Thursday, July 28, 2016

பெண்கள் வாழ்க்கையில் விளையாடுவது இந்தக்கணக்கில் வராதில்ல?

விஜய் 60: மீண்டும் அழகிய தமிழ் மகனாக மாறும் விஜய் # 6 லிருந்து 60 வரை ஒரே கெட்டப் போட்டே சமாளிச்ட்டாரே?

=============

2 நடிகர் கலாபவன் மணி உடலில் நஞ்சு கலந்த மது... ஹைதராபாத் ஆய்வில் உறுதி # குடிகாரர்களுக்கு இந்த ஆபத்து வேற இலவச இணைப்பா இருக்கு போல

===============

3 நாட்டில் 5 கோடி வாகன ஓட்டிகள் போலி லைசென்ஸ் வைத்துள்ளனர்: மத்திய அரசு # இதுக்கு நாம வெட்கப்படனும் சென்றாயன்.பறிமுதல் பண்ணுங்க

=============

4 16 ஆண்டுக்கு பிறகு நிறைவேறிய நாராயணசாமியின் கனவு # அதுலயும் தன் அபிமான 15 செண்ட்டிமெண்ட் ஒர்க் அவுட்

===============

5


 ஜெ திருந்தவில்லை. தமிழ் நாட்டை மீண்டும் கொள்ளை அடிப்பார் -ராம்தாஸ் # நல்லாட்சி செய்து மக்கள் மனதை கொள்ளை அடிப்பார்னு நம்பவும்

===============


6 5ம் வகுப்பு வரை தேர்வே நடத்தக் கூடாது... மத்திய அரசுக்குப் பரிந்துரை # எல்லா அரசியல்வாதியும் இனி 5 வது வரை படிச்சுடுவாங்க இல்ல?

===========

7


தேமுதிக நிர்வாகிகளுடன் பேசி வருகிறேன்.. குண்டு போடும் சந்திரகுமார் # எட்டப்பன் வேலை பண்ணிட்டு இருக்கேன்னு கெட்டப்பா சொல்றாரு

============

8 விஜய், அஜீத் கூட தராத இடத்தைக் கொடுத்த சிம்பு.. நெகிழ்ச்சியில் சூரி! # மன்மதன் ல சந்தானத்துக்கு ஜாக்பாட் அடிச்சதும் இவ்ராலதான்,நல்ல ராசி

=============


9 பாயிண்ட் ஆப் சேல்’... ரேஷன் கடை முறைகேடுகளைத் தடுக்க அதி நவீன கருவி... ஜூலை 1 முதல்! #பாயிண்ட் ஆஃப் கோல்மால் அதுலயும் கண்டுபிடிப்பான் தமிழன்


============

10 கான்பூர்- ஐபிஎல் சூதாட்டத்தில் மனைவியை இழந்த குடிகார கணவர்! # திட்டம் போட்டு கழட்டி விட்டுட்டாப்டி

=================

11 காங். ஆட்சியில் ஊழல் நடந்ததை யாரும் மறுக்க முடியாது.. ஊழலை வேரோடு பிடுங்குவோம்: மோடி சபதம் # அந்த வேரைத்தேடித்தான் ஒவ்வொரு நாடா போய்ட்டிருக்கார் போல

============

12 அம்மாவின் ஆணைக்கிணங்க... மக்களைச் சந்தித்து நன்றி கூறிய மதுரை வடக்கு அதிமுக எம்.எல்.ஏ.# நன்றி சொல்றது கூட சுயபுத்தி இல்லை.மத்தவங்க சொல்லி தான் கேட்பாரு போல

===============

13 பிரதமர் மோடியின் 56-இன்ச் மார்பில் ஒரு இன்ச் கூட குறையவில்லை: ராஜ்நாத் சிங் பேச்சு #இது ஒரு பெருமையா? விவசாயிகள் கஷ்டம் கூட ஒரு இஞ்ச் கூட  குறையல

===============

14

ஊழலை ஒழிக்க சட்டம்: பாமக வலியுறுத்தல் # அடி மடிலயே கை வெச்சா எப்படி? ஊழலை ஒழிச்சுட்டா எப்டி அரசியல்வாதிக, அதிகாரிக சம்பாதிப்பாங்க?=================

15 

 மழை வேண்டி அறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரை: ஆன்மிகக் குழுவினர் அரக்கோணம் வருகை # பாதயாத்திரையைக்கைவிடுங்க, மரக்கன்றுகளை நடுங்க==================


16 

தனியார் பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு:இன்று முதல் அமல் # நடப்பது இரட்டை இலை ஆட்சி, எனவே 2 ரூபா உயர்வா?==================

17  
======================


18 

ஓராண்டில் புகைப்பழக்கத்தால் சுமார் 4 லட்சம்பேர் உயிரிழப்பு: சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் # புகை  மிகை  நாடாக ஆகாம பார்த்துக்கறது நம்ம கைகளில்

=================

19 

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை # பள்ளிக்கு “செல்”லுடன் செல்LAW தீர்================


20 
=====================

0 comments: