==================

2ஜி, 3ஜி ஊழல் செய்தவர்கள் தமிழகத்தில் உள்ளனர்- மோடி #இந்த ராணுவ ரகசியம் இப்போதான் உங்களுக்கு தெரியுமா?

===========


3 தலைவர் திருமாவளவன் தலைமைதான் இன்றைய தமிழகத்துக்குத் தேவை!'- சத்யராஜ் # கூட்டணில குழப்பத்தை ஏற்படுத்திடாதீங்க


=================

4
அர்ஜூனன் கண்ணுக்கே இரட்டை இலைதான் தெரிந்தது: மனோபாலா # ,மகாபாரத அர்ஜூனனா? ஆக்சன் கிங் அர்ஜீனா?

================

5   தப்பு யார் செய்தாலும் அடிப்பேன்- விஜயகாந்த் # அப்போ புதுசா கல்யாணமான தம்பதிங்க யாரும் கட்சில சேர மாட்டாங்க


=====================


6
தப்பு யார் செய்தாலும் அடிப்பேன்- விஜயகாந்த் # இன்னும் ”சத்ரியன்” நினைப்பாவே இருக்கீங்க, இப்போ ”தெறி” சீசனே வந்துடுச்சு


=================


7
ஜெ, இலவசங்களை மட்டுமே நம்புகிறார்.-கனிமொழி: # 2006 ல கலைஞர் அப்டி நம்பி தானே ஜெயிச்சாரு?

===============

8  
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாகமாற்றிக் காட்டுவதாக உறுதி அளிக்கிறோம்-ராகுல்: # 4 ஜி லயா? ஹெலிகாப்டர் பர்ச்சேசிலா?


=============


9  
ஒட்டிப் பிறந்த குழந்தைகளைப் போல தி.மு.க., -- காங்., கூட்டணியைப் பிரிப்பது கஷ்டம்.-ஸ்டாலின்:# காங்கிரஸ் கூட கூட்ட|ணி வெச்சா பிரச்சாரத்துக்குப்போகமாட்டேன்னு ஒரு மானஸ்தர் சொன்னாரே?


==================


10   அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை பார்த்து மோடியே திகைத்து போய் இருக்கிறார்-கருணாஸ். # பெஸ்ட் சீட்டிங் அவார்டெல்லாம் உண்டாம்


=========================


11 இந்த தேர்தலோடு தே.மு.தி.க. காலியாகிவிடும் - வைகைச்செல்வன். # இப்படிச்சொன்னதுக்காக பிரேமலதா கோபத்தில் பத்ர காளி ஆகி விடும் 

===============


12  மக்களின் குறைகளை ஜெ கேட்டதுண்டா? ஸ்டாலின் கேள்வி # சரி சொல்லுங்க, அப்பா வழி விட மாட்டேங்கறார் என்பது போக உங்க குறை என்ன?


===================

13  ஆட்சி அமைக்காவிட்டால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டோம் - வைகோ # கப் ஜெயிக்கலைன்னா இனி கிரிக்கெட்டே விளையாட மாட்டோம்னு டோனி சொல்ற மாதிரி இருக்கு


===============


14 நஷ்டத்தில் இயங்கிவரும் மின்வாரியம் எப்படி இலவச மின்சாரம் தரமுடியும்? - எச்.ராஜா# லாபத்தில் இயங்கி வரும் டாஸ்மாக்கை எப்டி நிறுத்த முடியும்? அது போல


============

15 தமிழகத்தில் லஞ்சமும், மது விற்பனையும் பெருகிவிட்டது: வைகோ குற்றச்சாட்டு. # சிகரெட் கூட செம சேல்சுங்கோவ்


==============


16 தே.மு.தி.க., கூட்டணி ஆட்சி வெளிப்படையாக செயல்படும்: விஜயகாந்த் # எல்லாருக்கும் ஓப்பனா  எல்லார் முன்பும் அடி விழும் என்ப்தே அடிப்படையா கொண்டு செயல்படும்?=================


17  கருத்துக்கணிப்பு வெளியிடும் ஊடகங்களை தேமுதிகவினர் பார்க்க வேண்டாம்: விஜயகாந்த் # தீயனவற்றைப்பாராதேனு காந்தி சொல்லியே தமிழன் கேட்கலை============

18 20 கிலோ இலவச அரிசி: மத்திய அரசே காரணம் - மோடி # அப்போ இந்தியா பூரா எல்லா மாநிலங்களிலும் இது இருக்கா?

============

19 நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத ஜெ அரசு-கருணாநிதி # இல்லீங்களே, எந்தக்குற்றமும் செய்யலைன்னு குமாரசாமி சொன்னப்போ அந்த தீர்ப்பை ஏத்துக்கிட்டாங்களே?


==========

20 பென்னாகரத்தில் பணப்பட்டுவாடா துவக்கம்: அன்புமணி குற்றச்சாட்டு # எல்லா நகரத்திலும் தொடங்கியாச்சு.இதான் உங்க டக்கா|?=======================

0 comments: