Sunday, July 24, 2016

கபாலி - சினிமா விமர்சனம் ( சிபிஎஸ்)

இங்கே இருக்கும் தமிழர்கள் கஷ்டத்தையே தீர்க்காம தமிழ் இனத்தலைவர்னு சொல்லிட்டு காலம் தள்ளும் ஆட்கள் மத்தியில் மலேசியத்தமிழர்கள் பிரச்சனைக்காக பாடுபட்ட ஒரு டான் 25 வருச சிறை வாழ்க்கைக்குப்பின் தான் தொலைத்த தன் மனைவி, மகள் இருவரையும் எப்படி தேடி கண்டு பிடிக்கறார்? வில்லன் க்ரூப்பை எப்டி பழி வாங்கறார் ? என்பது தான் கதை.

இது இயக்குநர் ரஞ்சித் படமா? ரஜினி படமா? என பலர் பட்டி மன்றம் நடத்திட்டு இருக்காங்க. சந்தேகமே இல்லாம இது  ரஜினி படம் தான்.


அண்ணாமலை படத்தில் தான் முதன் முதலா சூப்பர் ஸ்டார் அப்டினு டைட்டில் போடும்போது செமயான ஒரு பிஜிஎம் போட்டு அப்ளாசை அள்ளுனாங்க. இந்தப்படத்தில் அந்த பிஜிஎம் மாறி இருக்கு. குட் 1

ரொம்ப நாளுக்குப்பின் ஓவர் பவுடர் மேக்கப் இல்லாத ரஜினி. ஷங்கர் படங்களில் பார்த்து சலித்த கலரிங் ரஜினியை விட இந்த கறுப்பு ரஜினி தான் டாப்.

கூலிங்க் கிளாஸை கழற்றி சுழற்றி ஸ்டைல் பண்ணலை, சிகரெட்டை வாயில் தூக்கிப்போடலை, ஆனாலும் ரஜினிக்கு இன்னும் 100 ஸ்டைல்கள் கை வசம் ஸ்டாக் இருக்கு போல . மகிழ்ச்சி எனும் ஒற்றை டயலாக்கை அவர் 6 விதமான சூழல்களில் வெவ்வேறு முக பாவனையில் சொல்வது கலக்கல் ரகம்


மக்ளை பார்த்ததும்  உருகும் வியக்கும் ரஜினியும் , மனைவியை நீண்ட இடைவெளிக்குப்பின்  பார்க்கும் ரஜினியும் நடிப்பில்  வெல்டன் சொல்ல வைக்கிறார்.


அவருக்கு ஜோடியாக வரும் ராதிகா ஆப்தே தமிழ் சினிமாவில் வந்த ஹீரோயின்களில் படம் முழுக்க மாசமாக வந்த  முதல் ஹீரோயின் என்ற பெயரை தட்டிச்செல்கிறார். 2 இடங்களில் இவர் நடிப்பு அற்புதம்.


மகளாக வரும் தன்சிகா  பாப் கட்டிங் வைத்து ரஜினி போலவே வேகம் காட்டும் கேரக்டர். குட் ஆக்டிங்


 எல்லோரையும் விட அனைவரையும் கவரும் நடிப்பு அட்ட கத்தி தினேஷ். ஒரு  இடத்தில் ரஜினி முன் நின்று சரி சரி என தலை ஆட்டும் போது பதட்டத்தில் அவர் கூலிங்கிளாஸ் கீழே விழுவது  அவர் பாட்இ லேங்குவேஜ் அருமை


ஜான் விஜய் , கிஷோர் இருவரும் நல்ல திறமை சாலிகள். ஆனால் இதில் வீண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் , பொதுவாகவே நம் வாழ்வில் , ஆஃபீசில்   திறமை சாலிகள் வீணடிக்கப்படுவது சகஜம் தானே?


வில்லன்  சுத்த வேஸ்ட் , ஒரு ரகுவரனோ ஒரு பிர்காஷ் ராஜோ ஒரு சத்யராஜோ செய்த வில்லத்தனத்தில் 25%  கூட வரவில்லை. வில்லன் கெத்து காட்னாத்தான்  ஹீரோ கெத்து இன்னும் எகிறும். டம்மி வில்லனை ஹீரோ ஜெயிப்பது எப்படி இருக்கு?ன்னா  சுயேச்சை வேட்பாளரை  எதிர்த்து 
கலைஞர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பது போல்.

இசை சந்தோஷ் நாராயணன். 2 பாட்டு தான். சுமார் ரகம் தான் . ஆனால் பிஜிஎம் மில் கலக்கிட்டார்.  நெருப்புடா தீம் மியூசிக்கை வெச்சே ஒப்பேத்திட்டார். 

 ஒளிப்பதிவு குட் . லொக்கேஷன்  செலக்‌ஷன் சுமார் ரகம் தான். ஆர்ட் டைரக்சன் கூட  பெரிதாக எடுபடவில்லை.


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1   மலேசியத்தமிழர்கள் பிரச்சனை என்ன? அவர்களுக்காக பாடுபட்டவரை 25 வருசம் ஜெயிலில் தள்ளும் அளவு அவர் என்ன தப்பு செஞ்சார்? என்பதை டீட்டெய்லாக காட்டவில்லை

2  அந்த காந்தி அம்பேத்கார் வசனம் நல்லாருந்தாலும்  எதுக்காக் அப்டி ஒரு டயலாக் வருது? என்ன அர்த்தம்? யார்க்கும்  தெரியலை


3  ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப்பாடுபட்ட அம்பேத்கார் பற்றி ஏதோ சொல்ல வர்றார். குறியீடு எல்லாம் ஓக்கே , அது எல்லாம் சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்புரியுமா?


4 இடைவேளை டைமில் ரஜினி மீது கழுத்தில் , இடுப்பில்  நெஞ்சில் என   3க்கும் மேற்பட்ட இடங்களில்  துப்பாக்கிக்குண்டு பாய்கிறது. பின் கேண்ட்டீன் கூட போகாம பதட்டமா பார்த்தா ரஜினி சிரிச்சுட்டே அடுத்த சீனில் கழுத்தில் மட்டும் ஒரே ஒரு பேண்டேஜ் போட்டுட்டு கலைஞர் டி வி பார்க்கறார். இது எப்படி?


5  மெட்ராஸ் படத்தில் நடிச்சிருக்கும் பாதிப்பேரு இதிலும் அட்டெண்டென்ஸ்  போடுவது ஏனோ? வில்லன் கேங்கில்  ரஜினி கேங்கில்  டெரரான ஆட்கள் யாருமே இல்லையே? டான்  படங்கள் எல்லாம் எப்படி கேஸ்டிங் இருந்தது ? என ஒரு பார்வை பார்க்கவும்


6  க்ளைமாக்ஸ்  இன்னும் பக்காவா பண்ணி இருக்கலாம்.


தியேட்டரிக்கல் ட்விட்டர்  அப்டேட்ஸ்


கேரளா - பத்தனம்திட்டா - தன்யா = கபாலி 3.30 pm ஷோ

2 கபாலியைப்பற்றிய என் எதிர்மறை கீச்சுகள் எல்லாம் 1000 ரூபா கொள்ளையால்தான்.நிஜ விமர்சனம் இனி தான்

3 கேரளா வில் மம்முட்டி ,மோகன் லால் படங்களை விட அதிக கூட்டம் வருவது
ரஜினி ,விஜய்,சூர்யா படங்களுக்கே


4 வாட் எ ஒன்டர்புல் பிஜிஎம் FOR .ரஜினி இன்ட்ரோ


வழக்கமான ரஜினி இன்ட்ரோ சாங் அளவு இல்லாமல் எம்ஜிஆர் இன்ட்ரோ துதி பாடல் போல் ஓப்பனிங் சாங்

6 கபாலி இடைவேளை வரை ரஜினி மேஜிக் + பிஜிஎம் காப்பாத்தி இருக்கு.விறுவிறுப்பு.


நச் டயலாக்ஸ்

1 பறவையோட குணம் பறக்கறதுதான்.பறக்க விடு.வாழ்வா?சாவா? அது தீர்மானிக்கட்டும்.கூண்டில் அடைக்காதே !


கடைசி நிமிசம் வரை உயிர் வாழ முயற்சி பண்ணிட்டு இருக்கறவங்க தான் நாம் எல்லாரும்


திறமை இருக்கறவங்க எல்லாரும் இங்கே வாழலாம்


நாம பண்ற விஷயங்கள் பார்த்து ஜனங்களுக்கு நம்ம மேல மதிப்பு வரனும்.பயம் வரக்கூடாது

காலங்கள் மாறிட்டிருக்கு.கஷ்டங்கள் அப்படியே இருக்கு

காந்தி சட்டையைக்கழட்னதுலயும்
அம்பேத்கார் கோட் போட்டதுலயும் அரசியல் இருக்கு # கபாலி மெயின் டயலாக் பை ரஞ்சித்


7 நீ சம்பாதிப்பதில் பாதி உன் உடைக்கே சரி ஆகிடும் போல
ஆகட்டுமே.அது ஒரு அடையாளம் தான்.இருக்கட்டும்


பயப்படறதை எப்பவும் வெளில காட்டிக்காத.நம்ம பயம் எதிரிக்கு தெரிஞ்சா கொண்டாட்டம்#கபாலி

9 நீ செத்துட்டே னு நினைச்சேன்
செத்துதான் போய் இருந்தேன் நீ வந்து என்னைப்பார்க்கும் வரை


10 நண்டுக்கதை தெரியுமில்ல?நம்ம எல்லாரும் படிச்சதுதான்.நம்மை வளரவே விட மாட்டாங்க


11 கெட்டது பண்றவங்களே ரொம்ப தைரியமா இருக்கறப்போ நல்லது பண்ற நாம ஏன் பயப்படனும் ?


12 கோபமா இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதே ( பாலகுமாரன் எழுதிய காதலன் பட டயலாக் கின் சுருக் ரீமேக் )


13 நம்ம ஊர்க்காரங்க எங்கே போனாலும் எதை எடுத்துட்டுப்போறாங்களோ இல்லையோ ஜாதி ,கவுரம் இவற்றை மறக்காம எடுத்துட்டுப்போய்டறாங்க


14 நமக்கு எது தேவையோ அது தான் தர்மம் அது தான் நீதி (சாண்டில்யன் நாவல் ஜல மோகினி வசனம் ரீமேக்)

15 என்னோட வாழ்க்கைல இன்னும் என்னென்ன கொடுமை எல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்கோ தெரில
16 


சி.பி கமெண்ட்- கபாலி - ஏ,பி சென்ட்டர் ரசிகர்களுக்கான படம். விடுதலை,நல்லவனுக்கு நல்லவன் கால ரஜினி கெட்டப் குட் - விகடன் =42,ரேட்டிங் =2.75 / 5


0 comments: