Monday, July 18, 2016

படித்த தம்பதிகளே அதிக விவகாரத்து... உச்ச நீதிமன்றம் அளிக்கும் ஷாக் ரிப்போர்ட்

ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டவர்கள் ஓட்டு போடலையே: தமிழிசை # நெட் டை நம்பாதீர்.துட்டை நம்புவீர்!கைல காசு வாய்ல தோசை

=========

2 வெற்றி கிடைக்காத போதும், வாக்கு வங்கி குறையவில்லை: அமித் ஷா # கிடைச்சது சிங்கிள் டிஜிட்.மார்க்்.அதுக்கு ஏன் டபுள் காட் ல டான்ஸ்?

==========


3 தமிழக சட்டசபையில் 170 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்: 3வது இடத்தில் ஜெ.,- கருணாநிதி நம்பர் 4 # நல்லா செக் பண்ணிப்பாருங்க.4 தான் 1 .

3 தான் 2

=============

4 கருணாநிதி விருப்பபடி சட்டசபையில் தனி இருக்கை சக்கர நாற்காலி செய்ய ஜெ உத்தரவு -செய்தி. # மழை வரப்போகுது இன்னைக்கு

============

5 எமது நோக்கம் உன்னதமானது- பயணம் தொய்வின்றி தொடரும்: தொல். திருமாவளவன் # நோக்கம் உன்னதமானதுதான்.ஆனால் கனவு சின்னாபின்னம் ஆனது

===============

6 தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது-விஜயகாந்த்:  # அன்புமணியிடம் உள்ள திட்டமிடல் , பொறுமை இருந்திருந்தா நீங்க ஜெயிச்சிருக்கலாம்


===============

சென்னையில், அதிக இடங்களில், தி.மு.க., வெற்றி பெற்றதற்கு, இந்த ஆட்சியின் அலங்கோலங்கள் தான் காரணம். -ஸ்டாலின்:  # கொங்கு மண்டலத்துல நமக்கு சங்கு ஊதப்பட்டதற்கு நம்ம முந்தைய ஆட்சிதான் காரணமோ?


=================================================

10 தேமுதிக அங்கீகாரம் ரத்து- பறிபோனது முரசு சின்னம்: # மேடைப்பேச்சில் அதீத காரம், அதனால்தான் கிடைக்கவில்லை அங்கீகாரம், ஆட்சி அதிகாரம்

=============

11

தமிழகத்தில் 15 வயதுக்குள் திருமணமான பெண்கள் 65,200 பேர் # 35 வயசு ஆகியும் பொண்ணே சிக்காத பயலுக 6 லட்சம் பேர் இருப்பாங்க=================

12 

படித்த தம்பதிகளே அதிக விவகாரத்து... உச்ச நீதிமன்றம் அளிக்கும் ஷாக் ரிப்போர்ட் # க்ளாஸ் மேட், ரூம் மேட், ஸ்கூல் மேட், காலேஜ் மேட்னு ஏகப்பட்ட பழக்கம் இருக்கும்============

13 

விஜயகாந்துடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு  # அய்யய்யோ அடி விழுது அடி விழுது-இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்================


14  மத்திய மின் துறை அமைச்சர் பியூஸ் கோயல் டெல்லி செய்தியாளர் சந்திப்பில் மின் வெட்டு # பியூஸுக்கே ஃபியூஸ் பிடுங்கிய பீஸ் யார்யா அது? 


================

15  தேர்தல் தோல்விக்குப் பிறகு, மீண்டும் நடிப்புக்குத் திரும்பினார் விஜய்காந்த்!  # தமிழன் என்று சொல்,முயற்சியைக்கைவிடாது அடுத்தமுறை வெல்


===================

16 விஜயகாந்த், திருமாவளவன் , அன்புமணி தோல்விக்குப் பிறகாவது, பாடம் கற்றுக் கொள்வர் என, நம்புகிறோம்-
இளங்கோவன்: # லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூட\ண்ட் எல்லாம் லா பேசுது 


===============

17 மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் நடிப்போருக்கு, 50 லட்சம் ரூ அபராதம், 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.-ராம்விலாஸ் பஸ்வான்: # அமிர்தா சித்திக்குதான் முத சுத்தி


===================


18 நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்.ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார் என பேட்டி  # என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வர மாட்டாங்கனு ஒரு மானஸ்தர் நேத்துதான் சொன்னாரு

==================


19  அ.தி.மு.க., -- தி.மு.க., இடையில், 1.1 % தான் ஓட்டு வித்தியாசம். - கருணாநிதி: # தலைவரே! பாஸ் மார்க் 35ன்னா 34 எடுத்தாலும் ஃபெயில் தான் 1 மார்க் எடுத்தாலும் ஃபெயில் தான்


=================

20  

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகப் பணியாற்றுவோம் -  கருணாநிதி # ஆக்கம்= செல்வம். செல்வம் கொழிக்கும்படி நல்லா செய்வாங்க போல


====================


0 comments: