Friday, July 29, 2016

SJசூர்யாவை இன்ட்டர்வ்யூ எடுக்கப்போறேன்

  நீ எவ்வளவு திறமைசாலி என்பது பற்றி இந்த உலகிற்கு கவலை இல்லை. வெற்றிக்கோப்பையை கைப்பற்றி விட்டாயா? என்பது தான் முக்கியம்


==================
நீ வாழ்க்கையில் ஜெயிக்கும் முன் ஒரு பெண்ணின் அன்பை பெற்று விட்டால் அதுவே உனக்கு உந்து சக்தியாக மாறும்================

 பெண்கள் தனக்கு ராமன் மாதிரி நன்னடத்தைக்கணவன் வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் அமைவது எல்லாம் தசரத சக்ரவர்த்தியாகவே இருக்கிறது

=================


மருதாணி  வெச்சுக்கிட்டா மரு போய்டும் என்பது  மூட நம்பிக்கை


==================

5  மருதாணி வைக்கப்படும் விரல்களை விட அம்மியில் அரைத்த விரல்களே முதலில் சிவக்கும்.உழைப்புக்கு மரியாதை.===========6 நெட் தமிழன் கை வசம் பழைய காதலி ,முன்னாள் காதலி ,இந்நாள் காதலி,பள்ளிக்காதலி,கல்லூரிக்காதலி ,கள்ளக்காதலி னு ஏகப்பட்ட.வெரைட்டி வெச்சிருக்கான்==============7 டிபி மேட்சிங் சென்ட்டர்.இங்கு உங்கள் கேரக்டருக்கு ஏற்ற டிபி கூகுளில் இருந்து எடுத்து மேட்ச் செய்து தரப்படும்.புது பிஸ்னெஸ் ஐடியா
================8 எழுத்தாளர்களுக்கு அரட்டை அடிச்சா பிடிக்காதாமே?அது தெரில.ஆனா ரைட்டர் க்கு அரட்டை அடிச்சா (கூட) பிடிக்கும்

=============

9 வெற்றி பெறும் துரோகிக்கு ஆதரவு அளிப்பதை விட தோல்வி அடைவார் எனத்தெரிந்தும் புதிய நண்பருக்கு ஆதரவு அளிப்பது மேல்

=

===============

10 சார்.மாற்று அரசியல் மலராமல் போனதற்கு ஊடகங்கள் தான் காரணமாமே?


தவறான யூகங்கள்.


============

11 சரித்திரம் படைக்கப்பிறந்தவன் தான் ஆண். 'his'tory


பாரம்பரியத்தை போற்ற வேண்டியவர் ,பின்பற்ற வேண்டியவர் தான் பெண் 'her'itage" # ரீமிக்ஸ்


=============

12 யாருக்குக்கீழ் பணி ஆற்றுகிறோமோ அவருக்கு விசுவாசமாக இருப்பதே தமிழர் பண்பு.நாம் தமிழர்

============

13 தனக்கு நல்ல பெயர் வரவேண்டும் என்பதற்காக தன்னை நம்பியவரின் ரகசியத்தை அம்பலப்படுத்துவதும் துரோக வகையறாவே

============

14 நல்ல வேளை.டி ஆர்.ட்விட்டர்ல இல்ல.இருந்தா அண்ணன் தங்கை சென்ட்டிமென்ட் சீன் எல்லாம் பாத்து நொந்திருப்பார் "மலர் டீச்சர்கள்"


==============

15 நெட் தமிழன் முதல் மென்சன் ல தோழி னு கூப்பிடறான்.10 வது மென்சன் ல் கன்னத்தைக்கடிக்கும் போட்டோ ஷேர் பண்றான்.


=============

16 பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியாது.நேரடியா ஐ லவ் யூ ன்னா முறைக்கறாங்க.அக்கா,தங்கச்சின்னு கூப்ட்ரவனை.ஓடிப்போய் கட்டிப்பிடிக்கறாங்க

==========

17 நெட் தமிழன் செம வேகம்.டயல் M FOR கடலை லட்சியத்துல் மீரா,மீனம்மா,மஞ்சுளா ன்னு 3 நிமிசத்தில் 18 மென்சன் போட்டுடறான்

=============

18 அதிகாலையில் எழுந்து உன் பணிகளை செய்யத்தொடங்கிவிட்டால் உன் வெற்றிக்கு அஸ்தமனம் கிடையாதுவெற்றிக்கோட்டையை அடைய முதல்படி அதிகாலையில் துயில் எழல்


================19 நல்ல வேளை.சூர்யா என்பதால் ஒரு அறையோட முடிச்ட்டார்.எங்க தளபதியா இருந்தா தெறி மோட் ல கட்டித்தொங்கப்போட்டிருப்பார்.கொலைக்கேஸ் ஆகி இருக்கும்


============

20 SJசூர்யாவை இன்ட்டர்வ்யூ எடுக்கப்போறேன்.ஏதாவது கேட்க விருப்பம் இருப்பவர் கேட்கலாம்


அஸ்குபுஸ்கு.நாங்க கேட்டா அதை அப்டியே நீங்க கேட்டுக்குவீக


=====================

0 comments: